செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2012அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
Friday, July 20th, 2012கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!
நான் எனது உரையினை ஆரம்பிப்தற்கு முன்னர் அரசாங்கத்தினுடைய கொள்கைகளை ஏற்பதாகவம் அதனுடைய வேலைத்திட்டங்களை ஆதரிப்பதாகவும் கூறி அரசுக்கு ஆதரவளிக்க முடிவசெய்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் மாண்புமிகு மொஹான் லால் கிரேரு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து அவரை வரவேற்கின்றேன்.
இதுவரை கால மனிதகுல வரலாறுகள் யாவும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் மாற்றங்களையும் வியத்தக்க முன்னேற்றங்களையும் கண்டு வந்திருக்கின்றன. இதற்கு எங்கள் அழகிய இலங்கைத்தீவும் விதிவிக்கானதல்ல. இன்று நாம் மாற்றங்களைக் கண்டிருக்கின்றோம். இந்த மாற்றங்கள் கடந்த காலங்களைவிடவும் பல முன்னேற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. மதாற்றத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களும் தமது வாழ்வின் உயரிய இலட்சியங்களை நோக்கி அதற்கான பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துவிடார்கள்.யுத்தமும் இரத்தமுமாக அமைதியற்று அவலப்பட்டு இருட்டில் கிடந்த எமது தேசம் இன்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டு நிமிர்ந்து நிற்கின்றது. இப்போது இங்கே பிணங்கள் இல்லை. ரணங்கள் இல்லை. எல்லாமே முடிந்துவிட்டன.
எங்கள் தேசம் தன் கருவறையில் சுமந்திருந்த சமாதானக் குழந்தையையப் பிரசவித்தவிட்டது. சமாதானப்பூ இங்கே பூத்திருக்கின்றது. நாம் விரும்பும் சமாதானம் என்பது வெறமனே யுத்தம் இல்லாத பூமி மட்டுமல்ல, இரத்;தம் சிந்தாத மனித வாழ்வு மட்டுமல்ல, அது சகல இன சமூக மக்களும் அமைதியான எங்கள் இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்திருக்கும் ஓர் அமைச்சராக நான் இருப்பினும் தமிழ் பேசும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனநாயப் பிரதிநதியாகவும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்களைப் பெற்ற மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவனாகவும் இந்தச் சபையில் அங்கம் வகிக்கின்றேன்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர் என்ற வகையில் ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார சமூக விடயங்கள் குறித்தும் பேசவேண்டிய கடமை எனக்குண்டு. ஆனாலும் எமது தமிழ் பேசும் மக்களைத் தவறான வழிமுறையில் இதுவரை வழிநடத்திவந்த சுயலாபத் தமிழ் தலைமைகளின் வெறும் கற்பனைவாத சிந்தனைகளை உணர்ந்து (இடையீடு) இதுவரை எமது மக்களுக்கு எதையும் பெற்றுத்தராத அவர்களால் கிடைத்த பேரிழப்புக்களின் துயரங்களையும் அவலங்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சரியாதொரு வழிகாட்டலை வழங்க விரும்பி இந்தச் சபையில் நான் தமிழ் பேசும் மக்களின் சில பிரச்சினைகள் குறித்துப் பிரதானமாக உரையாற்ற விரும்புகின்றேன்.
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,
அரசியல் மக்களைப் பிரித்து வைக்கிறது. பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது. எமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கி வைக்கப்பட்டது. இலங்கைத்தீவை ஆட்சி செய்துவந்த காலனியாதிக்கவாதிகளால் திட்டமிடப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகவே இது ஆரம்பிக்கபபட்டது. 1948ம் ஆண்டில் காலணியாதிக்கவாதிகளின் கைகளிலிருந்து எமது இலங்கைத் தீவு விடுவிக்கப்பட்ட நிலையில் அன்றிலிருந்து இலங்கை – இந்திய ஒப்பந்தக் காலம்வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய அரச தலைவர்களும் தவறானதொரு அரசியல் வழிமுறையினையே தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். சிங்கள சகோதர மக்களுக்கும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டுத் தூண்டி விடப்பட்டன. ஆனாலும் இவைகுறித்துப் பேசுகின்ற தார்மீக உரிமையினைச் சயலாபத் தமிழ் அரசியல் வெற்றிக்காக வாக்குகளை அபகரிப்பதற்காக தமிழ் இனவாத வெறியை அடிக்கடி ஊட்டி எமது மக்களை உசுப்பேற்றிவிடும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் வீதிக்கு வரும்போது அவர்களை நடுத்தெருவில் கைவிட்டுவிட்டுத் தமது குடும்பங்களோடு நாட்டைவிட்டு ஓடி விடுகிறார்கள். அப்பாவி மக்களைப் பலிக்களத்தில் கொல்லக் கொடுத்து விட்டுத் தாம் மட்டும் உலக நாடுகளெங்கும் உல்லாசப் பயணம் நடாத்தி வருகின்றனர். இவர்களால் தூண்டிவிடப்பட்ட அப்பாவி மக்கள் அவலங்கiளைச் சுமந்து நிற்கின்றார்கள். ஆனால் இவர்களது குடும்பங்களோ வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்வு நடத்துகிறார்கள்.
