செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, July 7th, 2011

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

நான் எனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இன்றைய தினம் கௌரவ உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் பிரேரிக்கப்பட்டுள்ள ஒத்திவைப்புப் பிரேரணையில் கலந்துகொண்டு எனது வரலாற்றுக் கடமையை செய்வதற்காக வந்திருக்கின்றேன். இச்சபையிலே கௌரவ உறுப்பினர் யோகராஜன் அவர்கள் சில புள்ளிவிபரங்களுடன்  கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அந்தப் புள்ளிவிபரங்கள் சரியானவையல்ல. அவற்றை நான் மறுகின்றேன்.ஏனெனில் அப்பிரதேசத்திலள்ள மக்கள் மத்தியில் நீண்டகாலமாக பல வேலைகளில் ஈடுபட்டு வருவதுடன் அம்மக்களின் பிரதிநிதியாகவும் அவர்களின் சார்பான அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருக்கின்றேன்.யாரோ தமது சுயதேவைக்காக இவ்வாறான ஓர் அறிக்கையைத் தயாரிப்பதாகத்தான் நான் கருதுகின்றேன். நான் உங்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றேன். நீங்கள் அதனை உறுதிப்படுத்த விரும்பி னால் தாராளமாக நேரில் வந்து அதனைப் பார்க்கலாம். இவ்வாறு சொல்வதனை யிட்டுத் தவறாக எண்ண வேண்டாம்.

அடுத்து இன்றைய தினம் கௌரவ சம்பந்தன் அவர்களுடைய அறிக்கையைப் பார்க்கும்பொழுது அது அரைத்த மாவைத் திரும்ப திரும்ப அரைப்பதுபோல் தான் இருந்தது. எனெனில் எனது அரசியல் வரலாற்றுப் பாதையில் எனக்குப் பல அனுபவங்கள் இருக்கின்றன.ஒவ்வொருவரினதும் உள்நோக்கங்கள் யாவும் தெரிந்திருந்தபடியால் கடந்த காலத்தில் நான் அவவளவு அக்கறை எடுப்பதில்லை. எமது தேசம் நம்பிக்கையுடன் மீண்டும் நிமிர்ந்தெழுந்து வருகின்றன. அழிவுகளை மட்டும் கண்டிருந்த எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் இப்பொழுது ஆக்கம் பெற்று வருகின்றன.கடந்தகால அனர்தங்களின்போது இடம்பெயர்ந்து தவித்த தமிழ் மக்கள் இப்பொழுது தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பிக் கொணடிருக்கிறர்கள். மீள்குடியேறிய  எமது மக்களுக்கு அர்த்தமுள்ள வாழ்வியல் உரிமைகள் கிடைககும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கின்றது.

இதற்காகவே எமது அமைச்சர்கள் பலரும் வடக்கு நோக்கி வந்து உழைத்து வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் காலையில் என்னைத் தொடர்பு கொண்டு அங்குள்ள இந்த நிலைமைகளைப் பற்றிக் கேட்டறிந்து அதற்குரிய பணிப்புரைகளையும் ஆலோசனைகளையயம் வழங்கி வருகின்றார். அந்த வகையில் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். அதுபோல கௌரவ பெஸில் ராஜபக்ஷ அவர்களும் அங்கு பல தடவைகள் நேரில் வந்து சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி அந்த மீள்குடியேற்றங்களை அர்தபூர்வமாக்கி வருகின்றார். அந்தவகையிலும் என்னுடைய மக்கள் சார்பாக நான் இந்தச் சபையில் அவருககும் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதனால் எமது மக்களின் எஞ்சியுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கின்றது. அழிவுகளிலிருந்து எழுந்து நிமிர அபிவிருத்தி அரசியல் தீர்வு பெற்று மகிழ அதிகாரப் பகிர்வு இதுவே எமது எண்ணங்களும் இலகுகளும் இன்று இந்த எண்ணங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பது குறித்துக் கவலையடைந்து கொண்டி ருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமை;பினர் மட்டுமே. எமது மக்களின் அவலங்களையும் அரசியல் உரிமைப் பிரச்சினைகளையும் விற்று அதில் வியாபாரம் நடத்துகின்ற தமது அரசியல் தொழில் பாதிக்கப்படபோகின்றது என்றே தமழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவலைபடத் தொடங்கியிருக்கிறர்கள்.

