நிலையியற் கட்டளை 23/2 இன் கீழ் 2016.05.20 ஆந் திகதி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம்.

Saturday, May 21st, 2016

நேற்றுமுதினம் நாடாளுமன்றத்தில் நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ் சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியான எமது வடபகுதி இருப்பதால் குறித்த பகுதிகளை மக்களது தொழில் மற்றும் அபிவிருத்தியில் அதிகளவு வகிபங்கு செலத்த வேண்டும் உள்ளிட்ட  சில கோரிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங் அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டு அதற்கான   பதில்களை இன்றையதினம் பிரதமர் வழங்கியுள்ளார். அவற்றை எமது இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாக பதிவிடுக்ன்றோம்.

நிலையான கட்டளைகள் 23/2 இன் கீழ் கேட்கப்படும் கேள்விகள் 2016.05.20

கௌரவ பாராளுமன்ற அங்கத்தவர் திரு டக்ளஸ் தேவாநந்தா அவர்களினால் கௌரவ பிரதமர்; தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சர் அவர்களிடம் கேட்பதற்காக

பின்னணி

அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழும் கௌரவ பிரதமர் றனில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழும் எமது அரசாங்கம்; 60 மாதங்களில்  புதிய நாடொன்றை,

 1. பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
 2. மோசடிகளை முழுமையாக இல்லாதொழித்தல்
 3. சுதந்திரத்தை உறுதி செய்தல்
 4. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக முதலீடு செய்தல்
 5. கல்வியை மேம்படுத்தல்

ஆகிய ஐவகை  நடவடிக்கைகள் மூலம் கட்டி எழுப்பி வருகின்றது.

அதன் கீழ், இலங்கைச் சந்தையினுள் போட்டி நிலையை அதிகரிப்பதற்கான அறிவை அடிப்படையாகக் கொண்ட மனித நேயமான பொருளாதாரமொன்றைக் கட்டி எழுப்புவதற்கான பொருளாதார கொள்கையொன்று  அறிமுகஞ் செய்து செயற்படுத்தப் படுகின்றது.

அது போன்றே பல்வேறு துறைகளைக் கொண்ட பாரியளவான அபிவிருத்தி வலயங்களை உருவாக்குதலும் குடிமக்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியல் நிருவாக முறை வலுப்படுத்துவதும் நடைபெறுகின்றது.

அதன்படி, மேற்படி தேசிய கொள்கைகளைச் செயற்படுத்துவதனால் கிடைக்கும்  பலர்பலன்கள்; நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட முழு நாட்டு மக்களுக்கும்; நியாயமான முறையில் பகிரப்படக் கூடியவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி பொருளாதார சட்டகத்தின்; மூலம் வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் சகல இளைஞர்களுக்கும் பொருந்தும் பொருளாதார கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தல் அரசின் நோக்கமாகும்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவை சபை, தேசிய இளைஞர் சேனை, சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு ஆகியன ஒன்று  சேர்ந்து இதற்கான பல நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன.

வினா

 • பத்து இலட்சம் தொழில்கள் செயற்றிட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்காக ஒதுக்கப்பட்ட சதவிதம் எவ்வளவு?
 • க.பொ.த (உயர் தரப்) பரிட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு வாய்ப்புக் கிடைக்காத, தற்போது தொழிலற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக யாதாயினும் நிகழ்ச்சித்திட்டங்கள்; தங்கள் வசம் உள்ளதா எனக் குறிப்பிட முடியுமா?
 • யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் யாதாயினும் உள்ளனவா என்பது பற்றி குறிப்பிட முடியுமா?
 • இப்பிரதேசத்திலுள்;ள வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, அவற்றை வளர்ப்பதற்கான திட்டமொன்று உள்ளதா எனக் குறிப்பிட முடியுமா?
 •  இப்பிரதேசங்களில் தேசிய இளைஞர் சேவை சபையின் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்து, அதன் மூலம் இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வளர்ப்பதற்கும், அவர்களின் பங்களிப்பைச் சமூக சேவைகளில் ஈடுபடுத்துவதற்கும் யாதாயினும் திட்டமொன்று உள்ளதா என்பதைக் குறிப்பிட முடியுமா?

