செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 2012.05.20 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 5th, 2012

கௌரவ பிரதித் தவிசாளர் அவர்களே!

இச்சபையிலே எனது பொறுப்பிலுள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு பற்றிய குழுநிலை விவாதத்தில் கலந்த கொண்டு உரையாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கைகைய ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுகின்ற தொலைநோககினை மையமாகக் கொண்டு 2012ம் அண்டுக்கான வரவு செலவுத்திட்ம் மேதகு ஜனாதிபதி மஹிந்த சிந்தனை தொலைநோக்கு அமைவாக பாரம்பரிய கைத்தொழில்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி  அபிவிருத்திகளை ஊக்குவிப்பதனூடாக கிராமியப் பொருளாதாரச் செயற்பாடகளை மேம்படுத்தி கிராமிய மக்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு இந்த அமைச்சானது பங்களிப்பச் செய்து வருகின்றது.நான் பொறுப்பேற்றிருக்கும் இந்த அமைச்சு இலங்கைத் தீவில் வாழும் சகல இன மத சமூக மக்களுக்கும் உரித்தான ஓர் அமைச்சாகும். எமது மக்கள் இன்றிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை விடவும் அதி கூடிய விருப்பு வாக்ககளை எனக்கு வழங்கித் தமது பிரதிநிதியாக என்னை இந்த நபாhடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திரப்பதாலும் தமிழ் மக்கள் சார்பான வாக்னெத் தம்மை அடையாளப்டுத்திக் கொண்டு இந்த நாடாளுமன்றத்தில் குந்தியிருப்பவர்கள் எமது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமது சுயலாப சிந்தனையை மட்டும் கருத்திற்கொண்டு செயற்படுவதனாலும்.(இடையீடு)

தமிழ் பேசும் மக்களின் அன்றாடப் பிரச்சிகைள் முதற்கொண்டு அபிவிருத்திதி மற்றும் அரசியலுரிமைப் பிரச்சினை வரை அனைத்துக்கும் தீர்வு காணவேண்டிய வரலாற்றக் கடமையை நாமே சுமக்க வேண்டியுள்ளதனாலும் தமிழ் பேசம் மக்;களின் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய காலத்தின் கட்டாயக் கட்டளையை ஏற்று நான் எனது உரையை நிகழ்த்த விரும்புகின்றேன். அதற்காக நான் எனைய சகோதர மக்களின் அமைச்சினூடாக ஆற்றவேண்டிய சேவைகளையோ நிறைவேற்றப் பின்நிற்கப்போவதில்லை. சிஙக்ளச் சகோதர மக்களின் உறவுக்கு கரம் கொடுப்போம். தமிழ் பேசும் மக்;கிளன் உரிமைக்கு குரல் கொடுப்போம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்;களின் ஐக்கியமே அரசியலுரிமைப் பிரச்சினைகள் திறவுகோல் இதுவே. உண்மை இதுவே. யதார்ததம் இதன்மூலமே இங்கு நிரந்தர அரசியல் சமவுரிமையும் நீடித்த அமைதியும் நிலவ முடியும்.

எனது அமைச்சானது மிகுந்த சிந்தனையின் இலக்குகளை அடைவதற்கான பங்களிப்பை வழங்கி வருகின்றது. அவையாவன, ஆண்டுதோறும் ஐயாயிரம் சிறுதொழில்முயற்சிகளை தரமுயர்;த்துதல் மற்றும் 200 நடுத்தர அளவிலான தொழல்முயற்சிகனைப் பரிய அளவிலான தொழில்முயற்சிகளாக தரமுயர்த்துதல், 81000குடிசைக் கைத்தொழில் சார்ந்த மனைப் பொருளாதாரத்திற்கு உந்துசக்தி அளித்தல் தேசிய கைம்பணியானர்களைப் பாதுகாப்பற்காகக் கைவினைக் கைப்பணிக் கிராமங்களை ஸ்தாபித்தல். தேசிய கைப்பணியானர்களுக்கான தொழில் நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குதல், பனை மற்றும் கித்துள் கைத்தொழிற்சாலை அபிவிருத்தி செய்தல், ஆணையிறவு உப்பளத்தை மீள இயங்கவைப்பதனூடாக உப்புக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல் கடற்தொழிலாளர் சமூகத்தின் பருவகாலத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டுத் தரமான மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்தல் என்பனவாகும்.

இலங்கையின் தொழில்முயற்சிகளில் 80-90 சதவீதமானவை  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளாகும். மஹிந்த சிந்தனை – எதிர்காலத் தொலைநோக்கானது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதுகின்றுது.(இடையீடு) தற்பொழுது இவற்றில் சிலவற்றை செய்துகொண்டும் இருக்கின்றோம். நான் எற்கனவே கூறியதுபோல் நாங்கள் இந்த வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்;களுக்கு பல உதவிகளை செய்ய இருக்கின்றோம்.(இடையீடு) இல்லை இல்லை. இதனைச் செய்வதற்கு என்னுடைய அமைச்சு மாதிரமல்ல. பல அமைச்சுக்கள் இருக்கின்றன.நாங்கள் உரிய அமைச்சக்களிடமிருந்து அதற்கான நிதியினைப் பெற்றுக் கொள்வோம்.(இடையீடு) மாண்புமிகு உறுப்பினர் அவர்களே நித்திரை கொள்பவைனை எழுப்பலாம் ஆனால் நித்திரை கொள்வது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது என்று சொல்லுவர்கள்தானே.(இடையீடு)எது?

ஆனால் நித்திரை கொள்பனைத்தான் எழுப்பலாம். நித்திரை கொள்வதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது. உரிந்து போன எமது தேசத்திலிருந்து நலிந்துபோன எமது மக்களின் சார்பாக சமாதானப் புறாக்களை கைகளில் ஏந்தியே இந்த நாடாளுமன்றத்தில் வீரப் பேச்சுக்களைப் பேசி தமிழ்மக்களை அழிவுக்குள் தள்ளிவிட்டு அவர்களை நட்டாற்றில் கைவிட்டுப்போன தலைமைகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற நாற்காலிக் கனவுகளுக்காக மட்டும் தமிழ் பேசும் மக்களின் நரம்புகளை முறுக்கேற்றி அவர்களது வாக்களை மட்டும் அபகரித்துக் கொண்டிருக்கும் சுயலாப தலைமைகளுக்கு மத்தியிலும் புதிய உத்வேகத்தோடு புதிய சிந்தனையோடு சுயலாபங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டவர்களாக அன்றி உணர்வுபூர்வமாக எதையும் நடத்தி முடிக்கும் நடைமுறை யதார்த்த எண்ணங்களோடு மட்டுமே நாம் இந்த நாடாளுமன்றத்துக்கு வந்தோம்.(இடையீடு) மாண்புமிகு றிஸாத் பதியுதீன் அவர்களே அந்தப் பக்திதில் யார், யார், வாய் அடிக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளங்கள்.(இடையீடு) கௌரவ உறுப்பினர்களே நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேட்டிடுக் கொண்டிருந்தால் அது உங்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.

நான் அரசாங்கத்தில் அமைச்சராகப் பங்கெடுத்திருப்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அது ஓர் அரசியல் துணிச்சல் மிக்க வரலாற்று நிகழ்வு.நாம் 1994ல் இந்த நாடாளுமன்றத்தில் முதன்முதலாக அங்கம்வகிகக் தொடங்கினோம். ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்குமாறு எமக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் நாம் அப்பொது அதை ஏற்க வில்லை. ஒரு நிரந்தர அரசியல் தீர்வினூடாக தமிழ் பேசும் மக்களின் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு காணவே நாம் முயன்று கொண்டிருந்தோம்.அதேவேளை எமக்குக் கிடைத்த நாடாளுமன்ற அதிகாரங்களைச் சரிவரப் பயன்படுமுத்தி எமது மக்களின் அன்றாட அவலங்களுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்குமாக உழைத்துக்கொண்டிருந்தோம்.அப்போது இந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்த சக தமிழத் தலைமைகள் தமது சுயலாப நோக்கங்களுக்காக அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கவில்லை. அன்றைய அரசால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்க்கட்சிகளோடு இணைந்து வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்ம் நடத்தி எதிர்த்ததுடன் நாடாளுமன்றத்தில் அந்த அரசியல் தீர்வு நகலை எரித்து அழிக்கும் துரோகத்தனங்களுக்கும் துணை சென்றன என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இதனால் எமது மக்களகுக்கான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சிகள் தீராப் பிரச்சினையாக நீடித்தச் சென்று கொண்டிருக்கின்றன. நலிந்தபோன எமது மக்களின் அவலங்களும் துயரங்களும் ஒழிந்துபோவதற்குரிய எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை. எமது மக்;களை அன்றாட அவலங்களில் இருந்த பாதுகாப்பதற்கும் அவர்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருதியால் தூக்கி நிறுத்தவதற்கும் அரசாங்கத்தில் பங்கெடுப்பதைத் தவிர வேறு வழி எமக்கு இருக்கவில்லை. இதேவேளை தமிழ் பேசம் மக்கள் சார்பாக அரசிலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நல்லெண்ண சமிக்ஞைகள் எதுவும் இல்லாதிருந்த ஒரு சூழலில் அரசியல் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் யாவும் சக தமிழ்; தலைமைகளால் இறுக மூடப்பட்டிருந்த வேளையில் எமது மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கவும் அரசாங்கத்தின்  அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டிய வரலாற்றுக் கடமை எனக்கு ஏற்பட்டது.

இன்று மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கது அரசாங்கத்தில் இங்கம் வகிப்பதைப்போலவே நான் அன்றைய அரசாங்கத்திலும் அங்கம் வகித்திருந்தேன். கோட்டை கொத்தளங்கள் எமக்கு அழுத்தம் கொடுத்தன. அவர்களின் மனித வெடிகுண்டுகள் எமக்கு அச்சுறத்தல் விடுத்தன. ஆனாலும் நான் ஏற்றக்கொண்ட இலட்சியத்தை கைவிட்டுத் தடுமாறி நிற்கவில்லை. சுதந்திரம் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிய எமது மக்கள் சோறுகூட இல்லாமல் தவித்தனர். இதனால் எமது மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை நாம் பெற்றுக் கொடுத்தோம்.எனது அமைச்சரவை அந்தஸ்தைப் பயன்படுத்தி எமது மக்களுக்கான அபிவிருத்;திப் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கினோம். இன்று இந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் உட்பட சுயலாப தமிழத்  தலைமைகள்; யாவும் நாம் எமது மக்களுக்குச் செய்த பணிகள் அனைத்தையும் சலுகைகள் என்று வசை பாடியவர்கள். எம்மைத் துரோகிகள் எனத் தூற்றினார்கள். தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று நாங்கள் எமது பணிகளைத் தொடர்ந்தோம். அவர்களுடைய அவலங்களிலிருந்து காப்பாற்றவது துரோகம் என்றால் எமத மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அபிவிருத்தியால் தூக்கிநிறுத்தும் பணிகள் யாவும் துரோகம் என்றால் நடைமுறைச் சாhத்தியமான வழிமுறையில் நாம் எமது மக்;களுக்கான அரசியல் உரிமைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சிகள் யாவும் துரோகம் என்றால் அவர்கள் கூறும் துரோகம் என்ற தூற்றலை நாங்கள் அர்ப்ணங்களாக மாற்றி எமது கொள்கைகளுக்காக ஏற்றக் கொண்டு இன்றவரை எமது மக்களுடன் சார்ந்தே உழைத்து வருகின்றோம். எமது மக்களுக்காக எடுத்துக் கொண்ட தீர்க்கதரிசனமான முடிவுகளுக்காக நாம் அதிக விலைகளைச் செலுத்தியிருக்கின்றோம். இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டத்திலிருந்து தொடங்கி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அதனை மென்மேலும் வளர்தெடுத்து எமது இலக்கை அடைவதே தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்றும் அதுவே நடைமுறைச்சாத்தியம் என்றும் நாம் தீர்க்தரிசனமாக அன்றே தெரிவித்துவிட்டோம். இதனை அன்று கொச்சைப்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று இதே 13வது திருத்தச் சட்டம் குறித்தே அரசாங்கத்துடன் பேசி வருகின்றார்கள்.(இடையீடு) நீங்கள் எவரும் அதிலே கலந்து கொள்ளவில்லை. அதனால் உங்களுக்குத் தெரியாது.

