சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி.டி.பி விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை – பேச்சாளர் ரங்கள் தெரிவிப்பு!

கடற்தொழில் அமைச்சரின் விசேட பணிப்புரையின் கீழ் வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் அவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்
வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் தலைவர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கடற் படையினரால் சுருக்கு வேலை தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படும் போது தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஈபிடிபி யினர் விடுதலை செய்வதாக குற்றச்சாட்டு ஒன்றினை வைத்திருந்தார் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
000
Related posts:
|
|