தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டார் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

172882_3 Saturday, October 7th, 2017

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை இன்றையதினம்(08) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் நேரில் சென்று பார்வையிட்டு போராட்டத்தை மேற்கொள்ளும் கைதிகளுடன் கலந்துரரையாடியுள்ளார்.

தமது வழக்குகளை தமிழ் பேசும் சட்டத்தரணிகள் உள்ள வடக்கு பகுதி நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரியும் தமக்கு விடுதலை வழங்கப்படவேண்டும் எனக் கோரியும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சாகும்வரையிலான உண்ணாவிதரத்தை மேற்கொண்டுவருகின்றனர்

இந்நிலையில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் சிலர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று இன்றையதினம் குறித்த கைதிளின் நிலைமை தொடர்பில் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களது பாதுகாப்பையும் விடுதலை தொடர்பாகவும் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என வை. தவநாதன் நேற்று(07) வடக்கு மாகாணசபை அமர்வில் வலியுறுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்வரும் திங்கட்கிழமை காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற...
நாவற்குழி பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த பிரச்சினைக்கு தீர்வு!  
மக்களின் எழுச்சியில் வெற்றியைப் படைப்போம் - மானிப்பாயில் ஈ.பி.டி.பி உறுதிமொழி!
அரியாலை பகுதி வறிய குடும்ப ங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயககட்சியினால்கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!