வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. அரச கைத்தொழில் சார்ந்த முயற்சிகளைப் போன்றே அக்காலகட்டத்தில் தனியார் மற்றும் மனை சார்ந்த கைத்தொழிற் துறைகளும் போதிய வளர்ச்சியினை எமது பகுதிகளில் கொண்டிருந்தன. இன்று அவை அனைத்துமே மீளக் கட்டியெழுப்பப்படாத நிலையே காணப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் கைத்தொழில் வணிக அலுவல்கள் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

எமது நாட்டின் கைத்தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி தொடர்பில் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலைமையானது எமது பகுதிகளில் பொருளாதார ஈட்டல்களையும் குறைத்துள்ளதுடன் வேலைவாய்ப்புகளுக்கும் அதிகம் வாய்ப்பளிக்காத நிலையினை ஏற்படுத்தி எமது மக்களை வறுமைக்குள் தள்ளிவிட்டுள்ளது.

எமது நாட்டில் வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர்இ நுகர்வுத் தளம் – முதலீட்டுத் தளம் என்பவற்றில் போதியளவு மாற்றங்கள் ஏற்பட்டதும்இ அதனால் உருவான திடீர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு புறம் சுமார் 30 வருட காலங்கள் முடக்கப்பட்டிருந்த அத்தியாவசியத் தேவைகளுக்கான கேள்விகள் அதிகரித்தும் அதற்குப் புறம்பான ஏனைய பொருட்களுக்கான தேவையானது மிகைப்படுத்தப்பட்டதுமான ஒரு நுகர்வுத் தளம் வளர்ச்சி பெற்றிருந்தது.
நீண்ட காலமாக கவனத்தில் கொள்ளப்படாதிருந்த பௌதீக கட்டுமாணங்களின் மேம்பாடுகள் வெளி மாவட்டங்களுக்கான தரைப் போக்குவரத்து விஸ்தீரணம் பெற்றமை மின்சார வசதிகள் 24 மணி நேரமும் உறுதிபடுத்தப்பட்டமை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் போன்ற காரணிகள் இந்த நுகர்வுத் தளத்தை விஸ்தீரணப்படுத்துவனவாக அமைந்தன.

அதே நேரம் இழந்தவற்றை மீளச் சேகரித்துக் கொள்வதும் ஏனைய தேவைகளை ஈட்டிக் கொள்வதும் எமது நுகர்வோரின் எண்ணப்பாடாகவும் அமைந்திருந்தன. இதன் காரணமாக இந்த நுகர்வுத் தேவையை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகச் செய்கைகள் திடீர் வளர்ச்சி பெற ஆரம்பித்தன. இதில் அப் பகுதி வர்த்தகர்கள் நேரடியாகவும் அப்பகுதி சாராத வர்த்தகர்கள் மறைமுகமாக தமது விநியோகத் தளத்தை அப்பகுதி வர்த்தகர்கள் ஊடாகவும் மேற்கொண்டிருந்தனர். இதனூடாக இந்த இரண்டு தரப்பினரும் அங்கு வளர்ச்சி பெற்றிருந்த திடீர்ப் பொருளாதாரச் சந்தையின் பயன்களைப் பெற்று வந்தனர்.

எனினும் இந்த நுகர்வு அலையானது நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. இந்த நிலையில் நுகர்வுத் தேவைகளின் படிப்படியான வீழ்ச்சி காரணமாக எமது வர்த்தகப் பொருளாதாரமும் வீழ்ச்சி காண ஆரம்பித்து விட்டது.

இந்த வீழ்ச்சியானது தற்காலிகமானது என எதிர்பார்த்து – அரச வங்கிகளின் ஊடாக கடன் பெற்றுஇ கையிருப்புகளை குறைவில் வைக்காது அதன் மிகைக் களஞ்சியத்தைப் பேணியவர்களும் இதற்கென அரச வங்கிகள் கடன்களை மறுத்த நிலையில் வேறு நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களும் மேற்படி பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாத நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்ட ஒரு நிலையே வடக்கு மாகாணத்தில் நிலைத்துக் காணப்படுகின்றது என்பதை இந்தச் சபையின் அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இருந்துதான் வடக்கு மாகாணத்தில் எமது பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சின் தேவையானது மிகவும் அத்தியவசியமாகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