1965ம் ஆண்டில் இந்த நாட்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்து. இதன்மூலம் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டனர். ஆனாலும் இவைகுறித்துப் பேசுகின்ற தார்மீக உரிமையைச் சயலாபத் தமிழ் அரசியல் தலைமைகள் அன்றே இழந்துவிட்னர். காரணம் அன்று தனிச் சிங்களச்சட்டம் கொண்டவரப்பட்டபோது அன்றைய பாராளுமன்றத்தில் பருத்தித்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பொன்.கந்தையா அவர்கள் அதற்கு ஒரு மாற்று யோசனையொன்றைத் தெரிவித்தார். தமிழ் மக்கள் சிங்களத்தைக் கற்பதென்றால் சிங்கள மக்களும் தமிழ் மொழியைக் கற்க வேண்டுமென்ற தீர்க்கதரிசனமாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை அன்று பாராளுமன்றத்திலும் அதற்கு அப்பாலம் இருந்த சிங்கள தலைவர்கள் பலரும் வரவேற்றிருந்தனர்.
அனாலும் அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் அதை ஏற்றிருக்கவில்லை. எதிர்த்தார்கள்.சிங்களம் கற்பது தவறு என்ற சாதாரண தமிழ் குடிமக்களுக்க உணர்ச்சி பொங்க போதனைகள் நடத்தி விட்டுத் தாம் மட்டும் இரகசியமாகச் சிங்களம் கற்றுக் கொண்டார்கள். தமது சுயலாபங்களுக்காகத் தமது பிள்ளைகளை மட்டும் சிங்களம் கற்க வைத்தார்கள். சிங்களம் கற்க விடமாட்டோம் என்று அன்று அடம்பிடித்த மூத்த தமிழ்த் தலைவர்கள் இன்றும் சரளமாகச் சிங்களம் பேசி கொண்டிருக்கிறார்கள். மறுப்பார்களா? அமரர் பொன். கந்தையா அவர்களது தீர்க்க தரிசனங்களை அன்றைய தமிழ்த தலைவர்கள் ஏற்றிருந்தால் இன்று எமது தமிழ்ப் பிஞ்சுகளும் பெற்றோர்களும் இலங்கையிலுள்ள இரு மொழிகளையும் கற்பதற்கு மாறாக உலகெங்கிலுமுள்ள நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்று பொருளாதார காரணங்களுக்காகவும் கல்வி வசதிகளுக்காகவும் அந்தந்த நாடுகளிலுள்ள மொழிகளைக் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்காது. இன்று மேதகு ஜனாதிபதி மஜிந்த ராஜபக்ஷ அவர்கள் 2012ம் அண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களை சிங்களத்தைக் கற்பதற்கும் சிங்கள மக்கள் தமிழ் மொழியைக் கற்பதற்குமான திட்டத்துக்கு நிதியினை ஒதுக்கியிருப்பதையிட்டு நான் வரவேற்கின்றேன். அதேவேளை எவரும் செய்யத் துணியாத செயலாக ஐக்கிய நாடுகள் சபையில் மேதகு ஜனாதிபதி அவர்கள் தமிழ் மொழியலும் பேசி வருவதையிட்டு இச்சந்தர்ப்பத்தில் எமது மக்களின் சார்பிலே அவருக்குப் பாராட்டைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்தத அன்றைய இலங்கை – அரச தலைவர்களால் பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்ந்தம் என்பன கிழித்தெறியப்பட்டன. ஆனாலும் இவைகுறித்துப் பேசும் தார்மீக உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். காரணம், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உருவாக்கபட்ட அனைத்து முயற்சிகளையும் சுயலாபத் தமிழ் தலைமைகள் உடைத்துச் சிதைத்திருக்கிறார்கள். இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்திருந்த அரியதொரு வாய்ப்பாகும். ஆனாலும் சுயலாபத் தமிழ்த் தலைமைகள் தமது அடங்காத யுத்த ஆசைகளுக்காகவும் அடைய முடியாத விருப்பங்களுக்காகவும் அதை ஏற்க மறுத்து அப்பாவித் தமிழ் மக்;களை யுத்தத்திற்குப் பலிகொடுத்திருக்கிறார்கள். அன்று இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காகச் சரிவரப் பயன்படுத்த விரும்பாமல் அப்பாவி மக்;களின் மண்டைகளை நோக்கித் தமது துப்பாக்கிகளால் குறிவைத்துச் சுட்டு வெறி தீர்த்த குழுத் தலவைர்கள் இன்று தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை குறித்து நீலக்கண்ணீர் வடிக்கிறார்கள்.தமிழ் மக்களின் மன விருப்பங்களை ஏறி மிதித்து அதில் நின்று சாம்பல் மேட்டு சாம்ராச்சியம் நடத்தியவர்கள் மனித உரிமைகள் குறித்து சாத்தான்கள் போல வேதம் ஓதுகின்றார்கள்.
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே,
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்களின் உரிமைக்காக இளைஞர் யுவதிகள் தங்களது உயிர்களை அர்ப்பணம்; செய்ததாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழ் மக்கள் மீது பரிதாபப்படுவதுபோல் பாசாங்கு செய்து முதலைக் கண்ணீர் வடித்து இந்தச் சபையில் உரையாற்றியிருக்கிறார்கள். இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்து மரணித்த உறுப்பினர்களின் மொத்த தொகை 652பேர் மட்டுமே. இதனைப் புலிகளே அன்று உரிமை கோரியும் இருந்தார்கள். தவிர்க்கமுடியாத ஒரு சூழலில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு முந்திய உரிமைப் போராட்டம் நானும் தலைமைப் பாத்திரமேற்று செயற்பட்டிருக்கிறேன். ஆனாலும் புலிகள் அமைப்பிலிருந்து அன்று மரணித்த 652 உறுப்பினர்களின் இழப்போடும் நான் அங்கம் வகித்த ஈ.பீ.ஆர்.எல்.எப். உட்பட ஏனைய அமைப்புக்;களில் இருந்து மரணித்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் இழப்புக்களோடும் யத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அடங்காத யுத்த வெறியினால் அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததன் மூலம் எமது தமிழ் இளைஞர் யுவதிகளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலிகொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.அப்பாவி மக்களும் பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ – புலிகள் பேச்சுவார்த்தை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க – புலிகள் பேச்சவார்த்தை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – புலிகள் பேச்சுவார்த்தை, அதன் பின்னர் இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இன்றைய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை என்ற கிடைத்த அரிய வாய்ப்புக்கள் யாவும் யாரால் உதாசீனம் செய்யப்பட்து என்பதை நான் இந்தச் சபையினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கேட்கின்றேன். இலங்கை -இந்தியா ஒப்பந்தத்தை தொடர்ந்து நான் இந்தக் கேள்வியைத் தொடர்ச்சியாக கேட்டு வந்திருக்கின்றேன்.
அழிவு யத்தம் எதையும் பெற்றுத் தராது. அது எமது மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறத்தும். எமது இளைஞர் யுவதிகளைப் பலியெடுக்கும். அப்பாவி மக்களைக் கொன்று பசி தீர்க்கும். ஆகவே அரசியல் திர்வின் மூலம் அடையவேண்டிய இலக்கினை பெறுவோம்.யுத்தத்தைக் கைவிட்டு வாருங்கள் என்று நான் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருக்கின்றேன். எமது மக்களை அழிவுகளில் இருந்து காப்பதற்காக அழிவு யத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வுக்கு வாருங்கள் என்று அன்றிலிருற்து இன்றுவரை அறைகூவி வந்த எமக்கே தமிழ் மக்களின் அவலங்கள் குறித்தும் நடந்து முடிந்த அழிவுகள் குறித்தும் பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டு என்று நான் கூறுகின்றேன். ஆனாலும் அழிவு யுத்தத்தை ஆதரித்து வந்த சுயாலபத் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்;களின் அழிவுகள் குறித்து எந்த முகத்தோடு பேசி வருகின்றார்கள். எமது தமிழ் இளைஞர் யுவதிகளைப் பலாத்கராமாக அழிவு யத்ததிற்கு அள்ளிக் கொடுத்திட்டு அழிவுக்க ஊரார் வீட்டுப் பிள்ளைகளை யுத்தத்திற்காக ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டவிட்டு தமது குடும்பங்களோடு தாம் மட்டும் தப்பிக் கொண்டவர்களே இன்று இந்தச் சபையில் தமிழ் மக்களின் அழிவுகள் குறித்த நீலிக்கண்ணீர் வடித்து வருகின்றார்கள்.
நான் இந்தச் சபையினூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கிச் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். பண்டா – செல்வா ஒப்பந்தம் என்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் என்றும் ஒப்பந்தகங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறகளை நீங்கள் கூறி வருகின்றீர்கள். ஏற்றுக்கொள்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்வுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் தீயிட்டு எரித்த எதிர்க்கட்சியினரோடு நீங்கள் இணைந்துகொள்வில்லையா? அது மாத்திரமல்ல அந்தத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய வீதி ஆர்ப்பாட்டப் பேரணியில் நீங்கள் எந்த முகத்தோடு கலந்துகொண்டு எதிர்த்துக் கோஷம் எழுப்பியிருந்தீர்கள், என்றும் நான் கேட்கின்றேன்.
எல்லா மக்களும் சரிசமமானவர்களே என்ற தனது விருப்பத்தையும் கொள்கையினையும் முன்னிலைப்படுத்தி 2012ம் ஆண்டுக்கான இந்த வரவு செலவுத் திட்டத்தினை மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்திருக்கின்றார். எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளுங்கட்சியின் யோசனைகளை எதிர்த்தே தீரவேண்டும் என்ற உங்களது வழமையான சுயலாப சம்பிரதாயங்களை அடிப்படையாகக் கொண்டு இன்று அந்த வரவு செலவுத் திட்டத்தை முன்னின்று எதிர்ப்பது உங்களில் யார்? என்ற போட்டியில் ஈடுபட்;டு வருகின்றீர்கள். நீங்கள் ஓர் அணியாகவே இருந்துகொண்டு யார் உங்களில் தமிழ்த் தேசிய வாதிகள் என்பதைப் புலம்பெயர் தமழ் மக்களுக்குக் காட்டுவதாகவும் உங்களில் யார் தமிழ் இனவாதத்தைப் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து நாடாளுமன்ற நாற்காலிகளை கைப்பற்றி சுகபோகங்களை அனுபவிப்பது என்ற போட்டியிலும் ஈடுபட்டு வருகின்றீர்கள்.தமிழ்த் தேசியம் என்பது வெறுமனே தமிழ் இன உணர்ச்சிகளோடு மட்டும் ஊட்டி மக்களை வீதிக்கு இழுத்துவிட்டு நீங்கள் மட்டும் நாட்டைவிட்டே ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும் கோழைத்தனம் அல்ல. கட்டிய வேட்டி கசங்காமல் உடுத்த உடுப்பின் மடிப்பும் கசங்காமல் வியர்வை சிந்தாமல் உலக நாடுகளின் உலாலாச விடுதிகளில் படுத்துறங்கும் சோம்பேறித்தனமும் அல்ல.(இடையீடு) கௌரவ உறுப்பினர்களே தயவுசெய்து நான் சொல்பவற்றை கேட்டுவிட்டுக் கதையுங்கள். அது எமது மக்களுக்காகக் குரல் கொடுத்த, மக்களுடனே வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்கெடுப்பதாகவே இருக்கவேண்டும். யுத்த காலத்தில் சோறில்லை என்ற அழுத சாதாரண குடிமக்;களின் குரலக்குச் செவிசாய்க் விரும்பாமல் அன்றாட அவலங்களில் சிக்கித்தவித்த மகக்ளின் துயரங்களைப்போக்க முடியாமல் மேல்நாட்டுப் பஞ்சணைகளில் அடிக்கடி படுத்துறங்கினீர்கள். அதற்காகவே தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையைக் காரணமாக வைத்து இன்றுவரை நீங்கள் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ் என்று உலகத்தைச் சுற்றி உல்லாசப் பயணம் நடாத்தி வருகின்றீர்கள்.(இடையீடு) உங்களுடைய ஆட்களுக்கும் வீசா கொடுக்கவில்லைத்தானே. நான் எனக்கு வீசா வேண்டாம் என்று உங்களுடைய நாட்டுக்குள்ளே பிரச்சினையைத் தீர்க்கலாம் என எப்பொழுதோ வந்தவிட்டேன்.(இடையீடு) நீங்கள் பிறகு கடைசிக்காலகட்டத்தில் வந்திருக்ககூடும்.
