வடக்கு மாகாண சபை ஊழல் தொடர்பில் மத்திய அரசின் நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, July 20th, 2018

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அவதானத்தினை செலுத்த வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற இலஞ்சம ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

மேலம் அவர் தெரிவிக்கையில் –

ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும்,  அந்த அமைச்சர்களை பதவி நீக்கஞ் செய்த பின்னர், நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல், மோசடி குற்றச்சாட்டகள் சுமத்தப்பட்டு வருவதால், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

அத்துடன், தற்போதைய வடக்கு மாகாண சபை ஆட்சிபீடமேறிய நாள் முதற்கொண்டு, மக்களது நிதி எந்தெந்நத வகையில் செலவிடப்பட்டுள்ளன? என்னென்ன அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? என்னென்ன வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் முன்வைக்க விரும்புகின்றேன் என தெரிவித்தள்ளார்.

இந்த நாட்டைப் பொறுத்த வரையில், குப்பை அகற்றுவதிலிருந்து, கல்வித்துறை, ஏனைய அரச கருமங்கள், எமது மக்களின் கொள்வனவுகள் உள்ளிட்ட ஒரு நபரது இறுதிக் கிரியைகள் வரையில் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகள் நிகழ்த்தப்பட்டே வருகின்றன. இந்த நாடு இன்று இந்த நிலைக்குப் பின்தள்ளப்பட்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இந்த இலஞ்சம், ஊழல் மோசடிகளே என்பதை எவராலும் மறுக்க இயலாது. அரச இயந்திரத்துடன் இணைந்த ஒரு பொறிமுறையாகவே இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் பின்னிப் பிணைந்துள்ளன எனக் கூறினால், அது மிகையாகாது என்றே நினைக்கின்றேன்

இந்த நாட்டின் இத்தகைய நிலைமைகளே உலகளாவிய ரீதியிலான ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்த நாட்டினை மிகவும் மோசமான நிலையில் காட்டுவதற்கு உறுதுணையாகின்றன.

அந்த வகையில், இந்த நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழிப்பதாக அறைகூவல் விடுத்துக் கொண்டு, ஆட்சிபீடமேறியுள்ள இந்த அரசாங்கத்தினாலும் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கோ – கட்டுப்படுத்துவதற்கோ இயலாதுள்ளமையை தொடர்ந்தும் காணக்கூடியதாக இருக்கின்றது.

உலகின் இலஞ்சம், ஊழல் மலிந்த நாடுகளை வெளிப்படையாக்குகின்ற அமைப்பான ‘டிரான்ஸ்பெரன்சி இண்டர் நெசனல்’ (வுசயnளியசநnஉல ஐவெநசயெவழையெi)   அமைப்பின் அண்மைக்கால ஊழல் கருத்தாய்வுக் குறியீட்டின் பிரகாரம் – (ஊழசசரிவழைn Pநசஉநிவழைn ஐவெநஒ – ஊPஐ) –   இலங்கையானது இலஞ்ச, ஊழல் தொடர்பில் கடந்த வருடமும் சிறந்த முன்னேற்றத்தைக் காணவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

மேற்படி குறியீட்டுக்கு அமைவாக 0 புள்ளியினைப் பெற்றிருப்பின், அந்த நாடு ஊழல் மலிந்த நாடு என அர்த்தப்படுகின்ற நிலையில், 100 புள்ளிகளைப் பெற்றிருப்பின் அந்த நாடு ஊழலற்ற நாடு என அர்த்தப்படுகின்ற நிலையில், இலங்கைக்கு கடந்த ஆண்டு 37 புள்ளிகளே கிடைத்துள்ளன.

ஊழலின் பொதுவான தோற்றமாக இலஞ்சமே காணப்படுகின்றது. இந்த இலஞ்சம் என்கின்ற விடயம் எமது நாட்டைப் பொறுத்தவரையில், நுழையாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு மலிந்து காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான தடுப்புச் சம்மேளனத்தில் – (ருnவைநன யேவழைளெ ஊழnஎநவெழைn யபயiளெவ ஊழசசரிவழைn – ருNஊயுஊ) – இலங்கை கையொப்பமிட்டு, அங்கீகரித்துள்ளது. இதன் பிரகாரம், மேற்படி சம்மேளனத்தின் மாநிலமாக இலங்கையானது அச் சட்டத்திற்கு அமைவாக உடன்பட்டு, செயற்பட வேண்டியுள்ளது. அதாவது, மேற்படி சட்டத்தின் 5 (2) பிரிவிற்கமைவாக இலங்கையானது ஊழல் ஒழிப்புக்கு சாதகமான சட்ட மற்றும் நிர்வாக சூழலை உருவாக்க வேண்டியுள்ளது.

