மலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017

மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள், வடக்கு மாகாண சபையை பொய்யான வாக்குறுதிகளால் எமது மக்களிடமிருந்து பறித்தெடுத்து, ‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டவர்கள,; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வெறும் வாய்ச் சத்தங்களால் போதித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி, இதுவரையில் எதுவுமே செய்ததாக இல்லை – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், மின்வலு, புதுப்பிக்கத்தக்க சக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தொடர்பில் எடுத்துக் கொண்டால், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் ஆளணிகளின் பற்றாக்குறைகளே மாபெரும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரிய வருகின்றது.

அந்த வகையில், மின்மானி வாசிப்போர் பற்றாக்குறை பாரியளவில் நிலவுவதாகவே தெரிய வருகின்றது. இதனால், மாதாந்த மின் கட்டணப் பட்டியல்கள் பயனாளிகளுக்குக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றன.

முலi;லத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, வேணாவில் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையில் ஒரு வருட காலமாக மின் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பட்டிருக்கவில்லை என அம் மக்கள் முறையிட்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும், சில பகுதிகளுக்கு கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதத்திலிருந்து, இந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் வரையில் மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு மின் வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலும் இதே நிலையே எற்பட்டுள்ளதாக மக்கள் முறையிடுகின்றனர்.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் இத்தகைய நிலைமைகள் பரவலாகக் காணப்படுவதுடன்;, குறிப்பாக, மீள்குடியேற்ற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலேயே இந்நிலை மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

எமது மக்களின் நிலைமைகள் குறித்து இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றே நம்புகின்றேன். கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களும் நன்கறிவார்கள்.

கடந்தகால யுத்தமானது எமது மக்களை பல்வேறு அழிவுகளுக்கு உட்படுத்தி, பொருளதார ரீதியில் தலைதூக்க விடாத ஒரு நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. எமது மக்கள் இந்த நிலையிலிருந்து தலைநிமிர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாரான போதிலும், அதற்கு அவகாசம் வழங்காதவாறு பல்வேறு தடைகள் – புறக்கணிப்புகள் – பாரபட்சங்கள் – முப்பது வருட கால யுத்தம் நடந்து முடிந்தும,; காட்டப்படுகின்ற பாகுபாடுகள் – சுரண்டல்கள் – வளங்களின் முடக்கங்கள் – மத்திய அரசிலும் தொடர்கின்றன, மாகாண அரசிலும் தொடர்கின்றன.

மத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ் அரசியல்வாதிகள், வடக்கு மாகாண சபையை பொய்யான வாக்குறுதிகளால் எமது மக்களிடமிருந்து பறித்தெடுத்து, ‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ எனக் கூறிக் கொண்டவர்கள,; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வெறும் வாய்ச் சத்தங்களால் போதித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி, இதுவரையில் எதுவுமே செய்ததாக இல்லை.

மேலும், இயற்கையும்கூட எமது மக்களைத் தலைநிமிர விடாது, தொடர்ந்தும் பாதித்துக் கொண்டே இருக்கின்றது.
இத்தகையதொரு நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில், இந்த நாட்டில் வறுமைக்கு இன்று முகவரியாக இருக்கின்ற எமது மக்களுக்கு, மாதாந்தம் மின் கட்டணப் பட்டியல் கிடைக்காத நிலையில், இப்படி மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு, ஒரே தடவையில் அந்தக் கட்டணங்களை அறிவிடுகின்றபோது, எமது மக்கள் அதற்கான நிதிக்கு எங்கே போவார்கள்? என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாத மின் கட்டணத்தையே செலுத்தவதற்கு பெரும் பாடு படுகின்ற எமது மக்களுக்கு இது ஒரு பாரிய தண்டனையாகவே அமைந்துவிட்டுள்ளது என்பதால், இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அவ்வாறு மின் கட்டணப் பட்டியல் நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை அம் மக்கள் மீளச் செலுத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதாவது, மின் கட்டணம் எத்தனை மாதங்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டதோ, அத்தனை மாத கால அவகாசத்தில் அந்தப் பாக்கித் தொகையை தவணை அடிப்படையில் மீள அறவி;ட்டால் மாத்திரமே எமது மக்களால் அதனை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரம், இனியும் இத்தகைய நிலை ஏற்படாத வகையில், அந்தந்த மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்கைள பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, உரிய வகையில் அதற்கான ஆளணிகளை நியமிக்குமாறும், மேலும் தற்போது வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையினைப் பொறுத்தமட்டில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், யாழ் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடை குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்நிலை மேலும் சீர் செய்யப்பட வேண்டியுள்ளது.