உத்தேச பத்து இலட்சம் தொழில்கள் நிகழ்ச்சித்திட்டத்தினால் அரச துறையையும் தனியார் துறையையும் இணைத்துக் கொண்டு புதிய முதலீட்டு வாய்ப்புக்களின் மூலம் அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அரசின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களாக உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தல் போன்றே குடும்ப அலகுகளின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப அவர்களது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்தலும்  இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கு அபிவிருத்தித் தேவைகளை (உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட) மேலும் நிறைவேற்றுவதற்காகத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ள அதேசமயம் அத்தேவைகள் பற்றிய மதிப்பீடொன்றும் (need assessment)நடாத்தப் பட்டுள்ளது. அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக அரசினால் ஏனைய அபிவிருத்திப் பங்காளர்களுடன் ஒன்று சேர்ந்து மீன்பிடித் துறைமுகங்கள் உட்பட மீன்பிடித் தொழில் அபிவிருத்தி, விவசாய பொருளாதார வலயங்களை (Agriculture Techno Park & Mega Zones) நிறுவுதல் உல்லாசப் பயணத்துறை சார்ந்த தொழில் வாய்ப்புக்கள், பிரதேசத்திலுள்ள இயற்கை வளங்களை உபயோகித்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியன தீட்டப்பட்டு  அவற்றில் சில தனியார் துறையினாலும் அரசினாலும் செயற்படுத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழில் உற்பத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக தேசிய இளைஞர் படையணி, தேசிய இளைஞர் சேவை சபை, தொழில் பயிற்சி அதிகார சபை, சிறு தொழில் அபிவிருத்தித் துறை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் வடக்கு கிழக்கு இளைஞர் அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டமொன்று  செயற்படுகின்றது.

தேசிய இளைஞர் படையணி

அரசினால் தேசிய இளைஞர் படையணி மூலம் புதிய வேலைத்திட்டமொன்றாக தேசிய இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை நோக்கமாக இளைஞர்களின் தலைமைத்துவப் பண்புகள், ஆற்றல் மற்றும் திறன் அபிவிருத்தி, முயற்சியாண்மை திறன் அபிவிருத்தி மூலம் தொழில்களை உருவாக்குவதை மேம்படுத்தல் மூலம் தொழிலின்மையை இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

தேர்ச்சி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய பயிலிளவர் படையணி, தேசிய இளைஞர் சேனை, ஆகியன ஒன்று சேர்ந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்துகின்றன.

அதன்படி, பாடசாலையை விட்டுச் செல்லும் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்த்துக் கொண்டு அவர்களை வலுவூட்டியதன் பின்னர் தொழில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட தொழில் பயிற்சி மற்றும் தொழில்களை ஆரம்பிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி காலத்தில் அவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் அதே சமயம் மேற்படி இளைஞர் யுவதிகள் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கு முற்படுத்தப்படுவர்.

இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக 2016 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள அதே சமயம் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் 1500 இளைஞர் யுவதிகள் இதற்குச் சேர்த்துக் கொள்ளப்படுவர். எதிர்வரும் வருடத்தில் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக 4000 இளைஞர் யுவதிகள் ஆட்சேர்க்கப்படுவர்.

தேசிய இளைஞர் சேவை சபை

வடக்குக் கிழக்கு பிரதேசங்களின் இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை வளர்ப்பதற்காக அவர்களது சமூக சேவை அலுவல்களில் ஈடுபடுத்த பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

 1. இளைஞர் சமாசங்களை நிறுவுதல்

கிராம மட்டத்தில் 13 – 25 வயது வரையான இளைஞர் யுவதிகளின் அங்கத்துவத்தைக் கொண்ட வடக்குக் கிழக்கைச் சேர்ந்த 2002  கிராம சேவை உத்தியோகத்தர் பிரி;வுகளில்  2003 இளைஞர் சமாசங்கள் பின்வருமாறு செயற்படுகின்றன.

மாவட்டம்                                               இளைஞர்  சமாசங்களின்  எண்ணிக்கை                                 அங்கத்துவ எண்ணிக்கை

திருகோணமலை                                                                                         251                                                                                                                                   9139

மட்டக்களப்பு                                                                                                 368                                                                                                                                 16322

அம்பாறை                                                                                                        474                                                                                                                                 18250

வவுனியா                                                                                                          94                                                                                                                                   3934

மன்னார்                                                                                                            171                                                                                                                                   7197

கிளிநொச்சி                                                                                                       89                                                                                                                                  3847

முல்லைத்தீவு                                                                                                 130                                                                                                                                5089

யாழ்ப்பாணம்                                                                                                   426                                                                                                                               12844

மொத்தம்                                                                                                          2003                                                                                                                             76622

 1. தொழில் சந்தை நிகழ்ச்சித்திட்டம்.

தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் வங்கி அபிவிருத்தி, இளைஞர் உழைப்புச் சக்தி சமுதாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றைச் செயற்படுத்துவர்.

சமுதாய அபிவிருத்தி

2015ஆம் ஆண்டில் வடக்குக் கிழக்கு இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சர்களின் தலையீட்டின் மீது இளைஞர் சமுதாயங்களினால் 158 சமுதாய செயற்றிட்டங்கள்; செயற்படுத்தப்பட்டுள்ள அதே சமயம் அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி; ரூபாய் மில்லியன் 15.8ஆகும். சமுதாயத்தின் பங்களிப்பு ரூபாய் மில்லியன் 10 ஆகும். செயற்றிட்டத்தின் மொத்த பெறுமதி ரூபாய் மில்லியன் 25.8 ஆகும். (இணைப்பு இலக்கம் 2) இந்நிகழ்;சசித்திட்டம் இவ்வருடத்தில் செயற்படும்.

 1. இளைஞர் பாராளுமன்றம்

இலங்கை இளைஞர் சமுதாயத்திற்கு அரசியல் தலைமைத்துவம் பற்றிய விளக்கத்தை அளிப்பதன் மூலம் சனநாயக நிர்வாக முறைகள் பற்றிய பிரயோக அனுபவங்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மற்றும் அரச கொள்கைகளைத் திட்டமிடும்போது இளைஞர் யுவதிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்களை விரிவு படுத்துவதன் மூலம் இளைஞர் அபிவிருத்தியில் பங்களிக்கச் செய்யவும் பல்வகைமையுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை “உரையாடல் மூலம் நல்லிணக்கத்திற்கு” வருவதற்கு இணக்கத்துடன் கூடிய கலாசாரத்திற்குப் பழக்கப்படுத்துவதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக அணுகுமுறையொன்றை அறிமுகஞ் செய்தல் (இணைப்பு இலக்கம் 3)

வடக்கு கிழக்கு மாகாண அங்கத்தவர்கள் எண்ணிக்கை 34.

 1. சிறு செயற்றிட்ட அபிவிருத்தித் துறை

இத்துறையினால் 2016 ஆண்டில் சுயமுயற்சியாண்மை நடைவடிக்கைகளுக்காக வடக்குக் கிழக்கைச் சேர்ந்த 1200 இளம் முயற்சியாண்மையாளர்கள் முற்படுத்தப்படும் அதே சமயம் அரச வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலமும்; இளம் முயற்சியாண்மை அபிவிருத்திக் கடன் திட்டங்கள் பல உருவாக்கி  செயற்படுத்தப்படு;கின்றன.

 • தற்போது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிறுவப்பட்டுள்ள தொழில் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை
மாகாணம்;
மாவட்டம்
தொழில்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையம்           ;
சமுத்திர பல்கலைக்கழகம்;
தேசிய இளைஞர் சேவை சபை
தேசிய பயிலுனர் பயிற்சி நிறுவனங்கள்
தொழில்நுட்பக் கல்லூரிகள்;
உயர் தொழில்நுட்பக் நிறுவனங்கள்
மொத்தம்
வட
யாழ்ப்பாணம்
9
1
2
1
1
14
0
வவுனியா
10
1
3
1
15
0
மன்னார்
2
1
1
1
5
0
கிளிநொச்சி
4
1
3
8
0
முல்லைத்தீவு
3
1
4
 
 மொத்தம்
28
1
3
10
3
1
46
 
 
 
 
 
 
 
 

இந்த அட்டவணைப்படி தற்போது 46 தொழில் பயிற்சி நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள அதே சமயம் விசேடமாக கிளிநொச்சியில் மிக அண்மையில்; திறக்க பட உள்ள ஜேர்மன் அரச உதவியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தினூடாக மோட்டார் வாகன தொழினுட்பம் அத்துறையில் சுய தொழில் முயற்சியில் ஈடுபட மிகவும் சாதகமான துறையொன்றாகும்.