இலங்கையில் மழை பெய்கின்றது. நீங்கள் அமெரிகாவுக்குச் சென்று குடை பிடிக்கின்றீர்கள். அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்து எமது மக்களுக்காக என்ன வாங்கிவந்தீர்கள்? அங்கிருந்து எமது மக்களுக்காக ஏதாவது நல்ல செய்தியைக்கூடட கொண்டுவந்தீர்களா? சீஸ் பேர்கரும் சிக்கன் பிச்சாவும் நீங்கள் விரும்பும் உற்சாக பானமும் உல்லாச விடுதியும் நன்றாக இருந்தது என்று உங்கள் குடும்பங்களோடு கூடிச் சிரித்து மகிழ்ந்து சொன்ன செய்தியை தவிர தமிழ் மக்களுக்காக எதனைச் சுமந்து வந்தீர்கள்?(இடையீடு) நீங்கள் நான் கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தால் அது உங்களுக்குச் சரியான வழிகாட்டாக இருக்கும்.
வெளிநாட்டு ராஜதந்திகளும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் இங்கே வந்தார்கள். யாராக இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சவார்த்தை நடத்தியே தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்லிவிட்டு போகின்றார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து அரசியல் தீர்வை இறக்குமதி செய்து தருகின்றோம் பாருங்கள் என்ற தோரணையில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வருகின்றீர்கள். இதுவரை காலமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கு எதிராகவும் பொருளாதார மீட்சிக்கு தடையாகவும் சில தடைகள் இருந்தவந்த இன்று இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அழிவு யுத்தம். அது இன்று மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அசயல் திறனால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்னொன்று உறுதியானதும் துணிச்சலானதுமான அரசியல் தலைமையற்ற நிலைமை அதுவும் இன்று எமது ஜனாதிபதி அவர்களால் இலங்கைத் தீவில் வாழும் சகல மக்களுக்குமான தலைமையாக அந்த வெற்றிடம் நிரப்பப்படுகின்றது,(இடையீடு) கௌரவ சுமந்திரன் அவர்களே, என்ன சொன்னீர்கள்.?(இடையீடு)
அதுபற்றிப் பத்திரிகையிலே வெளியிட்டதற்கு எதிராக வழக்கத் தாக்கல் செய்யபட்டிருக்கிறது. பொறுதிருந்து பாருங்கள்(இடையீடு) நீங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கெல்லாம் என்ன நடந்து என்று உங்களுக்கு தெரியும்தானே. நீங்கள் பொய்யாக வழக்குத் தாக்கல் செய்தீர்கள்.ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை.(இடையீடு)
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்மே நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வு என நாம் அனைத்து அரச தலைவர்களிடமும் யாரும் முன்னெடுக்க வரவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளின் சுயலாப எதிர்ப்பைக் காரணம் காட்டி அதிகாரம் உள்ளவரை ஆட்சியில் இருந்துவிட்டுப் போவோம் என்ற பொறுப்பற்ற மன்மையினால் பல்வேறு அரச தலவைர்களும் எமது நடைமுறை சார்ந்த கோரிக்ககைளை கருத்தில் எடுத்து செயற்படவில்லை. எனினும் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாம் எடுத்துரைத்த நடைமுறைச்சாத்தியமான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த முன்வந்திருக்கிறார். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நீங்கள் கூட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளோடு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கபட்ட மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறீர்கள். எனினும் நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது சிங்களம் எமது மக்களக்கு எந்தத் தீர்வையும் தரப்போவதில்லை என்று இனவாதம் பேசி வேறொரு முகத்தைக் காட்டுகின்றீர்கள். இதில் எதனை தமிழ் பேசும் மக்கள் நம்புவது உங்களது உணர்ச்சிவசப்பட்ட பாராளுமன்ற உரைகளா, அல்லது ஊடகங்களில் வெளிவரும் உங்களது வீர அறிக்ககைகளா, அல்லது உங்களது வெளிநாட்டுப் பயணங்களையா, அல்லது இன்று மாகாண அதிகாரங்கள் குறித்து அரசாங்கத்தடன் பேசிக்கொண்டிருப்பதையா எத்தனை முகங்கள் நீங்கள் பலருக்கும் காட்டி வருகின்றீர்கள்.
(இடையீடு)
நான் உங்களோடு போட்டி அரசியல் நடத்த விரும்பவில்லை.அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்பி, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்தால் நான் புலிகளோடு மாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கமாட்டேன் என்று பகிரங்க மாகவே அன்று நான் சொல்லிவந்ததுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய உங்களக்கும் கூறி வைக்க விரும்புகின்றேன்.நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மனவிருப்பத்தோடு வந்தால் நான் உங்களோடு மாற்று மாற்ற அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன். எமக்கு இந்தப் பாராளுமன்ற நாற்காலிகள் தேவையில்லை. உங்களது தலைமையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்து அது சரிவர நடக்கின்றதா என்பதை நான் அரசியலில் இருந்த விலகி எங்கேயாவது ஓர் ஓரத்தில் நின்று அவதானித்துக்கொண்டிருப்பேன். ஆனால் நீங்கள் அதற்குத் தயாராக இல்லை. உங்களது சொந்த சலுகைகளுக்காக மட்டும் நீங்கள் அரசாங்கத்தோடு கூனிக்குறுகி வளைந்து நெளிந்து பல்லிளித்துப் பக்குவமாகப் பேசுகின்றீர்கள். அதற்காக அரசாங்கத்தின் பின்கதவுகளைச் சத்;மின்றி மெதுவாகத் தட்டுகின்றீர்கள்.(இடையீடு) உங்களைப் பற்றியும் இணையத்தளத்தில் வந்திருக்கிறது. நீங்கள் தமிழ் மக்களுடைய காணிகளை எப்படி அபகரித்தீர்கள் என்று.(இடையீடு) அதாவது திருகோணமலையில் நீங்கள் எவ்வாறு காணி அபகரித்துள்ளீர்கள் என்று அதில் இருக்கிறது.(இடையீடு)உருத்திரா மாவத்தை வீடு காசு nhகடுத்துதான் வாங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்களைப் போல் கள்ளக் கையெழுத்துப் போட்டு பத்மநாபாவின் சொத்தை நான் மாற்றிவில்லை.தலைவர் பத்மநாபாவின் மனைவியின் பெயரில் இருந்த காணியைக் கள்ள கையெழுத்துப் போட்டு – (இடையீடு) இல்லை. இல்லை. இணையத்தளத்தில் வந்திருக்கிறது,
எப்படி தமிழ் மக்களுடைய காணிகளைப் பலாத்காரமாக அபகரித்தார் என்று இருக்கிறது.(இடையீடு) ஆனாலும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்துப் பேசும்போது மட்டும் பூமியிலிருந்து ஆகாயம் வரைக்கம் நெருப்பாக துள்ளிக்குதிக்கிறீர்கள்.நீங்கள் அரசாங்கத்தோடு நெருப்பாக துள்ளிக் குதித்தாலும் உங்கள் மீது மேதகு ஜனாதிபதி அவர்கள் விருப்பம் கொண்டுள்ளார்.(இடையீடு)
யாழ்;ப்பாணமே தெரியாமல் கொழும்பில் வளரும் அல்லது வெளி நாடுகளில் வாழுகின்ற உங்கள் பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற அங்குள்ள நிலவரங்களைக் காட்டுங்கள் என்று உங்களுக்கு அன்பாகச் சொன்ன மேதகு ஜனாதிபதி அவர்களது நற்பண்புகளை நான் மதிக்கின்றேன். அந்தளவுக்கு நீங்கள் அவரிடம் தனிப்பட்ட ரீதியாக நன்மதிப்பை பெற்றிருக்கிறீர்கள். இந்த உறவை அரசியல் ரீதியாகவும் வளர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் ஆசைப்படுகின்றார். தயவுசெய்து அதற்கு முன்வாருங்கள்.
மேதகு ஜனாதிபதி அவர்கள் ஆட்சிக்கு வந்த நேரத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு தான் நேரில் பேசித் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சிiனைக்கத் தீர்வுகாணத் தயார் என்று தனது விருப்பத்தை வெளிப்படையாகத் தொவித்திருந்தார். அதை நான் அன்று பகிரங்கமாகவே வரவேற்றிருந்தேன். ஆனால் அந்த விருப்பத்தை அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உங்களோடும் பேசித் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புகின்றார்.அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான யோசனை சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. அதில் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பினராகிய நீங்களும் அங்கம் வகிப்பதன் மூலம் எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் இலக்கு நோக்கி முன்னேறலாம். இலங்கையை ஆசியாவின் மலர்ந்து வரும் ஆச்சரியமாக மாற்றுவதற்கான தொலைநோக்கினை மையமாகக்கொண்டே 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாம் கடந்தகால யுத்தத்தினால் அழிந்து சிதைந்தபோன எமது மக்களின் வரலாறு, வாழ்விடங்களை மறுபடியும் தூக்கி நிறுத்த முடியும். நீங்கள் ஒத்துழைப்புத் தருவீர்களோ இல்லையோ? அரசியல் தீர்வும் அபிவிருத்திப் பணிகளும் தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறை யதார்தங்களாகவே நிகழப்போகின்றன. நாய்கள் குரைத்;தாலும் வண்டி தானாகவே முன்னேறிப்போகும்.(இடையீடு) இந்த வரவு செலவுத்திடமானது இலங்கையின் பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் அனைவருக்கும் சமவாய்ப்பு, கிராமத்தை கட்டியெழுப்பதல் தொழில் முயற்சியாண்மை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற மக்களை மையப்படுத்திய பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாக கொண்டதாகவும் காணப்படுகின்றது. இந்த சமவாய்ப்பையும் கிராமங்களை கட்டியெழுப்பும் திட்டங்களையும் ஏற்று நாம் அழிந்துபோன எமது தேசத்தையும் கிராமங்களையும் புதிதாகக் கட்டியெழுப்பவோம்.
எமது அரசின் பொருளாதாரக் கொள்கையானது சந்தைப் பொருளாதார சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவையாகும்.சந்தைப் பொருளாதாரத்தை மிகையாக நம்பியிருப்பதும் அதிகரித்த அரச தலையீடும் பாதிப்பானவை என்பதை உலகம் கற்றுக் கொண்டுள்ளது. மஹிந்த சிந்தனை எதிர்கால தொலைநோக்கு கிராமத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்தி உபாயத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமமான பொருளாதார அபிவிருத்தியினையும் நிறைவு செய்யக்கூடியதான ஓர் அபிவிருத்தியை உள்ளடக்கியதாக காணப்டுகின்றது. உலகப் பொருளாதாரம் 8சதவீத வளர்ச்சியினை 2010 – 2011ம் ஆண்டுகளில் அடைந்துள்ளது.கிராமங்களை மையமாக் கொண்ட அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மூலம் வாழ்வெழுச்சியின்மூலம் பணவிக்கமானது 5சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. வேலையின்மை 5சதவீதமாகவும் வறுமை 8.9 சதவீதமாகவும் குறைவடைந்திருப்பது அபிவிருத்தியின் பலாபலன்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்றிருப்பதை வெளிப்படுத்துகின்றது.முன்பு 1000 அமெரிக்கா டொலருக்கம் குறைவாகவிருந்த தலா வருமானம் இன்று 280 அமெரிக்கா டொலராகவுள்ளது. 2016ம் அண்டில் தலா வருமானத்தை 4000அமெரிக்கா டொலராக அதிகரிப்பது மஹிந்த சிந்தனையின் இலக்காகும். (இடையீடு)
அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தரக் தொழில் முயற்சிகள் எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்டுகின்றன. இது தொடர்பான வருமான வாழி 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வங்கிக் கடன்களை அதிகரிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக வங்கிக்கடன் வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் சிறிய மற்றும் நடுத்தரக் தொழில்முயற்சிக்கு பிரிவுகளும் உருவாக்கபட்டு கடன் வழங்கல் வசதிகளும் செய்பட்டுள்ளன. இக்கடன் வழங்கலுக்கு 50வீதம் அரச உத்தரவாதம் வழங்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகளை மேலும் சக்திப்படுத்த 500மில்லியன் ரூபாய்க்கும் குறைவான வருடாந்த புரள்வினைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தரகத் தொழில் முயற்சிகளுக்கு அவற்றினை ஆரம்பிக்க ஏற்பட்ட செலவீனங்களை முதலாம் வருட வருமானத்திலிருந்து கழிப்பதன் மூலம் வரிச்சலுகை வழங்க முன்மொழியப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியதாகும். காலாண்டுப் புரள்வு 100 மில்லியன் ரூபாவுக்கும் குறைவாகவுள்ள சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கு பொருளாதாரச் சேவைக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதுடன் இதனை விரிவாக்கும்வகையில் 500 மில்லியன் ரூபாவுக்கும் குறைந்த காலண்டு புரள்வைக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சிகளுக்கு 100மில்லியன் ரூபா வரை பொருளாதாரச் சேவைக் கட்டணத்திலிருந்து விலக்களிக் கப்பட்டிருப்பதும் இத்துறையை மேலும் விரிவாக்கவதற்கான முன்மொழிவாகும். சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள் தொடர்பாக 50மில்லியன் ரூபாவிலிருந்து 300மில்லியன் வரையிலான முதலீடுகளுக்கு 4-6 வருட வரி வீடுமுறையினை விரிவாக்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்தும் வரவேற்கத்தக்கதாகும். நீண்டகால யுத்தச் சுமைகளால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மக்;களின் விரைவான பாரிய முன்னேற்றத்திற்கு இவை உதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அந்த வகையில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் சார்பாக மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலும் அச்சுவேலியில் மீண்டும் ஆரம்பமாக இருக்கின்ற கைத்தொழில் பேட்டைக்கும் வவுனியாவில் அமைந்திருக்கும் கைத்தொழில் பேட்டைக்கும் மற்றும் மட்டக்களப்பில் அமையவிருக்கும் கைத்தொழில் பேட்டைக்கும் இது உறுதியாக அமையும்.
கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே!
பன்றிக்கு முன்பாக முத்தைப் போட்டால் பன்றிக்கு அருமை தெரியாது. என்பார்கள் அதாவது பன்றி ஒருபோதும் முத்தை நாடாது. அது சேற்றையே நாடிச் செல்லும். அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்மைப்பு முன்பாகப் பொருளாதார அபிவிருத்தி என்ற முத்தைப் போட்டாலும் சரி அரசியல் தீர்வு என்ற முத்தைப் போட்டாலும் சரி அவர்கள் சுயலாப என்ற சேற்றையே நாடிச் செல்கின்றார்கள். கடந்த காலங்களை விடவும் முன்னேற்றகரமானதொரு வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் சமர்பிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தில் இருந்து மீண்டெழுந்த வந்த எமது தேசம் மெல்ல மெல்லதான் எழுந்து நடக்க வேண்டியுள்ளது. நாடு தழுவிய ரீதியில் மொத்தத் தேசத்தையே பொருளாதார ரீதியில் தூக்கி நிறுத்தும் உயரிய திட்;டங்களை இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கிறது. பசித்தவனுக்கே முதலில் உணவு தேவை என்பதுபோல் தேவை உள்ளவர்களுக்கே அபிவிருத்தியில் அதிக கவனம் தேவை. இந்த வரவு செலவுத் திட்டத்தை சகலரும் ஏற்றுக் கொள்வதன் மூலம் தமிழ் பேசும்; மக்;களின் அழிந்துபோன வாழ்விடங்களை நோக்கியும் எமது பொருளாதார அபிவிருத்திகளை நகாத்;திச் செல்ல முடியும். இதை உணர முடியாத தமிழ்த் தேசியக் கூட்மைப்பினர் இந்த வரவு செலவுத் திட்டத்தை வழமைபோல் எதிர்த்து வருகின்றனர். யார் எதிர்த்தாலும் இவ்வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்;றப்படப்போகின்றது. இதில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பும் பங்கெடுப்பதன் மூலம் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி அபிவிருத்தி முதற்கொண்டு அரசியல் தீர்வுவரை முன்னேறிச் செல்லமுடியம் என நான் நம்புகின்றேன்.அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் பெற்று தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து விட்டால் நரம்புககளை முறுக்கேற்றி உணர்ச்சி பொங்க பேசுவதற்கு இடமில்லாமல் போய்விடும் என்ற ஏக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பித் தமது சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்தும் தமிழ் மக்;களை தலைநிமிரவிடாமல் வைத்திருப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமையான கொள்கை கும்பி கூழக்க அழுகின்றது. கொண்டை பூவுக்கு அழுகின்றது. இதே போலவே தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகள் வேறு, தமிழ் மக்களின் பிரச்சிகைள் வேறு என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் மெய்ப்பித்த வருகின்றார்கள். காலம் எவருக்காகவும் காத்திருக்காது. சீப்பை ஒளித்தாலும் கல்யாணம் நடந்தே தீரும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ்வேளையில் ஓடுகின்ற நீரோட்டத்தில் சேர்ந்து ஓடினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைத் தீர்வுக்குப் பங்களித்தவர்களாவார்கள். இதன்மூலமே இதுவரை இழந்த இழப்புக்களை நாம் ஈடு செய்ய முடியும். மடிந்து போன தமிழ் இனத்துக்காக எமது இளைஞர் யுவதிகளுக்காக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கண்ணீர் சிந்துவது உண்மையானால் இழப்புக்களைச் சொல்லி உணர்ச்சி பொங்கப் பேசுவது, வாக்குகளை அபகரிப்பதற்காக வேடதாரிகள் போடும் நாடகம்போல இல்லையென்றால் நாம் இழந்துவிட்டவர்களின் கனவுகளை நிறைவேற்ற மனவிருப்பத்தோடு யதார்தபூர்வமாக சேர்ந்து உழைப்பதற்கு முன்வர வேண்டும். இல்லையென்றால் கடந்துபோன வரலாற்றில் எங்கும் நடந்தது போலவே பாடங்களைக் கற்பிக்கும் தமிழ் மக்களின் மன விருப்பங்களை ஏற்காமல் அவர்களது கனவுகளை மதிக்காமல் கற்பனைத் தேரில் ஏறி வெறும் பூச்சியங்களை மட்டும் தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களை வரலாறு ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் எனக்கூறி எனதுரையை நிறைவு செய்கின்றேன். நன்றி.
20 மே 2012
Related posts:
|
|