அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

10.-1-300x229 Wednesday, September 6th, 2017

பல வர்த்தக்கர்கள் உள்@ர் அரிசி வகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளைக் கலப்படம்  செய்து, விற்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின் அதிகரித்துள்ள விலைகள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே  எமது நாட்டு மக்களின் அத்தியவசியமான உணவுப் பொருளான அரிசிக்கு குறிப்பிட்டதொரு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, அதனை தொடர்ந்து அமுல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்த்தில் கேள்வி எழுப்பினார்.

அரிசியின் விலை கட்டுப்பாடற்று இருப்பதால் அவ்விடயத்தில் தீர்வொன்றை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான கேள்விகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று(06.09.2017) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில், கைத்தொழில் அபிவிருத்தி, வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் கௌரவ ரிசாட் பதூர்தீனிடம் கேள்விகளை முன்வைத்து உரையாற்றியபோது,

உள்@ர் மற்றும் இறக்குமதி அரிசி வகைகளுக்கு இதுகால வரையிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அண்மையில் நீக்கியதையடுத்து, நாட்டில் வடக்கு மாகாணம் உட்பட பல்வேறு பகுதிகளில் அரிசி வகைகளின் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

பல வர்த்தக்கர்கள் உள்@ர் அரிசி வகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளைக் கலப்படம்  செய்து, விற்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின் அதிகரித்துள்ள விலைகள் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக கட்டுப்பாட்டு விலைகளில் அரிசி விற்பனை செய்து வரப்பட்டுள்ள நிலையில், தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் செயலிழந்து, அதிகமான கிளைகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் வர்த்தக நிலையங்களில் அதிக விலை கொடுத்தே அரிசியை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக எமது பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எமது நாட்டு மக்களின் அத்தியவசியமான உணவுப் பொருளான அரிசிக்கு குறிப்பிட்டதொரு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, அதனை தொடர்ந்து அமுல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? என்றும், பொது மக்கள் நியாயமான விலையில் அரிசியைப் கொள்வனவு செய்து கொள்வதற்கான வழிவகைகள் யாது? என்றும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களின் மூலமாக விநியோகிக்கப்படுகின்ற அரிசி வகைகளுக்கு என நிர்ணயிக்கப்பட்ட ஏதேனும் விலைகள் உள்ளனவா? என்றும் கேள்விகளை முன்வைத்ததுடன், தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் அவர்கள்,

வடக்கு மாகாணத்தில் பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களை நவீனப்படுத்தி, பலப்படுத்தும் நோக்கில் தங்களது அமைச்சிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? என்றும், இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசியை, உள்@ர் அரிசி ஆலைகளில், உள்@ர் அரிசி என்ற பெயரில் பொதி செய்யப்பட்டு, சந்தைக்கு விடப்படுவதாக பொது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தில் உண்மையுள்ளதா? என்றும், அரிசியில் கலப்படும் செய்கின்ற வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை உரிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றதா? என்றும் கேள்வி எழுப்பியதுடன், தனது கேள்விகளுக்கான பதிலையும், அதற்காக அமைச்சரால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளையும் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்தார்.


ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை  அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவாகு - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளினது வாழ்வியல் மீட்சிக்கு களம் அமைக்கப்பட வேண்டும் -நாடாளுமன்றி...
மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...
வடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட...
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!