அதுபோன்றே பிறவி ஆற்றல்களுடன் யாதாயினும்; தொழிலொன்றில்; ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் ஆற்றல்களுக்கு தொழில் பயிற்சி சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று அல்லது முன் அறிவு வழங்கி பின் மதிப்பிடும் முறையியல்  தொழில் பயிற்சி துறையில் ஏற்கனவே செயற்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தேசிய பயிற்சியாளர் பயிற்சி நிறுவனத்தினூடாக தொழில் பயிற்சி தொடர்பான பிரயோக அறிவை வழங்குவதற்காக வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாணவர் முற்படுத்தப்படுகின்றனர். அதற்கு மேலதிகமாக தேர்ச்சி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சினால் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ள ளுமடைடள Skills Sector Councils மூலம் தற்போது தொழில்; சந்தையின் தொழில்களுக்குள்ள கேள்வி மற்றும் வழங்கல் தொடர்பான விவரங்கள் வழங்கப்படுகின்றன.அதன் மூலம் இளைஞர் யுவதிகளை பயிற்சிக்காக முற்படுத்த வேண்டிய துறைகள் யாவை என விளக்கம் கிடைக்கும் அதே சமயம் தொழில் துறையில் மேற்படி துறைகள் சார்ந்த நிறுவனங்களுடன் அரசமற்றும் தனியார் பங்களிப்புடன் பாடநெறிகள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில்களில் பிரவேசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொழில்பயிற்சி நிறுவனங்களின் கீழ் உள்ள தொழில் வினைஞர் பாடநெறிகளை முடித்த பின்னர் அப்பாடநெறிகளைப் பயின்ற மாணவர்கள் சுயதொழில்களை ஆரம்பிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையான உபகரணத் தொகுதிகள் இலவசமாக வழக்கப்படுவதும் சுயதொழிலை ஆரம்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான நிதி உதவி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும்  நடைபெறுகின்றது.

வினா

 • புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ அங்கத்தவர்களுக்கான தொழில் பயிற்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி சுயதொழில் சந்தர்ப்பங்களை உருவாக்க யாதாயினும் நடைமுறைகளை எடுக்க முடியுமா?
 • அவர்களில் கல்வித் தகைமைகளையும் தொழில் தகைமைகளையும் கொண்டவர்களுக்கு அரசில் தொழில் வாய்ப்பளிக்கும் சந்தர்ப்பம் உள்ளதா?
 • அவர்களது வாழ்வாதார வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசிடம் யாதாயினும் செயற்றிட்டங்கள் உள்ளனவா?

த்துறையில் தொழில் வழங்கல் அவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி மட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.அது போன்றே அரச நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும் போது ஆட்சேர்க்கும் பரீட்சைகள் மூலம் அரச சேவைக்கு ஆட்சேர்த்தல் பற்றி

தீர்மானிக்கப்படும்புனருத்தபானம் வழங்கப்பட்ட எல்ரிரிஈ அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக இலங்கை வங்கி மக்கள் வங்கி இலங்கை சேமிப்பு வங்கி பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியன செயற்றிட்டங்களை செயற்படுத்தும் அதே சமயம் அதன் இரண்டாம் கட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. அதனை செயற்படுத்துவதற்காக உரிய வங்கிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

அது போன்றே மீள் திருத்த மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சினால் கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைகளுக்கு முகங் கொடுத்து கணவனை இழந்த பெண்களின் தலைமையிலான குடும்பங்களுக்கும் புனர் வாழ்வளித்து சமுகமயமாக்கிய நபர்களுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை முன்னேற்ற 2015 வரவு செலவுத்; திட்ட ஆலோசனைகள் மூலம் ரூபாய் மில்லியன் 25 ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒருகுடும்பத்திற்கு ரூபாய் 100இ00 பெறுமதியான செயற்றிட்டங்கள் வீதம் 12015 குடும்பங்களுக்காக செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் கீழ் விவசாயம் விலங்கு பராமரிப்பு சிறு கைத்தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் வருமானம் உருவாக்குகின்ற வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்ந வேலைத்திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் தொடர்ச்சியாக செயற்படுபடுத்தி அவர்களது சமூக பொருளாதார மட்டத்தை நிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வினா

 • கடந்த யுத்த சூழ்நிலை காரணமாக பெண்களின் தலைமை தாங்கும் குடும்பங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வருகின்ற நிலைமைகளின் கீழ் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட செயற்றிட்டங்கள் ஏதாவது உள்ளனவா?

 வடக்கு கிழக்கு மாகாணங்களில் விதவைகள் மற்றும்  குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்களின்; வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள விதவைகளையும் வீட்டுத் தலைவராக பெண்களைக் கொண்டு குடும்பங்களினதும் நலனுக்காக செயற்படும் தேசி மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது

இந்நிலையத்தில் பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டங்கள்தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியன செயற்படுத்துவதற்காக தற்போது செயற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெண்கள் பணியகத்தின் கீழ் செயற்படுகின்ற விதவைகள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டுவதற்கான அவர்களது வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த 2015 ஆம் ஆண்டில் விசேட செயற்றிட்டத்தின் கீழ் 50 மில்லியன்களை முதலிட்டு 2008 பெண்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்பட்டுள்ளனர்.

