உரிமையை வென்றெடுக்க அணிதிரள்வோம் – வட்டாரச் செயலாளர் ஒன்றுகூடலில் தேசிய அமைப்பாளர் பசபதி சீவரத்தினம்!

நீண்டகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முழுமையாக வெற்றிகொள்ள வேண்டுமானால் மக்களுக்காக அயராது உழைத்துவரும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பின்னால் நாம் அனைவரும் அணிதிரளவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற வட்டார செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
நீடித்துவரும் எமது அரசியல் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காணவேண்டும் என்பதே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாக உள்ளது. கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி தமிழ் மக்களை நிரந்தரமான ஒரு சமாதான சூழலில் வாழவைக்கவேண்டும் என்பதற்காகவே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அயராது உழைத்துவருகிறார்.
கடந்தகால கசப்பான உண்மைகளை பாடமாகக்கொண்டு எதிர்கால விடியலுக்கான பாதையை தமிழ் மக்கள் வெற்றிகொள்வதற்கு தயாராகவேண்டும். அதற்காக எமது தலைவர் உறுதியுடன் உழைப்பதற்கு உங்களது ஆதரவுப்பலத்தை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினது கரங்களுக்கு கொடுத்து வலுச்சேர்ப்பது காலத்தின் கட்டாயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|