செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே!

இது சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதியவர்களுடனும் திருமதி பேரியல் அஷ்ரஃப் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்

இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற பள்ளிவாசல்களை அண்டிய இடங்களில் சிலர் வந்து குடியிருக்கின்றாhகள். அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் அங்கள்ள பள்ளிவாசல்கள் சிலவற்றை நாங்கள் புனரமைத்திருக்கின்றோம்.

இன்று நயினாதீவைப் பொறுத்தவரையில் அங்குள்ள பள்ளிவாசலை நாங்கள் புனரமைப்புச் செய்திருக்கின்றோம். அதைவிட யாழ்ப்பாணப் பட்டணத்தில் உள்ள ஒரு சில பள்ளிவாசல்களும் புனரமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. எங்களுடைய பேச்சுவார்த்தை வெற்றியளிக் குமாயின் அவர்களின் புனர்வாழ்வுக்கான பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பன தொடர்பான பேச்சுவார்த்தை களை ஏன் ஆரம்பிக்கக்கூடாது என்ற வினாவையும் இங்கு எழுப்ப விரும்புகின்றேன். புலிகளின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்காமல் ஜனநாயக அரசியல் சக்திகள் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வடிவமைக்கவும் அமுல்படுத்தவும் முன்வரவேண்டும். இந்த நடைமுறையைத் துரிதப்படுத்துவதன் மூலமாக போரை நிரந்தரமாக நிறுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வை கட்டியெழுப்ப முடியும் என்பதுவே எமது நம்பிக்கை.

மேலும் ஒரேயொரு விடயத்தை மட்டும் இங்கு சுட்டிக் காட்டி எனது உரையை நிறைவு செய்ய ஆசைப்படுகின்றேன். நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருப்பது அதிகாரத்தைக் கைப்பற்றதலுக்கான போட்டிக்காக அல்ல நாங்கள் பதவிகளையும் பொறுப்புக்களையும் தேடிச் சென்று எட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் இல்லை. நாங்கள் பதவிகளில் நீடித்துக் கொண்டிருப்பது சுகபோகமான  வாழ்வுக்காகவும் அல்ல.

தமிழ் பேசும் மக்கள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமாதான சக வாழ்வை பெற்றுக் கொள்வதற்காகவும் அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை என்பவற்றுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு எதிராக தமிழ் பேசும் மக்களின் அடிப்படை நலன்களை நிலைநாட்டுவதற்காகவுமே எங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகின்றோம். தொலை நோக்குப் பார்வையும் இயாலாமையும் நிரம்பிய சக்திகள் எங்களுடன் ஒத்துழைக்க முன்வராவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் அவதூறுகளை பரப்பாதிருப்பார்களாயின் அதுவே தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யக்கூடிய பேருதவியாக அமையும்.

தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே எமது நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நாங்கள் அனைவரும் இச் சபைக்கு தெரிவு செயயப்பட்ருக்கின்றோம். நாட்டின் எதிர்கால நலன்களை முன்னிறுத்தி தனிப்பட்ட அரசியல் போட்டிகள் குறுகிய கட்சி நலன்கள் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு எதிர்காலம் குறித்த தெளிவான பார்வையுடன் செயற்பட வேண்டிய பொறுப்பும; கடமை யும் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது. எனவே மக்களின் வாக்குகள் மூலமாகச் சுமந்துகொண்டிருக்கும் இப் பொறுப்புக்களை நாம் செவ்வனே ஆற்ற வேண்டியவர்கள் ஆவோம். அதன் மூலமாக, இந்த நாடு எதிர்நோக்கி கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு உறுதியான இறுதித் தீர்வை நிலைநாட்டும் திடசித்தமும் அர்ப்பணிப்பும் இத்தேசத்தின் பெருமைமிக்க பொறுப்பாளர்களுக்கு இருக்கின்றது என்பதை அகில உலகத்திற்கும் பிரகடணம் செய்வோமாக, இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் சாத்தியமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் பாதுகாப்புச் செலவீனத்தைப் பெருமளவில் குறைக்கின்றதும், துண்டு விழும் தொகையை கணிசமான அளவு குறைக்கின்றதுமான ஒர் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சு சமர்ப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உதவுவோமாக. இத்துடன் எனது உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி. வணக்கம்.

 20 மே 2000

Related posts:

உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...