கௌரவ பிரதி தவிசாளர் அவர்களே அன்றிலிருந்து இன்று வரை நாம் அரசியல் துணிச்சலுடன் செயற்பட்டு வருகின்றோம். அதன் காரணமாகத்தான் இன்று அமைச்சரவையில் பங்கெடுத்து நான் இயன்றவரை எமது மக்களுக்காகச் சேவையாற்றி வருகின்றேன். அரசியல் துணிச்சலற்ற வெறும் வாய்ச்சொல் வீரர்களால் எமது மக்களுக்கான எந்தவொரு தீர்வைiயும் பெற்றுத் தந்துவிட முடியாது. எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதையும் எமது மக்களுக்கான அபிவிருத்;திப் பணிகளை சலுகைகள் என்று கொச்சைப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இந்தச் சபையில் ஆலயங்களுக்கு நிதி வழங்குமாறும் வீதிகளைத் திருத்துமாறும் கோருகின்றார்கள். கல்வி வளர்ச்சி குறித்து பேசுகின்றார்கள். இது ஒரு வேடிக்கiயான நிகழ்வு(இடையீடு). ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதைப்போன்று இன்று எமது மக்கள் மக்களுக்காகப் பரிந்து பேசுவது போன்று அவர்;கள் பாசாங்கு செய்கின்றார்கள். உண்மையில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களைச் சந்திக்க வேண்டும் என்றும் எமது மக்களுடைய தேவைகள் எவையும் பூர்த்தி செய்யபட்டு விடக்கூடாதென்றும் அரசியல் தீர்வின்றித் தொடர்ந்தும் எமது மக்கள் ஏமாற்றபட்டவர்களாக இருக்க வேண்டுமென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புகிறார்கள்.(இடையீடு) எமது மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக்கி அதனை சூடேற்றி அடுத்த தடவையும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிவிடவேண்டும் என்ற பதவி மோகமே அவர்களிடம் தெரிகிறது. அதற்காகவே அரசாங்கத்தை எதிர்ப்பதுபோன்று வெளியே நாடகமாடுகிறார்கள்.

கௌரவ பிரதித் தவிசாளர் அவர்களே!

நான் எனது அமைச்சு குறித்த உரையாற்றுவதற்கு முன்னர் ஒரு வரலாற்;றையே சொல்லவேண்டியேற்பட்டுள்ளது. எனவே நான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். நானும் நினைத்திருந்தால் இந்த அரசாங்கத்தை எதிர்ப்பதைப்போன்று வெளியே வரம் காட்டிவிட்டு உள்ளே வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப்போன்ற அமைசச்சர்களுடன் சேர்ந்து கிரிக்கற் விளையாடி இருக்கலாம். ஆனால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் கிரிக்கற் விளையாட்டுப் போன்றதல்ல.(இடையீடு) நாங்கள் பாடசாலை யில் படித்த காலங்களில் கிரிக்கற் விளையாடினோம். உங்களுக்கு அந்த அனுபவங்கள் இல்லாதபடியால் நிங்கள் அப்படிக் கதைக்லாம்.

ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் பிரைச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறை என்பது வெளியே வீரப்பேச்சும் உள்ளே வந்து தலைகுனிந்து வளைந்து நின்று சலுகைகளைப் பெறுவதுமான சந்தர்ப்பவாத அரசியல் அல்ல. நான் அரசாங்கத்துடன் வெளிப்படையாக கைகுலுக்கி நிமிர்ந்து நின்றுதான் பேசிக்கொண்டிருக்கின்றேன். எம்மைப்போல் சகலரும் வந்து பேசட்டும். நாம் அதனை வரவேற்கின்றோம். நானும் நினைத்திருந்தால் எமது மக்களுக்கான அரசியலுரிமை குறித்தும் அவர்களுடைய அவலங்கள் குறித்தும் பேசிவிட்டு எமது மக்களைச் சொந்த மண்ணிலே தவிக்கவிட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணங்களை மெற்கொண்டிருக்காலம். கொழும்பில் ஆடம்பரமான மாளிகைகளில் படுத்துத்தூங்கியிருக்காலம்.வெளிநாடுகளுக்கச் சென்று பிச்சைப் பாத்திரங்களும் ஏந்தியிருக்கலாம்.ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையென்பது உல்லாசப் பயணங்களோ அல்லது ஆடம்பர விளையாட்டுக்களோ அல்லது ஆடம்பர மாளிகைகள் படத்துறங்கிக்  குறட்டைவிட்டுத் தூங்கும் சோம்பேறித் தனங்களுமல்ல.(இடையீடு) எக்காலத்திலும் எமத மக்களைவிட்டு எங்கும் ஓடிப்போகமல் எமது கூட்டமைப்பும்  எமது மக்;கள் மத்;தியில் இனியாவது வந்துநின்று அவர்களுடைய நலன் சார்ந்து உழைத்தால் அதனை நான் வரவேற்பேன்.(இடையீடு) சிங்களம் ஒருபோதும் தீர்வு வழங்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்றார்கள். ஆனாலும் தமிழ்  தேசியக் கூட்டமைப்பினரும் அவர்களைச் சார்ந்தவர்களும்  சிங்களச் சகோதர மக்;களோடு திருமண பந்தங்களும் ஒன்றுகூடியிருக்கிறார்கள்.(இடையீடு)அது உங்களுக்கத் தெரியமோ என்னவோ தெரியவில்லை.(இடையீடு)

பாரம்ரிய கிராமியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி களைப் பலப்டுத்தம் நான் குறிப்பிடும் அபிவிருத்தி உபாயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவையாவன புதிய மற்றும் மிகப் பொருத்தமான தொழில் நுட்பத்தை கிராமியக் கைத்தொழில்கள் மற்றும் கைம்பணித் துறைக்கு வழங்குதல். உற்பத்தியாளர்கள் மத்தியில் போட்டி ரீதியான அனுகூலங்களைப் பெறும்பொருட்டுத் தொழில் முயற்சி முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான திறன்களைப் பரிமாறுதல்.(இடையீடு) கடைசியில் உங்களைப் பற்றிப் பேச வருகின்றேன். சந்தையில் போட்டி போடக்கூடிய வகையில் சந்தை நோக்கிய புதிய வடிவமைப்புக்களை அறிமுகப்டுத்தி சம்பந்தப்பட்டவர்களை வலுவூட்டல், பிராந்திய தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கண்காட்சிகளையும் வர்த்தக சந்தைகளையும் கொள்வனவாளர், விற்பனையாளர் சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்வதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கல், உற்பத்தித் திறனையும் உற்பத்திகளையும் அதிகரிக்கச் செய்யம்பொருட்டு இயந்திர மற்றும் ஏனைய வசதிகளை வழங்கல். தேசிய மட்டத்தில் ஆக்கத்திறனையும் திறமைகளையும் மதிப்பீடு செய்யும் விருது வழங்கல். பாராட்டுதல், கௌரவித்தல் மற்றும் அவர்களது ஆர்வத்தை நிலைபெறச் செய்தல், தேசிய மற்றும் உபதேசிய விருதி வழங்கும் வைபவங்களில் திறமைச் சான்றிதழ்கள் பணப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கல். சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை மேம்படுத்தும் பொருட்டு முனைப்புடனான தனியார்துறைப் பங்களிப்பின் உதவியோடும் பெறுமதி சேர்க்கபட்ட கைப்பணி சார்ந்த பாரம்பரிய கிராமியக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல், கடன் வசதிகளை  வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.சிறு கைத்தொழில்களுக்கு உதவும் பொருட்டு கிராமய மட்டத்தில் விரிவாக்கல் சேவைகளையும் கடன் வசதிகளுக்கான கருத்திட்ட அறிக்கைகளுக்கு உதவியளித்தல், கடன் வசதிகள் தொழில்நுட்ப தகவல் மதியடைச் சேவைகள், ஆய்வுகூடச் சேவைகள் தரச் சேவைகள், நடமாடும்  பயிற்சியளிப்புக்கள் அத்துடன் பொதுச்சேவை நிலையங்களையும் வழங்கல்.

எனது அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் கஹிந்த சிந்தனை இல்ககுகளை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றகின்றன. அவையாவன, தேசிய அருங்கலைகள் பேரவை, வடிவமைப்பு நிலையம், கைத்தொழில் அபிவிருத்தி சபை? பனை அபிவிருத்தி சபை, வடகடல் நிறுவனம், ஆனையிறவு உப்பளம் என்பனவாகும்.

அடுத்த வாழ்வு எழுச்சி மனைப் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை பொறுத்தவரையில்  எனது அமைச்சானது கொத்தணி அணுகமுறையைப் பயன்படுத்தி ஏனைய கைத்தொழில் சார்ந்த அமைச்சுக்களான கைத் தொழில் அபிவிருத்;தி மற்றம் வணிக அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சு  அரச வளங்கள் தொழில்முயற்சி  அபிவிருத்தி அமைச்சு ஆகியன அவற்றின் கீழ் வருகின்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இது 14 நிறுவனங்களுடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் அனைத்து மாவட்டங்களிலும் நாடளாவிய ரீதியில் குடிசைக் கைத்தொழில் தொடர்பிலான வாழ்வு எழிச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை அமுல் படுத்துவதில் பிரதான பங்கை வகிக்கின்றது. இந்த உபாயமானது ஐந்து படிமுறைகளைக் கொண்ட அணுகுமுறையாகக் காணப்படுகின்றது.அதாவது தொழில்நுட்ப காட்சிப்படுத்தல் மற்றும் விழிப்பணர்வு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான மாதிரிக் கண்காட்சி கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கியவாறு ஹோமாகவலி நடத்தப்பட்டது. இப்பரீட்சார்த்த அனுபவத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்குகின்ற வகையில் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டள்ளது. தொழில்நுட்பக் காட்சிப்படுத்தல் மற்றும் வழிப்புணர்வூட்டல் நிகழ்ச்;சித்திட்டம் கிராமமக்கள் பொருத்தமான குடிசைக் கைத்தொழிலைத் தெரிவு செய்வதற்கு உதவுகின்ற வகையிலான மாவட்ட மட்டத்திலான கண்காட்சிகள் இடையீட்டு நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைக்கும் பொருட்டு பயனாளிகளின் தேவை மதிப்பீட்டைப் பெறும் பொருட்டும் நிகழ்ச்சித்திடங்களை நடத்தல் பயனாளிகளுக்குப் பயிற்சியளித்தல் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் (இடையீடு)

சலுகைக் கடன்களைப் பெறுவதற்கு உதவுமுகமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மனைப்பொருளாதாரக் கைத்தொழில் மக்களின் நிலைத்திருத்தலை மேம்படுத்தும் பொருட்டே தனியார்துறை மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் ஈடுபாட்டுடன் உப  – ஒப்பந்த ஏற்பாடுகளின் ஊடகச் சந்தைத் தொடர்பூட்டல்களை வழங்கல்.