சமீபத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஒரு தவறான செய்தி தமிழத் தேசயக் கூட்டமைப்பினரை மேற்கோள் காட்டி தமிழ்ப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது. அதாவது அவசரத்தில் செய்யப்பட்ட மீள்குடியேற்றம் நடுத்தெருவில் வீதிகளில் வெய்யிலுக்குள் மக்கள் விடப்பட்டார்க்ள என்ற விதத்திலான ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்து. கௌரவ பஸில் ராஸபக்ஷ அவர்கள் இப்பொழுது இங்கு இருக்கிறார்கள் என்பதற்காகவோ  அல்லது அமைச்சர்கள் இதைக் கேட்டு கொண்டிருக்கிறர்கள் என்பதற்காகவோ நான் தவறான ஒரு செய்தியை இங்கு சொல்ல வரவில்லை. நான் இந்த விடயத்தில் நேரில் சம்பந்தப்பட்டவன் என்ற வகையிலே ஓர் அர்த்தமுள்ள குடியேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

என்ற நோக்கில் நான்தான் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். நான் எதிர்பார்ததுபோல அவர் அங்கு வந்து அங்கு மீள்குடியேற்றங்களை விரைவுபடுத்தியிருக்கிறார். அந்த மக்கள் நீண்ட காலமாக வன்னி நிலப்பரப்பில் அவதிபட்டுக் கொண்டிருந்தவர்கள். பின்னர் அதிலிருந்து விடுவபட்டு வந்து இங்கு முகாம்கிளரல் வாழ்ந்த கொண்டிருந்தவர்க்ள ஆனால் உடனடியாக அவர்களை மீள்குடியேற்ற முடியவில்லை.ஏனென்றால் கண்ணிவெடிப் பிரச்சினை அது உண்மைதான். அரசாங்கம் அந்த விடயத்தில் பொய் சொல்வதாக யாரும் எண்ண வேண்டாம்.இந்த விடயத்தில் நான் நேரில் சம்பந்தப்படுவதனால்தான் எனக்கு இந்த அபிப்பிராயங்களைச் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. அதாவது நான் தமிழ் மக்களுடைய ஒரு பிரதிநிதியாக இந்த அரசாங்கத்திதல் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கம் அவ்வாறு தவறு விடுகின்றது அல்லது ஏமாற்றுகின்றது என்று நான் உணர்ந்தால், உடனடியாக ஜனாதிபதி அவர்களுடனோ அல்லது கௌரவ பெஸில் ராஜபக்ஷ அவர்களுடனோ அது சம்பந்தமாக கதைக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு இருக்கின்றது.

இப்பொழுது அங்கு கோயில் திருவிழாக்கள் நடக்கின்ற காலம். புலம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வந்துபோகின்ற நேரம் இது. அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினுடைய அனுமதி தேவைப்பட்டது. அதனால் அவர்கள் சில சிரமங்களை எதிர்கொண்டு வந்தார்கள். அதைப்பற்றி நான் ஜனாதிபதி அவர்களோடும் கௌரவ அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ அவர்களோடும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய அவர்களோடும் கலந்துரையாடினேன். அவர்கள் அதை விளங்கிக் கொண்டு அதில் அர்த்தம் இருக்கின்தென்ற வகையில் அதை உடனடியாக நீக்கியிருக்கிறார்கள். அதுபோல நேற்று முன்தினம் நான் அங்கிருந்தபொழுது கடற்தொழிலாளர்களுடைய பிரச்சினையான பாஸ் நடைமுறை பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதையும் அகற்றுவதாக எனக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்;

. மக்களுக்கு பிரச்சினை இல்லiயென்று நான் சொல்ல வரவில்லை. இங்கு மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் தெற்கிலும் பிரச்சினை இருக்கின்றது. என்றாலும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை எங்களால் உடனடியாக தீர்கக் கூடியதாக இருக்கின்றது. கண்மூடிக்கொண்டோ அல்லது கண்டும் காணாமலோ இருந்து கொண்டு என்னுடைய சுயலாபத்திற்காக நான் அரசியல் செய்யவில்லை. அடுத்த வருடம் வடககு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கின்றது. அதிலிருந்து வடக்கு மாகாண மக்கள் சிற்நததொரு நிர்வாகத்தைப் பெறப் போகின்றர்கள்.13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உரிய அதிகாரங்க்ள வழங்கப்படபோகின்றன. அதனூடாக எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் திசை நோக்கி எம்மால் செல்ல முடியும்.அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இதைவிடவும் பல மடங்கு கவலையடையப் போகிறார்கள். தமிழ் மக்களின் வாழ்வியல் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரித்துச் செலலும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துயரங்களும் அதிகரித்தே சென்று கொண்டிருக்கும்.எனவே துயரப்படபோகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த ஒத்திவைப்பு பிரேரணை தொடர்பான அறிக்கையை வாசிக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல் இவர்கள் அதில் பழைய பிரச்சினைகளைப் பற்றியே குறிப்பிட்டிருக்கின்றார்கள். எங்களுடைய அரசியல் காலத்தை 2 காலப்பகுதிகளாக பிரிக்கலாம். இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்கு முற்பட்ட காலம், மற்றையது இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பிற்பட்ட காலம். நான் இலங்கை  – இந்திய ஒப்பந்தத்துக்கு முற்பட்ட காலத்தை வேறாகவும், இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு பிற்பட்ட காலத்தை வேறாகவும் கணிக்கின்றேன். இலங்கை – இந்திய ஒப்பந்ததிற்;கு தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தமிழ் தலைமை கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று நான் நீண்டகாலமாகவே கூறிவருகின்றேன்.

 இதனை நான் என்னுடைய அனுபவங்களின் ஊடாகத் தான் சொல்லி வருகின்றேன். பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அவர்கள் ஜனாதிபதியா பதவியேற்ற பின்னர் பல தடவைகள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக இருப்பதாக சொன்னார்.அதனைப் புலித் தலைமைகள் நிராகரித்து யுத்தத்தை தொடர்ந்தார்கள்.அழிவுக்கு இடம்கொடுக்காதீர்கள் யுத்தமொன்று மூண்டால் அல்லது தொடங்கினால் அழிவு என்பது தவிர்க்க முடியாது. எனவே நாங்கள் மேதகு ஜனாதிபதி அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என்று நான் பல தடவைகள்  இப்பாராளுமன்றில் வைத்து தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தேன்.

அதற்கு அவர்கள் பேசவேண்டும் பேசுவோம் பார்ப்போம் என்று சொன்னார்களே தவிர பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை.ஜனாதிபதியிடம் இது தொடர்பாக ஒரு முறை கதைப்போம் என்று நான் பல தடவைகள் கேட்டேன். அதற்கு அவர்கள் தாம்  கதைப்பதற்கு தயார் என்றும் அது  தொடர்பாக ஒருமுறை கதைப்போம் என்று நான் பல தடவைகள் கேட்டேன். அதற்கு அவர்கள் தாம் கதைப்பதற்குத் தயார் என்றும் அதுதொடர்பாக வெளிப்படையாக அறிவித்து இருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள். எனக்குத் தெரியும். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. ஆகவே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது என்னுடைய வலுவானதும் அனுபவபூர்வமானதுமான கருத்தாகும்.

அதேபோல் சில தமிழ்ப் பத்திரிகைகள் குறிப்பாக ஸப்ரா ஏஜன்சி மூலம் அப்பாவித் தமிழ் மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து அதன்மூலம் அரம்பிக்கபட்ட ஒரு வியாபார ஊடகமான குறித்த ஒரு பத்தரிகை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம்11 ம் திகதி இதழில் மாகாணசபை என்பது மாயமானது. சில தமிழ்த் தரப்புக்கள் இதற்குத் துணைபோவது கோடாரிக் காம்பு வேலை. என எழுதி அத்தீர்வுத் திட்டத்தை நையாண்டி செய்ததுடன் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த அந்தப் பொன்னான வாய்ப்பினை ஆதரித்தவர்களையும் கோடாரிக்காம்பு என சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்லாது ஓர் இலட்சம் படையினரை அனுப்பி இலங்கையின் ஒரு பகுதியயை ஆக்கிரமித்திருந்த நிலையிலும் கூட இந்தியாவினால் 13வது திருத்தச சட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை என 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி இதழில் வெளியிட்டதன் மூலம் இந்தியாவின் படைபலத்தை கிண்டல் செய்தது.

மேலும் அந்தப் பத்திரிகை நிறுவனம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்திய – இலங்கை ஒபபந்தமானது காலவதியாகிவிட்ட ஒப்பந்தம், என்றாவது 2009ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. இவர்கள் இவ்வாறான கருத்துக்களின் மூலம் தமிழ் மக்களை அதாலபாதளத்திற்குள் தள்ளிவிட்டது. போதாதென்று தாம் பேசிய பேச்சுக்கு மாறாக இப்பொழுது நாம் சொல்;லிவந்த நடைமுறைச் சாத்தியமிக்க வழிமுறையிலான மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட முன்வந்து இருக்கின்றர்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்தபொழுது அதில் ஏன் போட்டியிடவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டபோது ஓர் அலகாக இருந்த வடக்கு –  கிழக்கு பிரிக்கப்பட்டுவிட்டது. ஆனபடியால் நாங்கள் அதில் போட்டியிடமாட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடக்கவிருக்கின்றது.

அந்தத் தேர்தலில் போட்டியிடக் கங்கணம்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.நல்ல விடயம். ஆனால் இதுதான் அவர்களது சந்தர்ப்பவாத அரசியல்.ஆனால் இப்பொழுது தமிழ் மக்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இப்பொழுது அவர்கள் அந்தத் தேர்தலில் போட்டிபோடுவதற்கு முன்வந்திருப்பது வரவேற்கக்கூடியதமாக இருந்தாலும் அதை ஒரு சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு தேர்தலலும் இதுதான் இறுதித் தேர்தல் சர்வதேச சமூகம் அக்கறையோடு உன்னிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனபடியால்; மக்களே நீங்கள் ஐக்கியப்பட்டு எங்களுக்கு வாக்களியுங்கள். உங்களுடைய ஐக்கியத்தைக் காட்டுங்கள் என்று இவர்கள் சொல்வார்கள். 1977ம் ஆண்டு அந்தக் கோஷத்தை நம்பி அதற்காக வேலை செய்தவர்களில் நானும் ஒருவன். நான் என்னுடைய கருத்துக்களை அனுபவத்தினூடாகத்தான் சொல்கின்றேனேயொழிய வானத்தில் இருந்து குதித்து வந்து அல்லது அனுபவம் இல்லாமல் சம்பந்தம் இல்லாமல் இந்தக் கருத்துக்களை சொல்லவில்லை.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர்கள் என்ன செய்கின்றார்கள், வாக்குறுதி கொடுத்தபடி தம்மை நம்பி வாக்களித்த மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்குத் தாம் பெற்ற அரசியல் பலத்தைப் பயனபடுத்துகிறார்களா என்றால் இல்லை. எமது பகுதிகளை அபிவிருத்தி செய்ய வந்தார்களா? அல்லது இவர்களது வீரப் பேச்சுக்களால் அவலப்பட்டு நின்ற எமது மக்களின் துயர்துடைக்க வந்தாவர்களா, இல்லை? ஒருவேளை உணவையாவது எமது மக்களுக்குப் போட்டார்களா இல்லை. ஆனால் சிலவேளை வீடியோ எடுப்பதற்காக அல்லது புகைப்படம் பிடிப்பதற்காக ஒரு பிஸ்கட் பக்கெற்றைக் கொண்டு போய் அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்.நாங்கள் எவ்வளவோ செய்திருக்கின்றோம். அதைவிட எங்களுடைய அமைச்சர் கௌரவ பஸில் ராஜபக்ஷ அவர்கள் அங்கே நேரில் வந்து பல செயற்பாடுகளை செய்திருக்கின்றார்.

ஆனால் குறிப்பிட்ட பத்திரிகை அந்த நல்ல விடயங்களுக்கு இடம் கொடுப்பதில்லை.அதை ஊக்குவிப்பதுமில்லை மாறாக வேண்டுமென்றே மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்படுகின்றது.சமீபத்தில் மருதங்கேணியில் நடந்த மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் அது எவ்வாறு செயற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் வர்த்தக நோக்கம் கொள்கையின் நோக்கம் தொடங்கப்பட்ட பத்திரிகை கொள்கைகாகச் செயற்பட முடியாது. கொள்ளையிடுவதுதான் அதன் நோக்கம் எனவே மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதற்குப் பதிலாக வேறு விதத்தில் அது செயற்படுகின்றது. இந்த மக்களுடைய பின்னடைவுகளுக்கு அந்தப் பத்திரிகையும் ஒரு பிரதான பங்கு வகிக்கின்றது என்பது வரலாற்று உண்மை. அவர்கள் இறுதிச் சந்தர்ப்பம் என்று கூறியது தாமே வழிகாட்டிய முள்ளிவாய்க்காலையா? அதுதான் உண்மை.