எமது நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் உற்பத்திகள் சொற்ப அளவிலேயே காணக்கூடியதான நிலையில், அதற்கான பல்வேறு திட்டங்களை வடக்கு மாகாணத்திலே மெற்கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன். குறிப்பாக, சூரியக்கள, காற்றலை, நீரலை, கிளிசீரியா போன்றவை மூலமான மின் உற்பத்தி முறைமைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான வளங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.

அதே நேரம், எமது பகுதிகளில் கடந்த காலங்களில் மின் வசதிகள் வழங்கப்பட்டு, அந்த வாய்ப்புகள் தாமதாகியிருந்த எமது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும், பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தகைய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திகள் குன்றியிருக்கின்ற எமது நாடு, இறக்குமதி மூலமான சக்திகளையே நம்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், காரணங்கள் எதுவாகக் கூறப்பட்டாலும், எரிபொருள் தட்டுப்பாடுகள் மீளவும் ஏற்பட வாய்ப்புகளை வழங்க வேண்டாம் என்ற ஒரு வேண்டுகோளை கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்ஹ அவர்களிடம் முன்வைத்துக் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சு தொடர்பில் எனது சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வசதிகள் கருதி, எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றையும், புதிய திட்டங்களையும் நான் முன்வைத்து வருகின்ற நிலையில், அவற்றில், பெரும்பாலானவற்றை செயற்படுத்தி, எமது மக்களது நலனில் அக்கறை எடுத்து வருகின்ற கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுக்கு முதலில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்தவகையில், நான் கடந்த வருட வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாத உரையின் போது முன்வைத்த முல்லைத்தீவு, நந்திக்கடல் புனரமைப்பு, மயிலிட்டித் துறைமுக புனரமைப்பு போன்ற திட்டங்கள் கௌரவ அமைச்சர் அவர்களால் சாத்தியமாக்கப்பட்டு கொடுக்கப்படவுள்ளன. தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த எல்லைத் தாண்டல் தொழிற் செயற்பாடுகள், அத்துமீறல் தொழிற் செயற்பாடுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. என்றாலும், அவை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் மீளவும் முன்வைக்க விரும்புகின்றேன்.
மேலும,; எமது கடற்றொழிலாளர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சிலவற்றை இங்கு கோரிக்கைகளாக முன்வைக்க விரும்புகின்றேன்.

யாழ் குடா கடல் நீர் ஏரியைப் பயன்படுத்தி, குருநகர், பாi~யூர், கொழும்புத்துறை, அரியாலை, கோவிலாக்கண்டி, தனங்கிளப்பு, சாவகச்சேரி, கச்சாய், பூநகரி, நல்லூர், மண்ணித்தலை, மண்டைதீவு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டி வருகின்ற நிலையில், இவர்களுக்கான கடற் போக்குவரத்தினை இலகுபடுத்தி, பாதுகாப்பினை வழங்கும் வகையில் எவ்விதமான நவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளும் இல்லாதுள்ளன.

இங்கு முன்பிருந்த வெளிச்ச வீடு, இடிதாங்கி என்பன சேதமாக்கப்பட்டுள்ள நிலையில,; இவை மீளப் புனரமைக்கப்படாததன் காரணமாக அண்மையில் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவத்துடன் இதுவரையில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டதாக வெளிச்ச வீடு, இடிதாங்கி என்பன அமைக்கப்பட வேண்டும்.

சுமார் ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற நெடுந்தீவில், ஒரு நாள் படகுகள், சிறிய படகுகள், தெப்பங்கள் என 600க்கும் மேற்பட்ட மீன்பிடிக் கலங்கள் உள்ளன. இந்த மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக கரை சேருவதற்கும் நங்கூரமிடும் தளமோ அல்லது ஏனைய பாதுகாப்பான வசதிகளோ இல்லாதுள்ளது. இதன் காரணமாக காற்று பலவாக வீசுகின்ற காலங்களில் இத்தொழிலாளர்களது படகுகள் அறுத்துக் கொண்டு பாறைகளுடன் மோதுண்டு சேதமாகி விடுகின்றன. எனவே, நெடுந்தீவுப் பிரதேசத்தில் வசதியானதொரு நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதார மையங்களாக விளங்குகின்ற, மாதகல் கடற்கரைப் பிரதேசத்திலுள்ள சம்பில்துறை, மாதகல்துறை மற்றும் குசுமந்துரை ஆகிய மூன்று மீன்பிடித் துறைமுகங்கள் சுமார் 30 வருட காலமாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. எனவே, மேற்படி மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

மேலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளுக்கமைய யாழ் மாவட்டத்தில் சுமார் 700, 19 அடி படகுகள் இதுவரையில் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவை அனைத்தும் இனங்காணப்பட்டு, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.