இலங்கை பெண்கள் பணியகத்தினால் 2016 ஆண்டில் பின்வரும் செயற்றிட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தப்படுகின்றன.

நிகழ்;சித்திட்டம் 2015 இன் ஒதுக்கீடு ரூ. மில். 2016 இன் ஒதுக்கீடு ரூ. மில்.
1.யுத்த நிலை காரணமாக விதவைகள் குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள் உள்ள குடுப்பங்களின் சுயதொழில் முயற்சி செயற்றிட்டங்களுக்காக உதவி வழங்கலின் கீழ் வடக்கு கிழக்கு மாவட்டங்கள் 08 இல் பிரதேச செயலாளர் பிரிவுகள் 99 இல் பெண்கள் தலைமையிலான 321 குடும்பங்களுக்கு 100 நாள் விசேட செயற்றிட்டத்தின் கீழ் உதவி வழங்கப் பட்டது. 10
2.கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 0.3 0.152
3.வருமான உற்பத்தி வழிகளுக்காக ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் 0.9125 0.252
4.வெளி நாட்டுக்கு செல்லும் பெண்களுக்காக மாற்று வருமான உற்பத்தி செயற்றிட்டங்கள் 0.4269 0.10
5. கைவினைப்  பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 0.3 0.40
6.  (திரிய தேதட சவியi)தரியமான கைகளை வலுவூட்டல் மீனவ மகளிருக்கான நிகழ்ச்சித்திட்டம் 0.625 0.25
7. ஆண் பெண் சமூக நிலை காரணமான துன்புறுத்தல்களை தடுக்கும் நிகழ்ச்சித்தி;ட்டம் 0.15 0.475
8.பெண்கள் பாதுகாப்பு மத்திய நிலையங்கள் 3 யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் செயற்படுகின்றன 38.00

மேலும் மேற்படி பிரதேசங்களில் உள்ளஇவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்டுள்ள  செயற்றிட்ட ஆலோசனைகளுக்காக உதவி வழங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள அதே சமயம் அவர்களது ஒத்துழைப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக விதவைகளான மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பெண்களை வலுவூட்டுவதற்காக SEWA (Self Employed for Women’s Association) இந்தி அரசின் கீழ் செயற்படுகின்ற  விசேட பெண்கள் திட்டம்  செயற்படுகின்றது இதன் கீழ் தேர்ந்தெடுக்க்பபட்ட விதவைகள் மற்றும் குடும்பத்தலைவிகளான பெண்கள் உள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள்

வழங்கப்பட்டுள்ளது.மேலும்அவ்வாறான பெண்களுக்காக சுயதொழிலில் ஈடுபட்டுள்ள  பெண்களின் கூட்டுறவு சங்கம்  (Eastern Province Women Self-employed development Cooperative society ltd) தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டம் அம்பாறை மாவட்டத்திலும் செயற்படுத்தப்படுகின்றது. இதனை வடக்கிலும் ஆரம்பிப்பதற்காக ரூபா மில்லியன் 200 செலவிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்த தேசிய ஒன்றிணைந்த நல்லிணக்க (ONOR) காரியாலயத்தை செயற்படுத்த அவுஸ்திரேலிய கவுன்சிலர் காரியாலயம், ஜ.நா.சனத்தொகை நிதியம் ஆகிய விருப்பம் தெரிவித்துள்ளன.

2016 வரவு செலவுத்திடடத்தில் தேசிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு வடக்கு கிழக்கு மாகாணங்கள்pல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்;வாதார அபிவிருத்திக்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின்கீ;ழ் ருபாமில்லியன் 435 ஒதுக்கியுள்ளது. ஒரு கிராம சேவகர் பிரவிற்கு ருபா மில்லியன் வீதம் ருபா மில். 1849 உம் ருபா மில்.2284 உம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக அரசு வடக்கு கிழக்கு தொடர்பாக சகல அரச மற்றும் மாகாண சபை உள்ளுராட்சிசபை தொண்டர் அமைப்புக்கள்’ அரச சார்பற்ற நிறுவனங்கள்’ ஆகியவற்றினால் வடக்கு கி;ழக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துகின்றது.

மேலும் கௌரவ பிரதமரின் யப்பானிய விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக சர்வதேச உதவி வழங்கும் குழுக்களின் மகாநாடொன்றுக்கான ஆலோசனை முன்வைக்கப்பட்ட அதே சமயம் மேதகு ஜனாதிபதியின யப்பானிய விஜயத்தின் பின்னர் அது தொடர்பான அறிக்கை பாரளுமன்றத்தில் பிரதமர் அவர்களினால் முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts:


இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...