திருமலை குச்சவெளியில் அதிநவீன வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகவில் தோழர் ஸ்ராலின்!
Saturday, February 22nd, 2020திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடனான வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (22)நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் , தோட்ட உட்கட்டமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், சிறுகைத்தொழில் அவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
குச்சவெளி பிரதேச செயலாளர் திரு. தணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்கள், வீட்டுத்திட்டத்தை நிர்மாணிக்கும் யப்கா டெவலப்பர் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் திருமலை மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் வீட்டுத்திட்டப் பயனாளிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்
Related posts:
சட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுத்தல் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படுகிறது!
நாட்டில் தொழில் செய்யும் வயதை உடையோர் தொகை ஒரு கோடியே 57 இலட்சம்!
வடக்கின் கல்வியை முன்னேற்ற நடவடிக்கை - பிரதமர்!
|
|