அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 19th, 2020

அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

அமரர் நடராசா பூமணி அவர்கள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இந்நிலையில் உரும்பிராயிலுள்ள அன்னாரின் இல்லத்திலல் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், உளிட்ட பல முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற அமரர் நடராசா பூமணி அம்மையார் தமிழர் சமூக ஜனநாயாக கட்சியின் தலைவர் சுகு தோழரின் மனைவியார் அக்கா தோழர் என்று அழைக்கப்படும் ஞானசக்தி ஸ்ரீதரன் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: