ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்துவைப்பு!

Thursday, February 1st, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பச்சிலைபள்ளி பிரதேசத்திற்கான மத்திய தேர்தல் பிரச்சார அலுவலகம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை தவநாதன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்றுகாலை கறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தவநாதன் கடந்த காலங்களில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசகளிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த வை தவநாதன் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சியில் ஏறதள 3000km நீளமான வீதிகள் புனரமைப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருகின்றது இதனை பிரதேச சபைகளால் செயற்படுத்த முடியாது எனவே அரசுடன் இணைந்து விசேட நீதி ஈட்டன்களை பெற்று அதனூடாக பல அபிவிருத்திகளை குறிப்பாக மாயணங்களை அமைதி வலையமாக மாற்றுதல் சிறந்த பொறிமுறைக்கு உட்பட்ட  கழிவகற்றல் வசதிகளை ஏற்படுத்தல் உட்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

அதற்கான நாங்கள் மக்களிடம் ஆணை கேட்டது நிற்கின்றோம். மக்கள் எமக்கு வழங்கும் ஆணை மக்களின் அபிவிருத்திக்கு பிரயோகிக்கபடும் எனவும் தவநாதன் மேலும் தெரிவித்தார்

 

Related posts: