நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் ஆற்றல் மிக்கவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே- ஈ.பி.டி.பினின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜீவன்

IMG_20170831_111142 Thursday, August 31st, 2017

 

அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு, நிலையான தீர்வை வென்றெடுத்துத் தரும் ஆற்றலும் அக்கறையும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடமே உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற வட்டார செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

நெடுந்துயராக தொடர்ந்துவரும் தமிழ் மக்களது பிரச்சினைகளை  தீர்த்துவைப்பதற்கான சந்தர்ப்பங்கள் பல கடந்த காலத்தில் இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கு கிடைத்திருந்தது. ஆனால் அவர்கள் தமது சுயநலன்களுக்காக அவற்றை தட்டிக்கழித்துவிட்டு மக்களின் அவலங்களில் தமது நலன்களை மேம்டுத்திக்கொண்டிருந்தனர்.  இன்று தமிழ் மக்களது தீர்வுக்காக உழைப்பவர்களாக தங்களைக்காட்டி இன்றும் கடைக்கவுள்ள தீர்வுகளை தடுத்துவருகின்றனர்.

இந்நிலையை தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்து தமிழ் மக்களின் வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் தலைவராக மக்களுடன் இருந்து மக்களுக்காக வாழ்ந்துகொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

இன்று எமது கட்சியால் அமைக்கப்பட்டுள்ள இந்த வட்டார ரீதியான கட்டமைப்பானது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்ததொன்றல்ல. அது தமிழ் மக்களின் எதிர்காலம் சார்ந்தது. கட்சியை பலப்படுத்துவதானது தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வெற்றிகொள்வதற்கான ஒரு முதலீடாகவே பார்க்கப்படவேண்டும்.

அந்த முதலீட்டை உருவாக்கிக்கொள்ளும் ஒரு கட்டமைப்பே இந்த வட்டார ரீதியாபக கட்டமைப்பு. இதை உணர்ந்து எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதையிலும் வழிநடத்தலிலும் பயணித்து  எமது இலக்கை வெற்றிகொள்வோம் என்றும் தெரிவித்தார்.


மக்களது தேவைகளை வென்றெடுத்து கொடுப்பதே எமது இலக்கு - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் – வலி கிழக்கு மக்கள் ஆதங்கம்!
வறிய மக்களின் வாழ்வியல் விடிவுக்காக நாம் அயராது பாடுபடுவோம்- வி.கே.ஜெகன்
தோழர் தேவா வைரவிழா வெற்றிக்கிண்ணம் ஆரம்பம்!
வலி தெற்கு பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!