அதேநேரம் இலங்கையானது, ‘திறந்த அரசாங்க பங்குடமை’யிலும் (ழுpநn புழஎநசஅநவெ Pயசவநௌhip – ழுபுP) – அங்கத்துவம் வகிக்கின்றது. இதனது பொறுப்பின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பிற்கான முயற்சிகளை பலப்படுத்துகின்ற வகையில் இரண்டு வருடங்களுக்கான ஊழல் தடுப்புத் திட்டம் ஒன்றினை விருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 1,398 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் 2,768 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் இதே ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

இவை அனைத்தும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் மூலமாக பகிரங்கமான குற்றச்சாட்டுகள் என்றே நினைக்கின்றேன். இதைவிட அதிகமான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான குற்றங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால்தான் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்கின்ற நிலையில், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கோ அல்லது கட்டப்படுத்துவதற்கோ போதியளவில் முடியாது என்பதை நான் தொடர்ந்து கூறி வருகின்றேன்.

இந்த நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறிக்கொண்டு,  பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்படுகின்றன. அத்திட்டங்கள் எந்தளவிற்கு சாத்தியமாகுமோ என்பது கேள்விக்குறிகளாக இருந்தாலும், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிக்காமல் நீங்கள் எவ்விதமான திட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றினால் இந்த நாட்டிற்கோ, இந்த நாட்டு மக்களுக்கோ எவ்விதமான பயன்களையும் கொண்டுதரப் போவதில்லை

இந்த நாட்டில் குப்பை மேடுகளை அகற்றுகின்ற பணிகளில் ஈடுபடுவோர் முதற்கொண்டு ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவிகளை வகிப்போர் வரையில் இலஞ்சம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இந்த இலஞ்சம், ஊழல்கள் என்பன ஏற்படுவதற்கு ஏதுவாகவுள்ள இந்த நாட்டின் புற காரணிகள் தொடர்பிலும் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

வறுமை நிலை. இந்த நாட்டில் கிட்டத்தட்ட 19 மாவட்டங்கள் வறுமை நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தகைய வறுமை நிலையை அகற்றி, எமது மக்களது பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்கு இதுவரையில்  எவ்விதமான திட்டங்களும் இல்லை. இப்போது, ‘கிராமப் பிறழ்வு” – ‘கம் பெரலிய’ – திட்டம் பற்றி பேசப்படுகின்றது. சுய தொழில் ஊக்குவிப்பு பற்றிப் பேசப்படுகின்றது. ‘தொழில் முயற்சி இலங்கை’ – ‘என்டர்பிரசஸ் ஸ்ரீ லங்கா’ பற்றி பேசப்படுகின்றது  இந்த நாட்டிற்கு ஊசி முதல் ஊதுவர்த்தி வரையில் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், எமது மக்களால் சுய தொழிலாக எதை உற்பத்தி செய்து, யாருக்கு விற்பது? என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி அதிகரிக்கின்ற பொருட்களின் விலைகள், வரிகள், தண்டப் பணங்கள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் அரச ஊழியர்களது ஊதிய மட்டங்களை அதிகரிக்கப்படாதுள்ளது. அதிகரித்த அரச பணியாளர்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கான பணிகளை பிரித்து ஒதுக்க இயலாத நிலைமைகளும் – பணியாளர்களுக்கான பணிகள் இல்லாத நிலைமைகளும் காணப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் பலர் தங்களது மனித வளங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனை இலட்சம் பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினீர்களோ – அத்தனை இலட்சம் பேரைவிட பல மடங்கு மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி, விரக்கதி நிலையில் காணப்படுகின்றனர்.

கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அமைப்புகள் சார்ந்த  ஆளணி நியமனங்களில் – பொது ஆட்சேர்ப்பு முறைமையில் வெளிப்படைத் தன்மை இல்லாமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. மருத்துவமனையில் இறப்பதற்கும்கூட இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

அரச சேவை துறைகளில், அமைப்புகளில் பொறுப்பு கூறும் குறைபாடுகளைக் காணக்கூடிய நிலைமைகள் உருவாக்கம் பெற்று, நீடிக்கின்றன. ஒரு நபர் அரச துறைகள் சார்ந்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளுக்கும், காலதாமதங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுகின்றது

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அவதானத்தினை செலுத்த வேண்டும்.

அந்த வகையில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும்,  அந்த அமைச்சர்களை பதவி நீக்கஞ் செய்த பின்னர், நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல், மோசடி குற்றச்சாட்டகள் சுமத்தப்பட்டு வருவதால், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

அத்துடன், தற்போதைய வடக்கு மாகாண சபை ஆட்சிபீடமேறிய நாள் முதற்கொண்டு, மக்களது நிதி எந்தெந்நத வகையில் செலவிடப்பட்டுள்ளன? என்னென்ன அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? என்னென்ன வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடம் முன்வைக்க விரும்புகின்றேன்.

நீதித் துறையினை எடுத்துக் கொண்டாலும், அங்கு அதிகாரங்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை, நீதிமன்றங்கள் பழைய வழக்குகளின் சுமைகளை மிக அதிகமாகவே கொண்டிருக்கின்றன.

