இலங்கையின் நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வு!

Sunday, February 28th, 2021

அண்மைய நாள்களில் இலங்கையின் சில பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள நிபுணர்களுடன் தொலை காணொளி ஊடாக இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – திகன மற்றும் பல்லேகல பகுதிகளிலும் லுணுகல – ஹெக்கிரிய பகுதிகளிலும் கடந்த நாட்களில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சர்வதேச நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: