133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017

வடமாகாண சபை, மாகாண சபை இறைவரிச் சட்டத்தை 2015ஆம் ஆண்டிலேயே இயற்றியது. அதனால், 2014ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்திற்கான முத்திரைத் தீர்வை, மத்திய அரசின் திரட்டு நிதியில் வரவு (Credited) வைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி நிறுவனங்களே முத்திரைத் தீர்வையை வடமாகாணத்தில் கையாண்டன. எனவே வடமாகாண சபைக்கு குறித்த நிரியை விடுவிப்பதற்கு உதவுமாறு எனது மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முத்திரைத் தீர்வை தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இலங்கையில் முத்திரைத் தீர்வைக் கட்டளைச் சட்டம், முதல் முதலில் 1909ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றம் 1982ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலம் சாதனங்களுக்கும் ஆவணங்களுக்கும் அவற்றின் தொடர்பாகவும் தீர்வைகள் அறவிடப்பட்டன.

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் அசையும், அசையாச் சொத்துக்கள் மீதான முத்திரைத் தீர்வை மாகாண சபைகளுக்கு அதிகாரப்பரவலாக்கம் (னுநஎழடரவழைn) மூலம் கையளிக்கப்பட்டது.

அவ்வாறு இருந்த போதிலும், மத்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட முத்திரைத் தீர்வை 2002.05.01ஆம் திகதியில் இடைநிறுத்தப்பட்டது இருப்பினும் 2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் அரசாங்கம் முத்திரைத் தீர்வையினை நான் இங்கு குறிப்பிடும் பத்து (10) விதமான சாதனங்கள் மீது அறிமுகப்படுத்தியது.

  • சத்தியக் கடதாசி
  • காப்புறுதித் திட்டம்
  • பிரசித்த நொத்தாரிசுக்கான அதிகாரப்பத்திரம்
  • தொழில்
  • நிபுணத்துவத் தொழில் வியாபாரம் வர்த்தகம் ஆகியன தொடர்பான காலம் நிச்சயிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள்.
  • கடனட்டைப் பாவனையாளர்களால் அதன் பயன்பாடு தொடர்பான கோரிக்கை
  • சொத்தொன்றை ஒரு தொகைப் பணத்திற்காகஈடு வைத்தல் உறுதிப்பத்திரம்
  • சொத்துக்களை வாடகைக்கு விடுதல் அல்லது நீண்டநாள் குத்தகைக்கு விடுதல் மற்றும்
  • பணம் அல்லது சொத்து தொடர்பாக பற்றுச் சீட்டு அல்லது விடுதலைப்பத்திரம்

ஆகியன விடயங்கள் தொடர்பாகவே முத்திரைத் தீர்வை அறவிடப்படுகின்றது. இவை தவிரவும், பங்குகளை வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், இடமாற்றும் பொழுதும் முத்திரைத் தீர்வை அறவிடப்படுகின்றது.

முத்திரைத் தீர்வைச் சட்டம் 2008ஆம் ஆண்டின் 10ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும், 2011ஆம் ஆண்டின் 13ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திடமான முத்திரைத் தீர்வைகள் தொடர்பாகத் திருத்தப்பட்டது. இது இலங்கையில் நிறைவேற்றப்பட்ட எழுதப்பட்ட கையளிக்கப்பட்ட குறித்த சாதனங்கள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள ஒரு சொத்துத் தொடர்பான பொறுப்புக்கள் (டுயைடிடைவைநைள) பற்றி வெளிநாட்டில் நிறைவேற்றப்பட்ட சாதனமாகவும் அமையலாம். இருப்பினும் காலத்திற்கு காலம் விதிவிலக்குகள் அரச வர்த்தமானிகள் மூலம் பிரசுரிக்கப்பட்டன.

வடமாகாண சபை, மாகாண சபை இறைவரிச் சட்டத்தை 2015ஆம் ஆண்டிலேயே இயற்றியது. அதனால், 2014ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்திற்கான முத்திரைத் தீர்வை, மத்திய அரசின் திரட்டு நிதியில் வரவு வைக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி நிறுவனங்களே முத்திரைத் தீர்வையை வடமாகாணத்தில் கையாண்டன. இருப்பினும் 2011இல் இருந்து 2014 வரை சேகரிக்கப்பட்ட ரூபா ஆயிரத்து இருநூற்றி இரண்டு (1,202) மில்லியன்களை மாகாணத்திற்கான குறித்த அபிவிருத்தித் திட்ட மானியமாக மத்திய அரசாங்கம் வடமாகாண சபைக்கு நிதி ஆணைக்குழுவின்  சிபாரிசின் மீது விடுவித்ததாக அறிகின்றேன். இந்த ரூபா ஆயிரத்து இருநூற்றி இரண்டு (1,202) மில்லியன்களையும் வடமாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு அச் சபைகளின் கீழ் நடைபெற்ற முத்திரைத்தீர்வைக்கான தொழிற்பாடுகளின் வீதாசாரப்படி பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

2015ஆம் ஆண்டில் முதல் அரை இறையாண்டுக்கான முத்திரைத் தீர்வையாக நூற்றி முப்பத்தி மூன்று (133) மில்லியன் ரூபாய்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அதே ஆண்டின் இரண்டாவது அரை இறுதியாண்டுக்கான முத்திரைத் தீர்வையாக ரூபா நூற்றி எண்பத்தெட்டு (188) மில்லியன்கள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இத் தொகையில் முதல் அரை இறையாண்டிற்கான ரூபா நூற்றி முப்பத்தி மூன்று (133) மில்லியன்கள் இதுவரை அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது. எனவே கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் இந்த ரூபா நூற்றி முப்பத்தி மூன்று (133) மில்லியனை வடமாகாண சபைக்கு விடுவிப்பதற்கு உதவுமாறு எனது மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இது தவிரவும் வடமாகாணசபை தொடர்பாக 2016ஆம் ஆண்டில் முத்திரைத் தீர்வையாக ரூபா ஐந்நூற்றிப் பதினெட்டு (518) மில்லியன் சேகரிக்கப்பட்டதாகவும், 2017 நடப்பு ஆண்டில் இதுவரை ரூபா முன்னூற்றி எழுபத்தி ஒன்று (371) மில்லியன் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

Related posts:

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்...
உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ௲ சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்ட...