இத்தகைய அடிப்படை குறைபாடுகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இலஞ்சம், ஊழல், மோசடிகள் மிக மோசமான வகையில் தலைதூக்க ஆரம்பித்து விடுகின்றன. எனவே, இத்தகைய அடிப்படை குறைபாடுகளை நீக்குவதற்கு முதலில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலஞ்சம், ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கு முன்பாக, அவை இடம்பெறுவதற்கான வழிவகைகளை அடைப்பதையே முதலில் செய்வதற்கு முன்வர வேண்டும்

இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் முறையிடுவதற்கெனவும், அவற்றை விசாரிப்பதற்கெனவும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு, நிதிக் குற்றங்கள் தொடர்பான புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம், பொது வளங்கள் மற்றும் சலுகைகள் போன்றவை தொடர்பில் விசாரணை செய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழு ஆகிய மூன்று நிறுவனங்கள் செயற்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த மூன்று நிறுவகங்களுக்கிடையிலும் தற்போதைய நிலையில் காணப்படாத ஒருங்கிணைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த ஒழுங்கிணைப்பினை பலமுள்ளதாக கட்டியெழுப்ப வேண்டும்.

அதேநேரம், இலஞ்சம் மற்றும் ஊழல்கள் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் தற்கால சூழலுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும்.

அதேபோன்று, மேற்படி ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கான மேலதிக கட்டிட வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன்,  ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்படல் வேண்டும். ஆளணி என்கின்ற போது, தற்போது தங்களுக்கான அதிகாரிகளை பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கு மேற்படி விசாரணை ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்றே கூறப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றஞ் செய்யப்படல் வேண்டும். பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஆளணிகளைப் பெற்றுக் கொண்டு, விசாரணை, சோதனைகள் மற்றும் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படல் என்பது மேற்படி ஆணைக்ழுவின் பணிகளுக்கு உகந்த செயலாகக் கருத முடியாது. பொலிஸ் திணைக்களம் இந்த அதிகாரிகளை மேற்படி ஆணைக்குழுவின் பணிகளில் ஈடுபடுத்தினாலும், இந்த அதிகாரிகளை வேறு பணிகளிலும் ஈடுபடுத்தி வருவதால், மேற்படி ஆணைக்குழுவுக்கென சுயமாக அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.

கடமைகளின்போது குற்றங்களைப் புரிகின்ற அரச அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு தண்டனை என்ற வகையில் தூர – அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றமை ஒரு தவறான செயற்பாடாகும் என்றே கருதுகின்றேன.; இவர்களை இவ்வாறு இடமாற்றங்கள் செய்வதானது நடைமுறையில் ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது

‘ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு சிறந்த வழி எதுவெனில், அத்தகைய பணிக்காக அர்ப்பணிப்புடன்கூடிய சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றுவதாகும்’ என்றும், ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் மற்றும் கொள்கைகளை அமுல்படுத்தலின் மூலமாக இத்தகைய அமைப்புகள் செயற்பட முடியும் என்றும், எந்தவொரு நாட்டினதும் சூழலுக்கு அமைவான நல்லாட்சிக்கு ஊழல் தொடர்பில் அவதானங்களைச் செலுத்துவதற்கு ஒரு நல்ல செயற்பாட்டு மேற்பார்வை அமைப்பு அவசியமாகும்’ என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சம்மேளனம் தெரிவித்திருப்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

எந்தவொரு அரச அதிகாரியையும், அவர்கள் கடமையின் போதே குற்றங்கள் புரிகின்ற நிலையில், அவர்களை இடமாற்றங்கள் செய்கின்றபோது, இந்த அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்கின்ற இடங்களில் இதே குற்றங்களை அல்லது இதைவிட அதிகமான குற்றங்களை செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? எனக் கேட்க விரும்புகின்றேன்.

மறு பக்கமாக, இவ்வாறு தண்டனை பெற்று செல்கின்ற அதிகாரிகள் இடமாற்றம் பெற்று செல்கின்ற இடங்களில் வேண்டா விருப்புகளுடனேயே கடமைகளில் ஈடுபடக்கூடிய மன நிலைமைகளே அதிகமாகும். இந்த நிலையில் மக்களுக்கான பணிகளை இவர்களால் ஒழுங்குற நிறைவேற்றக்கூடியதாக இருக்கப் போவதில்லை.

எனவே, அரச சேவைகளின்போது, குற்றம் புரிகின்றவர்களுக்கு தண்டனை இடமாற்றங்கள் வழங்குவது என்பதை மாற்றி, வேறு தண்டனைகளை – சேவைக் காலக்குறைப்பு – அல்லது சேவை தொடர்பில் புள்ளிகள் இடல் திட்டம் – ஓய்வூதியத்தில் தொகை குறைப்பு – போன்ற ஏதாவதொரு திட்டத்தினைக் கொண்டு வரலாம் என்பது எனது எண்ணமாகும்.

எனவே, இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பில் அவதானங்களைச் செலுத்துமாறு கோரிக்கை விடுகின்றேன்.

Related posts:

வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்: அதில் மாற்றம் ஏதுமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 பெப்ரவரி 2010அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளு+ராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரத...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!