முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி. ஹரிசன் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டி, நல்லதண்ணித் தொடுவாய் வரையிலான சுமார் 73 கிலோ மீற்றர் தூரமான கடற்பகுதியில் 33 கிராமிய கடற்றொழில் அமைப்புகளைச் சேர்ந்த 5060ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வசதியாக அப்பகுதியில் வெளிச்ச வீடொன்று இல்லாத காரணத்தால், கடலில் நீண்ட தூரம் சென்று தொழிலில் ஈடுபட இயலாத நிலையும், தொழில் முடித்து கரையேறுவதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையும், திசை மாறிச் செல்கின்ற நிலையும் அம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வசதி கொண்ட ஒரு சில கடற்றொழிலாளர்கள் புPளு கருவியின் உதவியுடன் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் அந்த வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி கடற்றொழிலாளர்களது வசதி கருதி 1866 ஆம் ஆண்டு 66 அடி உயரத்தில் ஒரு வெளிச்ச வீடு அமைக்கப்பட்டிருந்து, கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது அது அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி வெளிச்ச வீடு முன்னர் வெளிச்ச வீடு அமையப்பெற்றிருந்த முல்லைத்தீவு, மணல்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டால், கடல் தொழிலில் ஈடுபட வசதியாக இருப்பதுடன், மேலும் தொழிலை முன்னேற்றிக் கொள்ளவும் இயலுமென மேற்படி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? அல்லது அதில் ஏதும் தடைகள் உண்டா? என்ற மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் அமைச்சர் ஹரிசன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு வினைத்திறன் கொண்ட நிர்வாகக் கட்டமைப்புபை விரைவாக ஏற...

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...