திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

10.-1-300x229 Thursday, March 9th, 2017

இலங்கையின் தொன்மை பற்றி ஆராய்ந்துள்ள வரலாற்றாசிரியர்களால் கி. மு. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படுகின்ற திருக்கோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயமானது தொன்றுதொட்டு இந்து பக்தர்களால் வழிபட்டு வருகின்ற புனிதஸ்தலமாகும். விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கையில் 5 சிவாலயங்கள் இருந்ததாகவும், அதிலொன்றே திருக்கோணேஸ்வரர் ஆலயம் என்றும், ஆய்வாளரான திரு. பீ. எம். பீரிஸ் அவர்கள் எழுதியுள்ள (Nagadipa and Buddhist Remains in Jaffna) எனும் நூலில் 17 – 18ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆலயத்தின் சிறப்பினை மேலும் மேலோங்கச் செய்யும் வகையில், அதனை புனரமைத்து, பக்தர்களுக்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் மேற்கொண்டு, இந்து பக்தர்களது மிக முக்கிய வழிபாட்டுத் ஸ்தலங்களில் ஒன்றாக மாற்றியமைக்கும் நோக்கில்,

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தையும், அது சார்ந்த 378 ஏக்கர் நிலப் பரப்பையும் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா . 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! - டக்ளஸ் தே...
மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது - டக்ளஸ் த...
நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...