அமரர் மகேந்திரநாதன் சுமதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!

IMG_20170901_141606 Friday, September 1st, 2017

காலஞ்சென்ற அமரர் மகேந்திரநாதன் சுமதியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முன்பதாக சபாபதிப்பிள்ளை வீதி சுன்னாகம் தெற்கிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி  இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்

இந்நிகழ்வுகளில் செயலாளர் நாயகத்துடன் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்றையதினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்திலிரந்து தவறி விழ்ந்த நிலையில் பலியான அமரர் அருள்நேசனின் பூதவுடலுக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்..

யாழ்ப்பாணம் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற  செயலாளர் நாயகம் அமரர் அருள்நேசனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஆன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். அமரர் அருள்நேசனின் யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற தமிழ் ஆசிரியரான மீரா அவர்களின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் செயலாளர் நாயகத்துடன் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது


அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
யாழ்ப்பாணம் பிரதேசத்திற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு  ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவ...
ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது வட்டார செயற்குழுக்களே - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செய...
மக்களின் நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தோழர் ஜீவன்
மக்களின் தேவைப்பாடுகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டும் - அம்பலம் இரவீந்திரதாசன்!