வடமராட்சி பகுதியில் கடந்த காலங்கள் வான் தோன்றுகின்ற நடவடிக்கைகள் சில மேற்கொண்டிருந்த போதிலும், அப் பகுதிக்குள் மேலும் 10 வான்கள் தோன்ற வேண்டியுள்ளன.
மேலும், வெளிச்ச வீடுகள் மற்றும் சுமார் 30 இறங்குதுறைகள் என்பன யாழ் மாவட்டத்தில்; அமைக்கப்பட வேண்டியத் தேவைகள் உள்ளன.

தீவகப் பகுதிகளில் சுழியோடி மூலமாகவே கடற்றொழிலாளர்கள் கடலட்டை அறுவடையில் ஈடுபடுகின்றனர். இதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிய வரும் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து, அனுமதி வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

குடா கடல் ஏரிகளில் சிலிண்டர் பாவனை முறைகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறிப்பாக, பாi~யூர் பகுதி கடற்றொழிலாளர்கள் களங்கண்டி முறையில் தொழில் செய்வதற்காக தடிகளைக் கொண்டு வருவதில் சட்ட ரீதியிலான தடைகளையும், பெரும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் உரிய ஏற்பாடுகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

அத்துடன், இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடியினை ஊக்கப்படுத்தும் வகையில் 55 அடிகளுக்கு கூடிய நீளமான பல நாள் படகுகளின் கொள்வனவுச் செலவில் 50 சதவீதத்தினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.

எமது பகுதியினைப் பொறுத்தவரையில், 55 அடிக்கு கூடிய படகுகளை இணைப்பதற்கான மீன்பிடித் துறைமுக வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதால், 36 அடி மற்றும் 36 அடிக்குக் கூடிய படகுகளுக்கு மேற்படி மானிய உதவிகளையும், அத்தகைய படகுகளைத் தயாரிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே பலமுறை கௌரவ அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன். எனினும் மேற்படி கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் பல இன்னமும் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முகத்துவாரம் முதல் நல்லதண்ணீர்த் தொடுவாய் வரையில் சுமார் 73 கிலோ மீற்றர் நீளமான கடற்கரையோரப் பகுதியில் 24 கடற்றொழிலாளர் சங்கங்களின் கீழுள்ள சுமார் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்றொழிலில் ஈடபட்டு வருகின்றன.

மேற்படி கடற்றொழிலாளர்கள், 1991ஆம் ஆண்டிலிருந்து தொடர் யுத்தம் காரணமாக கடற்றொழிலில் ஈடுபட இயலாத நிலையிலேயே இருந்துள்ளனர். 2002ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஓர் இடைவெளியில் ஓரளவு கடற்றொழிலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில,; 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தம் காரணமாக தங்களது தொழில் உபகரணங்கள், உறவுகள், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அதற்குப் பின்னரான இறுதி யுத்தமும் இவர்களை மேலும் அழித்தும், பாதித்தும் மீதியிருந்த உறவுகளையும் அழித்தும் விட்டிருந்தன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், 2010ஆம் ஆண்டு மீள்குடியேறி, பல்வேறு உதவித் திட்டங்களைப் பெற்று கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஒட்டுமொத்த பாதிப்புகள் அனைத்தையும் பெற்றுள்ள இம் மக்கள் தங்களது வளங்களில் பயன்பெறுவதற்காக தினமும் போராடி வருகின்ற ஒரு நிலையே இன்றும்கூட தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்திய கடற்றொழிலாளர்களது எல்லை மீறியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழிற் செய்கைகள் ஒரு புறமும், அத்து மீறியதும், தடை செய்யப்பட்டுள்ள முறைமைகளைக் கொண்டதுமான வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் தொழிற் செய்கைகள் மறுபுறமும் என இம் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேற்படி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் தொழில்களை மேற்கொண்டு வருகின்ற கொக்கிளாய் ஆறு, முகத்துவாரம், புளியமுனை போன்ற பகுதிகளில் வெளி இணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகுள், தடைசெய்யப்பட்ட வலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுவதால் மேற்படி கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி, அங்;குள்ள கடல் வளங்களும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளன. எனவே, இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் அவர்கள் அதிக அவதானத்தைச் செலுத்தி, அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வட்டுவாகல் ஆற்றின் இரு புறங்களும் படையினர் வசமிருப்பதால் அங்கு கடற்றொழிலாளர்களால் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாததொரு நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் கவனமெடுத்து, அத்தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மேலும், முல்லைத்தீவு வட்டுவாகல் சாலை கடற்கரையோரப் பகுதிகளை தொழில் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டு;ம்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்ச வீடு, இறங்குதுறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளன.