2011ம் ஆண்டில் கொழும்பு, அநுராதபுரம், யாழப்பாணம், கேகாலை, கம்பஹா, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, மன்னர், மொனறாகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், பதுளை, ஆகிய 13 மாவட்டங்களில் தொழில்நுட்ப காட்சிப்படுத்தல் கண்காட்சியை நடத்துவதற்குத் திடமிடப்பட்டுளது ஏனைய மாவட்டங்கள் 2012ல் உள்வாங்கப்படும் 10 மாவட்டங்களில் முன்னேற்பாட்டுக் கூட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை, கம்பஹா, மொனாராகலை, புத்தளம் ஆகிய 7 மாவட்டங்களிலும் கண்காட்சிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.கொழும்பு மாவட்டத்தில் 4435 நபர்களும் அநுராதபுரத்தில் 2810 நபர்களும் யாழ்ப்பாணத்தில் 4500 நபர்களும் கேகாலையில் 8650 நபர்களும் கம்பஹாவில் 4750 நபர்களும் மொனாரகலையில் 800 நபர்களும் இக்கண்காட்சியைப் பார்வையிட்ட குடிசைக் கைத்தொழில் முயற்சிகளைத் தெரிவுசெய்து தங்களுது அக்கறைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.(இடையீடு)

அந்ந மக்களுக்கு தேவை இருக்கிறதுதானே, நீங்கள் அடிக்கடி காசு ஒதுக்கவில்லையென்று கதைக்கிறீர்கள் யுத்தத்தால் பாதிக்கபட்ட பகுதியில்தான் அதிகமான மக்கள் வருகிறார்கள். அது தவிர்க்க முடியாததுதானே, அந்த உண்மைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதையெல்லாம் மறுத்துதான் நீங்கள் தைத்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த 7 மாவட்டங்களிலும் தேவை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவது டன் பயிற்சி நிகழ்ச்;சித்திட்டங்களும் தொழில்நுட்ப பரிமாற்றமும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மத்திய வங்கியுடன் இணைந்த அரச மற்றும் தனியார் வங்கிகளுடள் குடிசைக் கைத்தொழில்களுக்கான கடன் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மஹிந்த சிந்தனை  – எதிர்கால தொலைநோக்கு அமைவாக குடிசைக் கைத்தொழில் மனைப் பொருளாதார அலகுகளை உருவாக்கி கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கு பங்களிப்புச் செய்த ஒரு வளமான இல்லத்தை ஏற்படுத்தி செழிப்பான தாயகத்தை கட்டியெழுப்பி இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுகின்ற மஹிந்த சிந்தனை இலக்கப் பங்களிப்புச் செய்கின்ற இத்திடத்தினை நடைமுறைப்படுத்தும் பங்காளயாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை தொழில் முயற்சியாண்மை கலாசாரத்தை விரிவாக்கி வளர்க்கும் ஒரு திட்டமாக நான் நோக்குகின்றேன். இந்தப் பயனுள்;ள அபிவிருத்திப் பாதையானது நிலைத்து நிற்கக்கூடிய ஒரு வளமான இல்லத்தைக் கட்டியெழுப்ப வசதி செய்வதுடன் ஓர் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவதாகவும் அமையும்.

கௌரவ பிரதித் தவிசாளர் அவர்களே அச்சவேலி கைத்தொழில் பேட்டையானது யாழ்ப்பாளத்தின் அச்சவேலி பிரதேசத்தில் 65 ஏக்கர் காணியில் 1970ம் அண்டில் ஸ்தாபிக்கபட்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையினரால் முகாமைத்தவும் செய்யபட்டது. இதில் 36 கைத்தொழில் அலகுகள் 25ஏக்கர் காணியில் இயங்கிவந்தன. கட்றத போர்ச் சூழ்நிலை காரணமாக அழிக்கபட்ட இக்கைத்தொழில் பேட்டையை மீனக் கட்டியெழுப்புவதற்கு இந்திய சிறு நன்கொடை அபிவிருத்தி உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 174மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி உதவி பெறப்பட்டது. இலங்கை அரசாங்கம் 25மில்லியன் ரூபாயை வழங்கியது. நிலக்கண்ணி அகற்றல் மற்றும் காணியைத் துப்பரவு செய்தல் என்பன பூர்த்தி செய்பட்டுள்தோடு நிர்வாகக் கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளின் நடைபெற்று வருகின்றன. மண் பரிசோதனை நீர்தரப் பரிசோதனை மற்றும் ஆரம்ப சுற்றாடல் பரிசோதனை ஆகியன மேற்கொளளப்பட்டுள்ளன.(இடையீடு)

கௌரவ பிரதித் தவிசாள் அவர்களே!

தமிழ் பேசும் மக்;களின் பிரச்சினைகள் வேறு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினை வேறு.(இடையீடு) இதனை அடிக்கடி சொல்லவேண்டும். இவ்வாறு அடிக்கடி சொன்னால்தான் அது நன்றாக மனதில் பதியும். தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சமவுரிமை சதந்திரம் பெற்று வாழ விரும்புகிறார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக நீடிக்கச் செய்து அதற்காக உணர்ச்சி பொங்கப் பேசி தொடர்ந்தும் தங்களுது நாடாளுமன்ற நாங்காலிகளை தக்கவைத்துக்கொண்டு தங்களது உல்லாச வாழ்வை அனுபவிக்க விரும்பகிறார்கள்.(இடையீடு) நான் நினைக்கிறேன் உங்களுடைய காது சரியாகக் கேட்குதில்லையென்று, ஏனென்றால் நான் முதலில் சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் அர்த்தமற்ற எதிர்ப்புக் கோஷங் களையும் அவர்களது பொறுப்பற்ற சுயலாப நடவடிக்ககைளையும் காரணம் காட்டி  தமிழ் பேசும் மக்;களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிட்டுவிடாது என்று உறுதியாக நம்புகின்றேன். தற்பொழுது தமிழ் பேசும் மக்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை நாம் காண்கின்றோம்.முன்பெல்லாம் அரசாங்க அமைச்சர்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வரும்போது தமிழ்த் தலைமைகள் கறுப்புக்கொடி  காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அதில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களையும் அழைத்த விட்டு அழைப்பு விடுத்த சுயலாப தமிழ்த் தலைமைகள் மட்டும் அப்பாவி மக்;களை நட்டாற்றில் கைவிட்டு வெளிநாடுகளு;ககு ஓடிப்பொய்விடுவார்கள்.(இடையீடு)ஆனாலும் தமிழ் மக்கள் இப்போது அர்த்தமற்ற போராட்டங்களில் கலந்து கொண்டு  கறுப்புக்கொடி காட்வும் எதிர்ப்புக் காட்டவும் தயாராக இல்லை என்பதை நிரூபித்து வருகின்றார்கள். இதன் அர்த்தம் தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திடமிருந்த நியாயமானெதொரு அரசியல் தீர்வை எதிர்பார்த்து நிற்கிறார்கள் என்பதேயாகும்.மேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுமன்றி எமது சக உறுப்பினர்களிடம் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு தொடர்;ந்தும் மதிப்பளித்துச் செயற்படுவார்கள் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன். இதேவேளை நாடாளுமன்றதில் அங்கம் வகிக்கின்ற எதிர்கட்சிகள் சார்ந்த ஏனைய தமிழ், சிங்கள, முஸ்லிம் சகோதர உறுப்பினர்களும் கட்சிகளின் தலைமைகளும் தமிழ் பேசம் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எனக்கு உண்டு.அழகிய எங்கள் இலங்கைத் தீவில் சகல இன மத சமூக மக்களும் அரசியல், சமூக நிலை, பொருளாதாரம் என வாழ்வின் சகல அம்சங்களும் சமவுரிமை பெற்றுவாழும் வாழ்வையே நாம் விரும்புகின்றோம். இந்த உயரிய இலட்சியத்தை நிiறைவேற்ற ஒன்றுபடுமாறு தமிழ் பேசும் மக்களின் சார்பாக நான் சகலரையும் நோக்கி சகோதர வாஞ்சையோடு நான் அழைப்பு விடுக்கின்றேன்.(இடையீடு)

