பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Thursday, January 10th, 2019

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார  அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்குரிய காரணி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உரிய நேரத்தில் செயற்படாமை தொடர்பாக அப்பிரதேச மக்களினால் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, இரணைமடுக் குளத்தின் நீர் முகாமைத்துவம் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாமல் அப்பிரதேச சில அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு இணங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட்டதன் விளைவாகவே பெருமளவிலான நீர் குறுகிய நேரத்தில் அதி வேகத்துடன் வான்பாயச் செய்யவேண்டியிருந்துள்ளது என்று தெரியவருகின்றது.

அத்துடன் ஓர் அனர்த்த சூழல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் 21 ஆம் திகதி மாலையே தென்பட்டிருந்;தும் பொறுப்பான உயரதிகாரிகள் எவரும்; அன்றிரவு அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை என்றும், மேலும் எந்நேரத்திலும் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்ற முன்றிவித்தலை வான்பாயக்கூடிய பிரதேசத்தில் வாழும்; மக்களுக்கு அறிவிக்கும்படி சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளுக்கு தகவல் வழங்க தவறியமையும் ஓரு நிர்வாக அசமந்தப்போக்காக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ,ரணைமடு குளத்தின் நீர் முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாது குளத்தின் நீர்மட்டம் அதன் உச்ச எல்லையான 36 அடியைத் தாண்டி ஏறத்தாள 4 அடி சென்ற பின் வான்கதவுகள் அவசர அவசரமாக உச்ச நிலையிலிருந்து 2 அடிக்கு கீழ், அதாவது ஏறத்தாள 6 அடி ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதன் விளைவே பெருமளவான நீர்; குறுகிய நேரத்;தில் அதிக வேகத்துடன் வான் பாய்ந்துள்ளது என்பதை கௌரவ அமைச்சர் அவர்கள் அறிவாரா?

அனர்த்தம் ஒன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் 21 ஆம் திகதி மாலையே  தென்பட்டிருந்தும் இரணைமடுக் குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான உயரதிகாரிகள் எவரும் 21 ஆம் திகதி மாலையில் இருந்து அனர்த்தம் நடந்து முடியும்வரை அங்கு பிரசன்னமாய் ,ருக்கவில்லை என்பதை கௌரவ அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

21 ஆம் திகதி மாலையே அனர்த்தம் எற்படக் கூடிய சாத்தியங்கள் இருந்தும் குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் பிரதேச செயலாளர், அரச அதிபர், மற்றும்; அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு இரணைமடுக் குளமும் அதற்கு நீர் வழங்கும் ஏனைய குளங்களும்; நிரம்பியுள்ள நிலையில் மழை தொடருமாக ,ருந்தால் வான்கதவுகள் திறக்க வேண்டியிருக்கும் என்ற தகவலை வழங்கவில்லை என்பதனை கௌரவ அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

கௌரவ அமைச்சர் 28 டிசம்பர் அன்று கிளிநொச்சியில் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட விடயங்களை ஆராய்வதற்கும், வருங்காலங்களில் அதிகாரிகளின் தவறினால் இவ்வாறான அனர்த்தம் ஏற்படாமல் ,ருப்பதற்கும் ஏதுவாக ,து தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைப்பாரா?

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா?

அதுமட்டுமல்லாது குறித்த அனர்த்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 12133 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2613 குடும்பங்களுக்கே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் 10318 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2380 குடும்பங்களுக்கே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த ஏனைய 17458 குடும்பங்களுக்கான நிவாரண உதவித் திட்டங்கள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அந்தவகையில் அந்த குடும்பங்களுக்கான உதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்

குளத்திற்கான கீழ்வாய்க்கால் புனரமைப்பின் போது உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் ஊழல் மோசடிகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. அத்துடன் அதற்கான சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனவே இந்த மோசடிகள் தொடர்பிலும் விஷேட விசாரணைக்குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேற்குறித்த எனது கேள்விகளுக்கான பதில்களையும் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - நாடா...
வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜன...

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட...
 அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...