அரியாலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
Monday, August 12th, 2019முள்ளி அரியாலை பகுதியில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களது முயற்சியால் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மிகவறிய நிலையில் வாழ்ந்துவரும் குறித்த குடும்பத்தின் குடிசை மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தமையால் தமது நிலைமையை அவதானத்தில் கொண்டு உதவிகள் வழங்குமாறு கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த குடும்பத்தினர் கோரியிருந்தனர்.
இதனடிப்படையில் கனடாவில் வாழ்ந்துவரும் புவிராஜ் அவர்களின் நிதி உதவியில் கூரைத்தகடுகள் (சீற்) கொள்வனவு செய்யப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் கட்சியின் நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !
சைப்ரஸிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் பீப்பா மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!
|
|