கௌரவ பிரதி தவிசாளர் அவர்களே!

நான் என்னுடைய எஞ்சிய உரையைச் சபாபீடத்தில் சமர்பிக்கின்றேன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று இச்சபைக்குள் வருவதற்கு முன் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசாத விடயங்களைக்கூட பத்திரிகைகளுக்கு கொடுத்து அதனைப் பத்திரிகைகளில் வெளியிடச் செய்வது பற்றி இங்க ஒரு சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்பப்பட்டதை நான் அவர்களுக்கச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்திய உயர்ஸ்தானிகர் அலவலகத்தால் இந்திய நன்கொடையினரால் நிதிப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் கருத்திட்ட முகாமைத்துவ அலுவலக சேவை பெறப்பட்டதோடு இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை டிசம்பர் 9ம் திகதி கைச்சாதிட்டப்பட்டது.

கேள்வி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இங்க முதலீடு செய்வதற்கு பழைய மற்றும் புதிய கைத்தொழிலாளர்கள் 48பேர் ஆர்வம் தெரிவித்துள்னர். உணவு பதனிடல்  மர வேலைப்பாடுகள். கனிய நீர் துரப்பிடிக்காத உருக்கு மற்றும் அலுமினியம் ஆகியவற்றை  இத்துறைகள் உள்ளடக்கியுள்ளன. அச்சுவேலி கைத்தொழில்பேட்டையினூடாக நேரடியாகவும் நேரடியற்ற விதத்திலும் அண்ணளவாக 5000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படலாம்.

பனை ஆராய்ச்சி நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புதல்

1986ல் யாழ்ப்பாணத்தில் கைதடியில் ஸ்தாபிக்கபட்ட பனை ஆராய்ச்சி நிறுவனம் பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கியது. பனை சார்ந்த துறையில் பல ஆராய்ச்சி முன்னெடுப்புக்களை இந்த ஆராய்ச்சி நிறவனம்  மேற்கொண்டதோடு அப்போது நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக 1995ல் இதன் செயற்பாடுகள் கைவிடப்பட்டன. சமாதான  சூழ்நிலையைத் தொடர்ந்த குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் பனை சார்ந்த துறை ஊக்கமிக்க துறையாக மீளத்தோன்ற ஆரம்பித்துள்ளமையால் இதனை மீள ஸ்தாபிக்கும் தேவை அவசியமானது என உணரப்பட்து.

பனை ஆராய்ச்சி நிறவனத்தை மீன ஸ்தாபிப்பதற்கு இந்த அரசியன் சிறு நன்கொடை அபிவிருத்தி உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 70மில்லியன் ரூபா பெறுமதியான நிதி உதவிகள் பெறப்பட்டன. இது ஆய்வுகூடக் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட நிதியத்தின் கீழ் கட்டங்களைப் புதுப்பித்தல் புரனரமைத்தல் மற்றும் சிவில் வேலைகள் என்பன 2011ம் அண்டின்; ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன.மேலும் ஆராய்ச்சி வசதிகள் கையாள நிலையமொன்றும் ஸ்தாபிக்கப் பட்டு வருகின்றது. கட்டிட வேலைகள் யாவும் பெப்ரவரி மாதத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும்.

பயன்பாடுகளை அடைவதற்காக பனை சார்ந்த அபிவிருத்திக்கு முழு மையான தொரு ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கபட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தையை உள்ளடக்குகின்ற இத்துறையை ஊக்கமிக்க பொருளாதார துறையாக மாற்றும் பொருட்டு பனை சார்ந்த  உற்பத்திகளை பழுதடையாது பாதுகாப்பதற்கான தொழில்நுட்பங்கள் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை அபிவிருத்தி செய்தல் புதிய உற்பத்திகள், பனைசார்ந்த உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தல் உற்பத்தித்திறனை மேம்படுத்தல், பனை வளங்களிலிருந்து உச்சமட்டப் பயனைப் பெறுதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் என்பன ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

கித்துள் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

நாட்டில் வர்த்தக ரீதியில் இலாபகரமானதொரு கைத்தொழில். கித்துள் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. 2009ம் வருடம் முதல்  எமது அமைச்சின் மூலம் கித்துள் அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதுடன் 2011ம் அண்டின் திறைசேரி மானியத்திலிருந்த வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவையும் பொரளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட 5மில்லியன் ரூபா மானியத்தையும் கொண்டு முக்கியமாக புதிதாக சீவக் கூடிய மரங்களின் எண்ணிக்கை 8560ல் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக சீவல் தொழிலில் ஈடுபடுகின்ற 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இத்துறைக்கு உட்படுத்தியதன் மூலம் முடிந்தள்ளது.மேலும் 30 சிறிய மற்றும் நடுத்தர பரிமாண கைத்தொழில் துறைகள் புதிதாக உருவாக்கபட்டுள்ளன.