மேலும், முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். அதாவது நிபந்தனைகளை மீறிய வகையில் அட்டைத் தொழில், வெளிச்சம் பாய்ச்சுதல், சுருக்கு வலை பயன்பாடு, உழவு இயந்திரங்களால் கரைவலை வளைத்தல் காரணமாகப் பல கடற்றொழிலாளர்கள் பாதிப்படைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

மொத்த சனத் தொகையில் 17 வீதமானவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில் சார்ந்த பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதற்குரிய தேவை தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் அவதானத்தைச் செலுத்தி, அதற்குரிய வாய்ப்புகளை ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கையினை உரிய அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்தால,; அது அவருக்கும் பெருமையாக இருக்கும், எமது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 205 கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படுகின்ற சுமார் 128 கிலோ மீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 389 கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மற்றும் தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழிற் செய்கைகளால் மேற்படித் தொழிலாளர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திலும், அதிகமான கரையோரப் பகுதிகளில் இறங்குதுறை வசதிகளின் இன்மையும் காணப்படுகின்றன. இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு உரிய தொழில் உபகரணங்கள் அற்ற நிலைமையும் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 750 குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. வறட்சி காலநிலை ஏற்படுகின்றபோது, இக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்காக மிகவும் பாதிப்புகளுக்குள் தள்ளப்படுகின்றன. அக்கால கட்டத்தில் இம் மக்களுக்கான நிவாரணங்கள் தேவைப்படுகின்றன.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர வேணடும் என்பதே எமது கொள்கை சார்ந்த நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அதற்காகவே நாம் அன்றும், இன்றும் இரவு, பகல் பாராது உழைத்து வருகின்றோம். எமது மக்களது பிரச்சினைகள் தீர்ந்தால் எமது அரசியல் இருப்பு பறிபோய்விடும் என நாங்கள் ஒருபோதும் – ஏனைய சுயலாப தமிழ் அரசில்வாதிகளைப் போன்று அச்சமடைந்ததில்லை. அவ்வாறு அச்சமடைந்திருப்போர்களால்தான் எமது மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல், தொடர்கின்றன. எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்ப்பதுதான் எமது அரசியல் செயற்பாடுகள் என்றே கருதி நாம் உழைக்கின்றோம்.

கடந்த காலங்களில் எமக்கு அரசியல் அதிகாரங்கள் இருந்த நிலையில், அந்த அதிகாரங்களை எமது மக்களது நலன்கள் கருதியே பயன்படுத்தி வந்திருக்கின்றோம். தற்போது எம்மிடம் அத்தகைய அரசியல் அதிகாரங்கள் இல்லாத நிலையில், எமது மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சபையின் ஊடாக அரசாங்கத்தின் அவதானத்திற்குக் கொண்டு வந்து, போதியளவில் அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில், இந்த அரசாங்கம் எமது மக்கள் சார்ந்து நாம் முன்வைக்கின்ற நியாயமான கோரிக்கைகளை இயன்றவரையில் நிறைவேற்றி வருவது தொடர்பில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியினை இந்த அரசுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தல்கள் வரும்போது மாத்திரம் அரசியல் பதவிகளைப் பிடித்துக் கொள்வதற்காக கூட்டு சேர்ந்துக் கொள்வதற்கு முண்டியடிக்கின்ற தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தீர்ப்பதிலும் கூட்டு சேர்ந்திருந்தால், இன்று இந்த அரசுடன் கூட்டு சேர்ந்திருக்கின்ற நிலையில் முன்வந்திருந்தால், எமது மக்களின்ப பிரச்சினைகள் எவ்வளவோ இதுவரையில் தீர்ந்திருக்கும்.

ஆனால், அவர்களுக்கு அது தொடர்பில் அக்கறையும் இல்லை, ஆளுமையும் இல்லை, முயற்சிகளும் இல்லை.

இத்தகைய நிலையில், அரசியல் அதிகாரங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனியொருவனாக நின்றேனும், எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலேயே நான் இருக்கின்றேன்.

அந்த வகையில், எமது மக்கள் நலன்சார்ந்த எனது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த அரசு மேலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

Related posts: