அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிரந்திய முக்கியஸ்தர்கள் அஞ்சலிமரியாதை!

Thursday, May 21st, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் ஜேர்மன் பிராந்திய செயற்பாட்டாளரும் அனைவராலும் அமைச்சர் என அன்பாக அழைக்கப்படும் அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு கட்சியின் ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர்களால் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது.

ஜேர்மன் “நொய்ஸ்” பகுதியில் வசித்துவந்த அமரர் செல்லப்பா உதயணனின் வயது மூப்பின் காரணமாக கடந்த 19 ஆம் திகதி தனது 73 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடிருந்த பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: