தேர்தல்கள் வரும் போகும் ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல – தோழர் ஜீவன்!

Thursday, November 30th, 2017

தேர்தல்கள் வரும் போகும். ஆனால் நாம் அவ்வாறு மக்களிடம் வந்துபோபவர்கள் அல்ல. என்றுமே மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பணியாற்றும் மக்களின் சேவகர்கள் நாம் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அனலைதீவு பகுதி மக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மக்களின் வலிகளையும் பாரச் சுமைகளையும் வைத்து நாம் ஒருபோதும் பேரம் பேசும் அரசியல் செய்தது கிடையாது. மக்களும் இன்று தெளிவடைந்துவிட்டனர் விரைவில் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

ஆனால் தென்னிலங்கை அரசின் இழுபறிக்குள் சிக்குண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமோ நடைபெறாதோ என்ற தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் இலங்கையிலுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு முதற்கட்டமாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் நாம் தேர்தல் எப்போது வருமானாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்  – என்றார்.

இதன்போது குறித்த பகுதியின் மக்களது வாழ்வாதார நிலைமைகள், தேர்தல் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் கட்சியின் அரசியல்  செயற்பாடுகள்  தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது கட்சியின்  ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் ஜெயகாந்தன், கட்சி  முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.


மட்டு.சந்திவெளி பகுதி மக்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!
எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் - யாழ் மாநகர முன்னாள் மேயர் திர...
ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் - உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜயேந்திரன்...
மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்...
வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!