குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, May 7th, 2019

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அவ்வசதியை எற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஏன இழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்றையதினம் நடைபெற்ற போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடஆம இவ்ர இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாட்டில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய வகையில் பாடசாலைகள் கடந்த 06ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளன. ஏனைய 05ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஏற்கனவே பாடசாலைகள் மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் பாதுகாப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாடசாலைகளிலும் பெற்றோர் மற்றும் பொலிஸார் இணைந்த விN~ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், பாதுகாப்பச் சபையின் ஆலோசனைக்கு அமைவாகவே பாடசாலைகளை மீளத் திறப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய நிலையில் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் தாமதம் காட்டுமாறு அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சுட்டிக்காட்டியும் வருகின்றனர்.
பாடசாலைகளுக்கு விN~ட பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பினும், அடிப்படைப் பாதுகாப்பு என்பது பாடசாலைகளுக்கு அத்தியவசியமாகின்றது. அந்த வகையில் பார்க்கின்றபோது, நாட்டில் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றிய நிலையில் பல பாடசாலைகள் காணப்படுவதாக கல்வித் திணைக்கள கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பிராகரம் பார்க்கின்றபோது, நாட்டில் செயற்பட்டுவருகின்ற தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் 95 வீதமான பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்கள் இல்லை என்றும், 25 வீதமான பாடசாலைகளுக்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துகின்றபோது, தற்போதைய நிலையில் மட்டுமல்ல, எப்போதைக்குமே மேற்படி அடிப்படை பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில், நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அவ்வசதியை எற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? ஏன்பதுடன் எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...
வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளினது வாழ்வியல் மீட்சிக்கு களம் அமைக்கப்பட வேண்டும் -நாடாளுமன்றி...
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நா...