தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் அரசியல் தீர்வுகளையும் வெற்றிகொள்வ தற்கான கட்டமைப்பே வட்டார கட்டமை ப்பு – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

image-0-02-06-d88f6f0402f98fc042a8ed9b5b9c6a26f321451b1d84a0a68fff2e821a955828-V Thursday, August 31st, 2017

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்  இன்று அமைக்கப்பட்டுள்ள இந்த வட்டார ரீதியான கட்டமைப்பானது கட்சியின் எதிர்கால நலன் சார்ந்ததாக அமைவதை விட. தமிழ் மக்களின் எதிர்காலம் வாழ்வியலையும் அரசியல் உரிமையையும் வெற்றிகொள்வதற்கான  ஒரு பரிணாமம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கெஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற வட்டார செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

தமிழ் மக்களது அரசியல் பயணத்தில் உரிமைகளை வெற்றிகொண்டுதருவதாக கூறி பல தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். இவர்கள் எல்லோரும் தத்தமது சுயநலன் சார்ந்தவர்களாகவே இருந்துவிட்டுச் சென்றுள்ளனர்.இருந்தும் வருகின்றனர்.

ஆனால் அத்தகைய சுயநலத் தலைவர்கள் வாழும் எமது தேசத்தில் மக்கள் நலனையும் அவர்கள் நலன்சார்ந்த தேவைகளையும் முன்னிறுத்தி அரசியல் உரிமையுடன் அபிவிருத்தியிலும்  தமிழ் மக்களை உன்னத நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று இன்று வரை மக்களுடன் மக்களாக இருந்து அயராது உழைத்துவரகிறார் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு மகத்தான தலைவர்.

மக்கள் மீது அக்கறையும் அவர்களது உரிமை வெற்றிகொள்ளப்பட வேண்டும் என்ற ஆற்றலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருப்பதனால் முழுமையான அரசியல் பலம் இவரிடம் கிடைக்கப்பெற்றால் தமது அரசியல் பிழைப்ப கனவாகிவிடும் என்ற அச்சம் காரணமாக இர தமிழ் அரசியல் தரப்பினரால் திட்டமிடப்பட்ட வகையில் தமிழ் மக்களது அரசியல்ரீதியான பலம் செல்வது தடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலை தற்போது மக்கள் மத்தியில் வெளிச்சப்பட்டுள்ளது.

தமிழ் மக்களது உரிமைக்கா உழைக்கம் எமது செயலாளர் நாயகத்தின் கரங்கள்  பலப்படும்போதுதான் தமிழ் மக்களது வாழ்வியலிலும் ஒரு சிறந்த மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

அதற்கான வழிகாட்டிகளாகவும் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் செயற்படுவதற்காகவே இன்று இந்த வட்டார ரீதியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெற்றிகண்டுள்ளது. இந்த கட்டமைப்பினூடாக எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் பயணித்து தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை வெற்றிகொள்ள அயராது உழைப்போம் என்றார்.


ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
மட்டக்களப்பில் தமிழர் பண்பாட்டின் பொங்கல் விழா 2017 - ஈ.பி.டி.பியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெய...
கொக்குவில் கேணியடி பகுதி மக்களது பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி  ஆராய்வு!
இரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்
மக்களின் நிலங்களை அபகரிக்க நல்லா ட்சி அரசுக்கு அனுசரணை வழங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஈ.பி....
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!