அதாவது ஏற்படுத்தப்பட வேண்டிய பொருளாதார ஈட்டு நடவடிக்கைகள் உள்@ர் வளங்களையும் பயன்படுத்தியதான உள்@ர் விற்பனைச் சந்தையை மாத்திரம் நம்பியிராத தொழில் முயற்சிகளாகவே அமைய வேண்டும் என்பதை அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
அந்த வகையில் தற்போது மீள செயற்படுத்தப்படாதிருக்கும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் ஆராய முடியும். இந்த சீமெந்து தொழிற்சாலையில் சேதமாகாத நிலையில் பெறுமதிமிக்க உபகரணங்கள் பல இருந்தும் அவை தற்போது அங்கு இல்லை என்றே அறியமுடிகின்றது. அதாவது ஒரு தேசிய அநியாயமே அங்கு நிகழ்த்தி முடிக்கப்பட்டிருப்பதாகவே அறிய முடிகின்றது.
தற்போதைய நிலையில் ஒரு பெரிய தொழிற்துறையாக மேற்படி சீமெந்து தொழிற்சாலையை மீள உருவாக்க இயலாவிட்டாலும் அதனை சீமெந்து பொதியிடல் பணிகளுக்கென ஓர் ஆரம்ப ஏற்பாடாக உருவாக்குவதற்கான நடவடிக்கைளையேனும் மேற்கொள்ள முடிந்தால் அது எமது மக்களுக்கு பெரும் பயனுள்ளதாகவே அமையும்.
அதே போன்று பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை தற்போதைய நவீன சந்தைக் கேள்விகளுக்மைவாக நவீனமயமாக்கப்பட்டு செயற்படுத்த முடியும்.

மேற்படித் தொழிற்சாலைகளை தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்த அரச தொழில் முயற்சிகளாக முன்னெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பின் அவை மேலும் பயனுள்ளதாக அமையக்கூடும். ஏனெனில்இ பல அரச தொழில் நிறுவனங்கள் நட்டத்தால் இயங்கிவருகின்ற நிலையில் தனியார்த்துறையுடனான கூட்டு முயற்சிகள் நட்டத்தினை நோக்கிய வழிகளுக்கு செல்ல விடாத நிலைமைகளே காணப்படுகின்றன.
இதைவிட தனியார் கைத்தொழில் முயற்சிகளும் யுத்தத்திற்கு முந்திய காலங்களில் எமது பகுதிகளில் மிகவும் முன்னேற்றமான வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறிப்பாக அல்லைப்பிட்டி அலுமினியத் தொழிற்சாலை நீர்வேலி பூட்டுத் தொழிற்சாலை மற்றும் கண்ணாடித் தொழிற்சாலை நாவற்குழி இறால் தொழிற்சாலை அரியாலை ஆணித் தொழிற்சாலை சவர்க்கார உற்பத்தித் தொழிற்சாலை பெனியன் தொழிற்சாலை பாதணித் தொழிற்சாலை தும்புத் தொழிற்சாலை எனப் பல தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் வல்லை பண்டத்தரிப்பு மற்றும் புத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் மின் தறி உற்பத்திகள் வலுவானதொரு பொருளாதார ஈட்டலுக்கு வழிவகுத்திருந்ததுடன் தரமான துணி வகைகளும் உற்பத்திச் செய்யப்பட்டிருந்தன. இவற்றுக்கான சந்தை வாய்ப்புகள் வடக்கில் மட்டுமல்லாது தென் பகுதிகளிலும் சிறப்பானதாகவே செயற்பட்டு வந்திருந்தன.

