அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, September 22nd, 2017

காலஞ்சென்ற அமரர் கதிரவேலு மார்க்கண்டுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ட மாவட்ட முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முன்பதாக அங்களப்பாய், இணுவிலில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி  இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்

இந்நிகழ்வுகளில் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஜீவா, கட்சியின் சுன்னாகம் பிரதேச நிர்வாக செயலாளர் வலண்டயன்,  கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிலுருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

காலஞ்சென்ற அமரர் கதிரவேலு மார்க்கண்டு சுன்னாகம் பிரதேச வட்டாரக் குழு உறுப்பினரான இராசகுமாரியின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இரண்டு வாரத்தில் 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் பழமரக்கன்ற...