2012ம் வருடத்தில் மேலும் 10 ஆயிரம் மரங்களை சீவல் தொழிலுக்கு உட்படுத்தவும், சீவல் தொழிலில் ஈடுபடக்கூடிய  2000 புதிய தொழிலாளர்களை உருவாக்குவதற்கும் 100 புதிய கைத்தொழில் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் இதில் 12 தொழில்துறைப் பிரிவுகள் தரத்தினைப் பெற்றுக்nhகள்வதற்குரிய கைத்தொழில்துறைகளாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக கித்துலின் மகிமை என்னும் கண்காட்சியினை  கொழும்பு உட்பட ஏனைய பிரதான நகரங்களில் நடாத்தவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. கித்துள் அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சீவல் தொழிற்பயிற்சி கித்துள் சீவல்  தொழிலாளர்களுக்கான பாதுகாப்புத் தொழில் கருவிகள் கித்துள் உற்பத்தியாளர்களைப் பதிவு செய்தல், பதனீர்  விளைச்லை அதிகரிக்கச் செய்வதற்கான கஸ்பர் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல் மற்றும் தரக்கட்டுப்பாடு வசதிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்ககைச் செலவு பற்றிய உப குழுவினால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் இந்நிகழ்ச்சித்திட்டம் விஸ்தரிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் தேசிய பொருளாதாரத்தின் பிரதான கைத்தொழில் துறைகளில் ஒன்றாக மாற்றுவதற்கு இயலுமான கித்துல் கைத்தொழில்துறைக்கு ஒழுங்கு ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கென எதிர்காலத்தில் தேசிய செயலகம் ஒன்றையும் அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வடகடல் நிறுவனத்தின் மீன்பிடி வலை உற்பத்தி ஆற்றலை விஸ்தரித்தல்

தற்போது மீன்பிடி வலை உற்பத்திக்கு பெரும் கேள்வி நிலவுகின்றது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வடகடல் நிறுவனமானது அதன் தற்போதைய மீன்பிடி வலை உற்பத்தி ஆற்றலான ஆண்டுக்கு 60 மெற்றிக்தொன் எனும் மட்டத்திலிருந்து ஆண்டுக்கு 300 மெற்றிக்தொன் வரை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. தற்போது வடகடல் நிறுவனத்திடம் பழைமைவாய்ந்த மீன்வலை உற்பத்தி இயந்திரங்களே உள்ளன. ஆதலால் அளவு மற்றும் தரத்தைப் பொறுத்தவரை மீன்பிடி வலைகளின் தற்போதைய உற்பத்தி மட்டமானத கடற்தொழிலாளர்களின் தேவையை நிறைவு செய்வதற்கு முடியாதுள்ளது. காலம் கடந்த இயந்தரங்கள் மற்றும் கருவிகள் மீன்பிடி வலை உற்பத்தியின் தரம் மிகவும் கீழ்நிலையில் உள்ளதோடு பருவகால மீன்பிடிக்குத் தேவையான பல்வேறு வகையிலான வலைகளை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது.மேலும் கரையோர மீன்பிடி குறைவடைந்து கரைக்கு அப்பாலான ஆழிகடல் மீன்பிடி அதிகரித்து வருகின்ற போக்கினுள் கனம் குறைந்த மீன்பிடி வலைகளை அதிகமாகவும் உற்பத்தி செய்யவேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதனை விரிவாக்குவதற்கும் பலப்படுத்தவதற்கும் 152 மில்லியன் ரூபா பெறமதியான இந்திய அரசின் சிறிய நன்கொடை உதவி பெறப்பட்டது. இக்கருத்திட்டம் 2012ம் ஆண்டு அமுல்படுத்தப்படும்.வடகடல்  நிறவனம் கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் சீனோர் நிறுவனத்திடமிருந்த அம்பாந்தோட்டையிலுள்ள வீரவில மீன்பிடி  வலை உற்பத்தி தொழிற்சாலையையும் புத்தளம் மாவட்டத்திலுள்ள லுணுவில மீன்படி வலை பெற்றுக்கொண்டுள்ளது.மேற்படி பெறுதலின் ஊடாக வடகடல் நிறுவனம் நாடளாவிய ரீதியில் தொழிற்படுவதற்கான அதன் அற்றவை விஸ்தரித்துள்ளது.

கைத்தொழில்  உற்பத்திக் கிராமங்கள்

ஒரு கிராமம் ஒரு உற்பத்தி என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் கைத்தொழில் உற்பத்திக் கிராம நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கபட்டது.தொழில்நுட்பம் இயந்திரசாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உற்பத்திக் கிராமங்களிலுள்ள சிறு கைத் தொழிலாளர்களுக்கும் கைப்பணியாளர்களுக்கும் வழங்கும்பொருட்டு  105 பொதுச்சேவை மத்திய நிலையங்கள் பாரம்பரிய கிராமங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. உற்பத்தி கிராமங்களிலுள்ள மேற்படி பொதுச்சேவை நிலையங்கள் கிராமிய உற்பத்திக் கூட்டுறவு சங்கங்களால் முகாமைத்தவும் செய்யப்படுகின்றன. 105 பொதுச்சேவை நிலையங்களில் 85 நிலையங்கள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராக்கலை, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, குருணாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கிராமியக் கை;ததொழில் மற்றும் உற்பத்திக் கிராமங்களின் புத்துயிரூட்டல் மற்றும் நிலைபெறாத தன்மையயை மேம்படுத்தவதற்கான 2012ம் ஆண்டில்  வரவு – செலத்திட்ட ஒதுக்கீடு 13.5மில்லியன் ரூபாவாகும். இதன் மூலம் உற்பத்திக் கிராமங்கள் வலவூட்டப்பட்டு கிராமிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும்.