இத்தகைய தொழிற்துறைகளையும் இனங்கண்டு மீள செயற்படுத்துவதன் ஊடாக எமது பகுதிகளில் அதிகரித்துள்ள தொழில்வாய்ப்பின்மையையும் வறுமையினையும் குறைப்பதற்கு வழிகோலும் என்பதால் கௌரவ அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகின்றேன்.
அதே நேரம் கடந்த காலங்களில் நாம் இவ்வாறான பல தொழிற் துறைகளை மீளப் புனரமைத்து அவற்றை ஊக்குவித்திருந்தோம். அந்த வகையில்இ அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை அல்லாரை தும்புத் தொழிற்சாலை நீர்வேலி இரும்பு சார் உபகரணங்கள் உற்பத்தித் தொழிற்சாலை வதிரி பாதணி தொழிற்சாலை சங்கானை பற்றிக் தொழிற்சாலை போன்ற தொழில் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
அதே நேரம்இ கடந்த காலங்களில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை நாம் மீளப் புனரமைத்து புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதனையும் மேலும் முன்னேற்றத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் இம்முறை வரவு – செலவுத் திடத்தில் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை மேம்படுத்துவதற்கென 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
அதே நேரம் வவுனியா கைத்தொழிற்பேட்டையை அபிவிருத்தி செய்து அதனையும் பலமிக்க ஒரு கைத் தொழிற் பேட்டையாக மாற்றியமைப்பதற்கும்இ மேலும்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களிலும் புதிய கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே நேரம் எமது நாட்டின் பாரம்பரிய தொழிற்துறைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக 100 வருடங்கள் பழைமையான மட்பாண்டக் கைத்தொழிலில் எமது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கைப் பொறுத்த வரையிலும் இந்த மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் பெருவாரியாகக் காணப்படுகின்றனர்.
அதே போன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியக் கைத்தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற முக்கிய பிரச்சினைகளாக மூலப் பொருள் தட்டுப்பாடு உரிய சந்தைவாய்ப்புகளின்மை போன்ற விடயங்களே காணப்படுகின்றன.
எனவே இத்துறை தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்துவார் என நம்புகின்றேன்.
அதே நேரம் பொலித்தீன் மற்றும் ப்ளாஸ்ரிக் பொருட்களின் பாவனைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்தும் நோக்கில் சேதன முறையில் அழிவடையக்கூடிய மூலப் பொருட்களின் உற்பத்திகள் தொடர்பிலான ஆர்வமூட்டல்களுக்கு என 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பனை வளம் சார்ந்த உற்பத்திகளையும் இணைத்துக் கொண்டு அத்துறை சார்ந்த உற்பத்தி முயற்சியாளர்களை ஊக்குவிக்கின்ற நடவடிக்கைளையும் கௌரவ அமைச்சர் அவர்கள் மேற்கொள்வார் என நம்புகின்றேன்.

அதே போன்று நவீன தொழில் நுட்பச் சந்தையின் கேள்விகளுக்கேற்ப மென் பொருள் உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியுமென நம்புகின்றேன். இவ்விடயம் பற்றி நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றேன். குறிப்பாக வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கின்ற இளைஞர் யுவதிகள் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும். இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வணிக அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை இங்கு முன்வைப்பதற்கு எண்ணுகின்றேன்.
அண்மைக் காலமாக எமது வணிக அமைச்சு தொடர்பிலேயே எமது நாட்டு மக்களது மொத்த அவதானமும் செலுத்தப்பட்டு வருவதற்கு முக்கியக் காரணம் பொருட்களின் விலையேற்றங்கள்.
அதில் முக்கிய இடத்தை அரிசியும் தேங்காயுமே பிடித்துக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரதான உணவுண்டு. ஆபிரிக்காவைப் பொறுத்த வரையில் மரவள்ளிக் கிழங்கு சோளம் சக்கரை வள்ளிக் கிழங்கு என்பன அந்நாட்டு பிரதான உணவு வகைகளாகக் கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பொருட்களை குறைந்த விலையில் அந்நாட்டு மக்கள் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ர~;யா நாட்டு மக்களது பிரதான உணவான உருளைக் கிழங்கு மாமிச வகைகள் என்பன குறைந்த விலையில் பொது மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மாமிசமே பிரதான உணவு என்பதால் கோழி இறைச்சியை குறைந்த விலையில் அந்நாட்டுப் பொது மக்கள் கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் அந்த நாடுகளில் காணப்படுகின்றன.

ஆனால்இ எமது நாட்டின் பிரதான உணவாகிய அரிசியை எமது சாதாரண பொது மக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
எமது நாட்டினைப் பொறுத்த வரையில் சாதாரண மக்கள் தங்களது அன்றாட உணவுத் தேவைகளுக்கான உணவுப்பொருட்களை நாளாந்தம் வாங்கும் வகையிலான பொருளாதார நிலைமையிலேயே இருந்து வருகின்றனர்.
இன்று சாதாரண ஒரு கடையில் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 98 ரூபா நாட்டரசி ஒரு கிலோ 110 ரூபாஇ வெள்ளை அரிசி ஒரு கிலோ 95 ரூபா கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 140 – 150 ரூபா சம்பா அரசி ஒரு கிலோ 115 ரூபா என்கின்ற விலைகளிலேயே விற்கப்படுகின்றன.

இதே அரிசி வகைகளின் மொத்த விலையினைப் பார்க்கின்றபோது புறக் கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ நாட்டரிசி 98 ரூபா சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 92 ரூபாஇ வெள்ளை அரிசி ஒரு கிலோ 86 ரூபா கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 128 ரூபா சம்பா அரிசி ஒரு கிலோ 128 ரூபா என விற்கப்படுகின்றன. இந்த விலைகள் நாளுக்கு நாள் மாற்றமடைகின்றன.

