கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யமுடியுமா – விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Thursday, June 21st, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தில் வழங்கப்பட்டிருந்த் இரு சக்கர உழவு இயந்திரங்களை குறித்த விவசாயிகளின்; நலன்களை அவதானத்தில் கொண்டு இலவசமாக வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா? என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே குறித்த கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

2010 – 2012 ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாய மக்களில் 127 பேருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஜப்பான் நிறுவன நிதி உதவியில் இரு சக்கர உழவு இயந்திரங்களை 50 வீத மானியத்தில் வழங்கியிருந்தது.

ஐந்து இலட்சத்து 25 ரூபா பெறுமதியான மேற்படி உழவு இயந்திரங்களைப் பெறறவர்கள் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தவணை அடிப்படையில் செலுத்த வேண்டிய நிலையில், கிளிநொச்சி மாட்டத்தில் தொடரும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக குறித்த விவசாய மக்களால் தவணைகள் செலுத்தப்படாதுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மேற்படி உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேற்படி விவசாய மக்களின் நலன்களை அவதானத்தில் கொண்டு, மேற்படி உழவு இயந்திரங்களை அம் மக்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியுமா? என கோரிக்கை விடுத்துள்ளார்.


விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் - நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா ...
பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...