சிறிய மறறும் நடுத்தர தொழில் முயற்சி கைத்தொழில் பேட்டைகள்

கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் நாடாளாவிய ரீதியில் 18 சிறிய மற்றம் நடுத்தர தொழில் முயற்சி கைத்தொழில் பேட்டைகள் முகாமைத்தவம் செய்யப்படுகின்றன. இக்கைத்தொழிற் பேட்டைகள் கைத்தொழில் கேந்திர நிலையங்களாக சேவையாற்றுவதுடன் அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாக்ககூடிய பெறுமதி சேர்க்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஈர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்தவதற்கும் உதவுகின்றன. இவற்றின் உட்கட்மைப்பு வசதிகளை விரிவாக்குவதற்கான செயற்திட் டங்கள் 2012ல் இடம்பெறும்.

கைவினைக் கைப்பணி உற்பத்திக் கிராமங்கள்

தேசிய அருங்கலைகள் பேரவையானது இந்திய நிதி உதவியுடன் அம்பாந்தோட்டை, யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கைப்பணிக் கைத்தொழில் உற்பத்தி  – சந்தைப்படுத்தல் கிராமங்களை ஸ்தாபிப்துடன் பத்தரமுல்லை அருங்கலைகள் கிராமமும் சீகிரிய அருங்கலைகள் கிராமமும் சுற்றலாத்துறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு பலப்படுத் தப்படும் 2011ம் ஆண்டில் 16 மாவட்டங்களில் 500 கைப்பணிக் கலைஞர்களை உள்ளடக்கியதாக  கைப்பணிக்கலை நிபுணர்கள் மூலமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தேசிய அருங்கலைகள் பேரவையினால் நடத்தபட்டது. இடது 2012ம் அண்டில் மேலும் விரிவுபடத்தப்பட்டு பலப்படுத்தப்டும் மேலும் நாடாளவிய ரீதியில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

புதிய வடிவமைப்பு ஆக்கங்கள்

தேசிய வடிவமைப்பு நிலையம் 439 புதிய வடிவமைப்பு ஆக்கங்களை அபிவிருத்தி செய்துள்ளதோடு இதில் 181 வடிவமைப்புக்கள் தற்போதைய உள்ளூர் ஏற்றுமதிச் சந்தை கேள்விகளுக்கு ஏற்றவிதத்தில் முன்மாதிரிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக வளர்சிசயடைந்து வருகின்ற சுற்றலாத்துறைக் கைத்தொழிலினுள் சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையின் தனித்துவம் மற்றும் வரலாற்றுப் பெறுமதிகளுடன் கூடிய கைப்பணிப் பொருட்களின் ஊடாக நினைவுப் பொருட்கள் போன்றவற்றை  மேம்படுத்தவதற்கும் செயற்திட்டம் உள்ளடக்;கப்பட்டுள்ளது.

ஷல்ப தேசியக் கண்காடசி விற்பனைச் சந்தை மற்றும் தேசிய விருது வழங்கும் வைபவம்

பாரம்பரிய கைப்பணிக் கைத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைத் தொழிலாளர்களின் உற்பத்திகளைப் பிரபல்யப்படுத்தும் பொருட்டும் அவர்களது ஆக்கபூர்வமான உற்பத்திகளை காட்சிப்டுத்துவதற்கும் கண்காட்சியில் வைப்பதற்குமான வாய்ப்பபை வழங்கும்பொருட்டும் விற்பனைக் கூடங்களினூடாக நேரடியாக அவர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்தவதற்குமான கைப்பணிகள் மற்றும் சிறுகைத்தொழிலாளாகளுக்கான ஷில்ப தேசியக் கண்காட்சியும் விற்பசைனச் சந்தையும் வருடாந்த வைபவமாக ஒழுங்கு செய்யப் படுகின்றன.

கைப்பணிப் பொருட்களையும் சிறிய மற்றும் நடுந்தர கைத்தொழில் களையம் பிரபல்யப்படுத்தும் மற்றும் மேம்படுத்துதல் கைப்பணி கைத்தொழிலாளர்களின் ஆக்கபூர்வமான புதிய வடிவமைப்புக்களையும் உற்பத்திகளையும் காட்சிப்படுத்தல். இடைத்தரகர்களின் தலையீடுகளின்றி உற்பத்தியாளர்களுக்கு அவர்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு வாய்ப்பளித்தல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களையும் கொள்வனவுக் கட்டளைகளையும் விஸ்தரிக்கச் செய்தல். கொள்வனவாளர் – விற்பனையாளர் சந்திப்புக்களுக்கான வாய்ப்பை  ஏற்படுத்துதல். கைப்பணிக் கைத்தொழிலாளர்கள் மற்றும் சிறிய நடுத்தர கைத்தொழிலாளர்களுளக்கு அங்கீகாரத்தையும் செயற்தூண்டுதலiயும் பாராட்டுதலையும் மற்றும் ஊக்குவிப்பையும் வழங்குவதற்காகச் சிறந்த செயலாற்றலைக் கொண்டவர்களுக்கு தேசிய விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கல், போட்டிகளில் வெற்றி பெறுகின்றவர்கள் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களில் குடிசைக் கைத்தொழில்கள் கைப்பணிக் கைத்தொழில்களில் மிகச் சிறந்த தொழில் முயற்சியாளர்களாகத் தோன்றுவதற்கு உதவியளித்தலும் சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துதல் கைப்பணிப் பொருட்கள் மற்றும் சிறிய நடுத்தர கைத்தொழில் உற்பத்திகளின் நுகர்வை விருத்தி செய்தலும் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்குதலும் தேசிய கண்காட்சி மற்றம்  விற்பனைச் சந்தையின் குறிக்கோள்களாகும். என்னடைய அமைச்சானது மஹிந்த சிந்தனை தொலைநோக்கு அடிப்படையில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நோக்கப்படுகின்ற குடிசைக் கைத்தொழில் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சிகளை பலப்படுத்தவதில் முக்கிய பங்களிப்புச் செய்கிறது. எனது அமைச்சின் அபிவிருத்திச்  செயற்பாடுகள்  அனைவரையும்  உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது. வறுமையைக் குறைத்து சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துகின்றது. இதன்மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுகின்ற மஹிந்த சிந்தனை தொலைநோக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கினை அடைவதற்குப் பங்களிப்புச் செய்யும்.

20 மே 2012

Related posts:


சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...