குறிப்பாக புறக் கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ 98 ரூபா என்ற அடிப்படையில் நாட்டரிசியை வாங்குகின்ற சாதாரணக கடைக்காரர்கள் அதனை 110 ரூபாவிற்கு விற்கின்றனர். அதுவே எமது பகுதிகளுக்கு வரும்போது போக்குவரத்து செலவுகள் உள்ளடங்கலாக 120 முதல் 130 ரூபா வரையில் விற்கப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

அந்த வகையில் கடந்த கால யுத்தம் அடங்கலாக பல்வேறு பாதிப்புகளுக்கு உட்பட்டு இன்னமும் அப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காகப் போராடி வருகின்ற எமது மக்களும் இந்த நாட்டின் தொலைதூரங்களிலிருக்கின்ற பொருளாதார ரீதியில் வளம் குன்றிய மக்களும் சோறு உண்கின்ற உரிமை மறுக்கப்பட்டவர்களாக இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றனர்.

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் குறைந்த விலைகளில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறப்பட்டாலும் அதன் மூலமான கொள்வனவுகளை இந்த நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களால் செய்து கொள்ள இயலாது. அதே நேரம் அங்கு விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களின் தரம் தொடர்பில் இந்த நாட்டு மக்களிடையே பல்வேறு விமர்சனங்கள் கால காலமாக இருந்து வருகின்றன. மேலும்இ அனைத்துப் பொருட்களும் அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களிலும் கிடைக்காத நிலையும் காணப்படுகின்றது.
ஒரு தேஙகாய் இன்று 120 ரூபாவுக்கு மேலான விலைகளில் விற்கப்படுகின்றது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களின் ஊடாக 65 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும்இ அதனை கொள்வனவு செய்கின்ற வாய்ப்பு எமது நாட்டு மக்களில் எத்தனைப் பேருக்குக் கிட்டும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அண்மையில் 06 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த வகையில் குறைக்கப்பட்ட விலைகளில் இன்று சாதாரணக் கடைகளில் அப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளது. உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுஇ எமது உள்@ர் உருளைக்கிழங்கு செய்கையாளர்களது வயிற்றில் அடித்தது போக எமது மக்களுக்கு நியாயமான எதுவுமே நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வில்லை.
ஒரு பொருளின் விலை குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில்இ மற்றொரு பொருளின் விலை அதிகரிக்கின்ற போக்குகளே இந்த நாட்டில் காணப்படுகின்றன. கொழும்பு நுகர்வோர் சுட்டெண் அதிகரித்துக் காணப்படுவதற்கு இதுவே காரணம் எனக் கூறப்படுகின்றது.

பொருட்களின் விலைகள் இந்த நிலையில் அதிகரித்துச் செல்கின்ற ஒரு நிலை நிலைத்திருக்கஇ அப் பொருட்களின் தரம் பற்றிக் கூற வேண்டியதே இல்லை. எப்பொருளை எடுத்துக் கொண்டாலும்இ அதில் கலப்படம் இல்லாதப் பொருளை இனங்காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றது.
கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் அமைக்கப்படுமா? அமைக்கப்படாதா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் சிக்குண்டிருந்த பொருளாதார வர்த்தக மையமானது இப்போது வவுனியா மதகுவைத்த குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. இந்த பொருளாதார மையத்திற்கு இந்த இடம் எந்தளவுக்குப் பொருத்தமாகும் என்ற கேள்வி எமது விவசாய மக்களிடத்தில் காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது எமது விவசாய மக்களிடமிருந்து அதிகளவிலான பணத்தை சுரண்டி வருகின்ற இடைத் தரகர்களிடம் இருந்து எமது விவசாய மக்களைக் காப்பாற்றும் வகையிலேயே மேற்படி பொருளாதார மையத்திற்கான கோரிக்கை கடந்த காலங்களில் எங்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இந்த அரசினால் வவுனியா மாவட்டத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 20 கோடி ரூபா முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவிருந்த இந்த பொருளாதார மையம் தற்போது 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது.

மேற்படி பொருளாதார மையத்திற்கு இந்த நிலை ஏற்பட தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளின் சுயலாப மற்றும் மக்கள் நலன்கள் மீது அக்கயைற்ற தன்மையே காரணமாகும். மத்திய அரசாங்கத்தின் இத் திட்டத்தை அன்றே எற்று பொருத்தமான ஓர் இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறான செயற்பாடுகள் எல்லாமே எமது மக்களின் துரதிர்ஸ்டமாகவே அமைந்து வருகின்றன.
மேற்படி பொருளாதார மையத்தின் தற்போதைய நிலை குறித்து கௌரவ அமைச்சர் ஹரிசன் அவர்கள் தனது உரையின்போது தெளிவுபடுத்தவார் என நினைக்கின்றேன்.

