தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Monday, March 11th, 2019


வடக்கு மாகாணத்திலுள்ள வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஏழு சாலைகளில் ஐந்து சாலைகளின் பணியாளர்களுக்கு அண்மையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதவி உயர்வுகளில் சில நியாயமற்ற வகையிலும், முறைகேடாகவும் வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி சாலைகளின் பணியார்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கின்ற வகையில் கடந்த மாதம் 20ஆம் திகதி வவுனியா சாலை முன்பாக மேற்படி பணியார்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

நீண்ட காலமாக சேiவாயற்றி வருகின்ற சாரதிகள், காப்பாளர்கள், பொறிவலர்கள், தளுவல் அடிப்படையில் சாலை பரிசோதகர்களாகக் கடமையாற்றி வருபவர்கள், காப்பாளர்களாகப் பணியாற்றி வருகின்ற பட்டதாரிகள் போன்றோர் பதவி உயர்வுகள் வழங்கலிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும், பல்வேறு முறைகேடுகள் காரணமாக பணி இடைநிறுத்தப்பட்ட, தண்டனைக்குரியவர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நாடாளாவிய ரீதியில் கணிசமானோர் சுய விருப்பின் பேரில் பணி ஓய்வு பெறச் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே சாரதிகள் மற்றும் காப்பாளர்களுக்கான வெற்றிடங்களும் காணப்பட்ட நிலையில், தற்போது சாரதி, காப்பாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், அலுவலகப் பணியாளர்களில் மேலதிக பணியாளர்கள் காணப்படுகின்றனர் என்றும், சாரதி மற்றும் காப்பாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்து, பேரூந்துக்களை சேவைகளில் ஈடுபடுத்த இயலாத நிலையும் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் – தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் தொடர்பில் ஒரு குழு அமைத்து,  மீள் பரிசீலனை செய்து, நேர்முகப் பரீட்சையின் பிரகாரமும், தகுதிகாண் அடிப்படையிலும் மேற்படி பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையியற் கட்டளை 27ஃ2ன் கீழான கேள்வி நேரத்தின்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடமே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மேற்படி சாலைகளில் நீண்ட காலமாக நிரந்தமற்ற நிலையில் பணியாற்றி வருகின்ற சாரதிகள், காப்பாளர்கள், பொறிவலர்களுக்கு இதுவரையில் நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

வட பிராந்திய போக்குவரத்து சாலைகளில் அதிக வருமானம் இலங்கை போக்குவரத்து சபைக்குக் கிடைக்கின்ற நிலையில், புதிய பேருந்துகளை வட பிராந்திய சாலைகளுக்கென வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

போன்ற எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? ...