மேலும்இ மேற்படி பொருளாதார மையத்தின் கட்டுமானப் பணிகள் வெளிப்படைத் தன்மையற்ற வகையில் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ குத்தகை ஒப்பந்தக்காரர்கள் பற்றியோ வெளிப்படைத்தன்மை அற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாறு அமைக்கப்படுகின்ற பொருளாதார மையத்தினால் தமக்கு உரிய பயன் கிட்டுமா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் எமது விவசாய மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்தும் கௌரவ அமைச்சர் விளக்கம் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இருக்கின்ற நிலையில் அவற்றுக்கான மேய்ச்சல் தரைகள் இல்லாத காரணத்தினால் பாற் பண்ணையாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுத்த வருகின்றனர்.

மேற்படிப் பண்ணையாளர்கள் அதிகளவில் திறந்த வெளி முறையிலான கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதனால் காலபோக பயிர்ச் செய்கைகளின்போது கால்நடைகளைப் பராமரிப்பதில் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதே நிலைமை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பூநகரி கண்டாவளை பச்சிலைப்பள்ளி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வடக்கு மகாணத்தில் ஏனைய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
அந்தவகையில் மேற்படிப் பாற் பண்ணையாளர்களின் வசதி கருதி மேய்ச்சல் தரைகளை உருவாக்குவதற்குப் பொருத்தமான இடங்களை இனங்கண்டு அவற்றை அமைப்பதற்கும் கால்நடைகளின் தரங்களை மேம்படுத்திஇ மேற்படித் துறையினை அபிவிருத்தி செய்வதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய நிலைமையே மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான திவுலானை மணலேத்தம் மங்களகம கெவுளியாமடு போன்ற பகுதிகளிலும் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. இங்கு கடந்த சுமார் 50 வருடங்களாக மேற்படி பாற் பண்ணையாளர்கள் பயன்படுத்தி வந்துள்ள மேய்ச்சல் தரைகள் தற்போது வன இலாக்காவினரால் கையகப்படுத்தப்பட்டு வருவதால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பராமரிக்க இயலாதுள்ளதாகவே இங்குளள் பாற் பண்ணையாளர்க்ள தெரிவிக்கின்றனர்.
கால்நடை அபிவிருத்தியில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது மாடுகளை வழங்கினால் மட்டும் போதாது மேற்படி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அத்துறையினை எமது மக்களால் ஒழுங்குறக் கொண்டு நடாத்த முடியும்.
எமது நாட்டின் பால் உற்பத்தியில் சுமார் 39 வீதமான பங்களிப்பினை வழங்கி வருகின்ற மத்திய மலைநாட்டு பாற் பண்ணiயாளர்களும் அண்மையில் தாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபித்து வருகின்றனர்.
தங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்ற பாலுக்கான பணம் குறித்த நிறுவனங்களால் இரண்டு மூன்று மாத காலங்களாக தரப்படுவதில்லை என்பதால் இப் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் 2015ஆம் ஆண்டில் பால் மாவிற்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டதன் காரணமாக உள்@ர் பால் உற்பத்தியில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருடத்திற்கு சுமார் 80 ஆயிரம் மெற்றிக் தொன் பால் மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதனால் பல்தேசிய நிறுவனங்களே அதிகளவிலான இலாபங்களை ஈட்டி வருகின்ற நிலையில் எமது பாற் பண்ணiயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்படி விடயங்கள் குறித்தும் கௌரவ அமைச்சர் ஹரிசன் அவர்கள் அவதானங்களைச் செலுத்தி எமது நாட்டு பாற் பண்ணiயாளர்களின் வாழ்வாதாரத்திற்கான உறுதியான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நெல்லினை களஞ்சியப்படுத்தவதற்கு வசதியாக ஒரு களஞ்சிய சாலை இல்லாதிருக்கின்றது. திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்த தோப்பூர் நெல் கொளவனவு மேற்கொள்ளப்பட்ட கட்டிடம் அழிவடைந்து சுமார் இருபது வருடங்களாகியும் மேற்படி கட்டிடம் புனரமைக்கப்படவில்லை எனத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்திலும் போதியளவு களஞ்சியசாலைகள் வசதியின்மை காரணமாக எமது விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்விடயம் குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி ஏற்பாடுகளை மேற்கொண்டு எமது மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Related posts:


வடமாகாணத்தில் பாழடைந்து கிடக்கும் அணுகு வீதிகள் பாலங்கள் எப்போது புனரமைக்கப்படும் - நாடாளுமன்றில் டக...
வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு மாகாண அமைச்சர்களின் வினைத்திறன் இன்மையும் காரணமாகும்.
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...