கிழக்கில் மாவிலாற்றில் இருந்து மூதூர் மற்றும் சம்பூர் நோக்கியும் அதன் பின்னர் வன்னி நோக்கியும் அரச படையினர் தமது நகர்வை ஆரம்பித்த பொழுது அழிவுகளைத் தடுப்பதற்காக நான் எற்கனவே சொன்னதுபோல இந்த நாடாளுமன்றில் பொதுபடையாகவும் சம்பந்தப்படட்டவர்களோடு தனிப்பட்ட முறையிலும் பேசியிருக்கின்றேன். ஆனால் அவர்கள் அதுபற்றிப் பார்க்கலாம் முயற்சிக்கலாம் கதைக்கலாம் யோசிப்போம் என்று சொன்னார்களேயொழிய அதைச் செய்ய முன்வரவில்லை. அப்பொழுது என்னுடைய அந்தக் கருத்தைக் கேட்டிருந்தால் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது என்பதுதான் என்னுடைய வலுவான கருத்து.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுகின்ற மக்களை புலிகள் வெளியேற அனுமதிக்க வேண்டுமென்று தான் மட்;டுமே கேட்டிருந்நதாகவும் ஏனைய 21 தமிழ் தேசிய உறுப்பினர்களும் தன்னைப்பார்த்து ஏன் இப்படிக் கூறுகின்றீர்கள் என்று கேட்டு அதனைத் தடுத்ததாகவும் கௌரவ உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் கூறியிருக்கின்றார்.

இலண்டனில் நடந்த தலைவர் ஸ்ரீ சபாரத்தினுடைய நினைவுதினக் கூட்டத்தில் அவர் அப்படிக் கேட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்து. அவரும் இப்போது என்னுடைய உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். என்னுடைய அந்தக் கூற்று எந்தளவுக்கு உண்மையென்பது அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். நான் அதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவ்வாறெல்லாம் நடந்திருக்காது.

சில உள்@ராட்சிச் சபைகளை இவர்களும் கைப்பெற்றினார்கள். என்ன செய்தார்கள்? இவர்களது ஆட்சிப் பொறுப்பிலுள்ள சபைகள் முறையாகச் செயற்படுகின்றனவா? வவுனியா நகர சபையை எடுத்துக் கொண்டால் அங்கு ஆளுங்கட்சியாக இருந்து அதை இயக்குவதற்கு ஒரு தலைவரை நியமிக்க முடியாத நிலைமை. கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்தச் சபை செயற்பட முடியாமல் முடங்கிப் போயிருக்கிறது. யாழ்.மாநகர சபையிலே எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் அதன் சேவைகளை கொச்சைப்படுத்தி அழுக்குப் பூச முற்படுகிறார்கள்.

பொதுவாக ஆளுந்தரப்புககும் எதிர்த்தரப்புக்கும் இடையில்தான் தர்க்கங்களோ இல்லது வீச்சுக்களோ ஏற்படுகின்றன.ஆனால் இங்கு எதிர்த்தரப்பினருக்கிடையே போத்தல் வீச்சுக்கள் நடைபெறுகின்றன. ஆளுங்கட்சியினரின் நல்ல செயற்பாடுகளை ஆதரிப்பதும் ஊக்கவிப்பதும் அவர்களது தவறான செயற்பாடுகளை ஊக்குவிப்பதும் அவர்களது தவறான செயற்பாடுகளைக் கண்டிப்பதும் அவற்றினை அம்பலப்படுத்துவதும்தான் எதிர்க்கட்சியின் உண்மையான செயற்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால் யாழ்.மாநாகர சபையில் ஆளுந்தரப்பினுடைய சிறப்பான செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கிலேயேதான்  இவர்களுடைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அதற்கும் சில தமிழ் ஊடகங்கள் துணைபோகின்ற வகையில் தவறான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுக் கொணடிருக்கின்றன. தங்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருப்பதாக இடைக்கிடையே இவர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர். 2009ம் ஆண்டு மே 18ம் திகதியோடு அந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டது. இது ஒரு ஜனநாயக காலம். இந்த ஜனநாயகத்தை நாங்கம் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கால கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது ஜனநாயக வழிமுறைக்கூடாகப் பல போராட்டங்களை நடத்தியிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.அவருடன் எனக்கு கூடிய பரிச்சயமும் ஐக்கியமும் இருக்கின்றது. அவருடைய குணாம்சங்களை மன இயல்புகளை நான் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றேன். அந்த வகையில் ஒரு வலுவான ஜனநாயக அமைப்பை அமைப்பதற்கு அவர் தயாராக இருக்கின்றார். அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது தெற்கினுடைய சுதந்திரம் தங்கமென்றால் வடக்கினுடைய சுதந்திரம் தகரமாக இருக்க முடியாது அதுவும் தங்கமாகத்தான் இருக்க முடியும் என்று பேசியிருந்தார்.

யாழ்.மாநகர சபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் தங்களுடைய சரியான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. யாழ்.மாநாகர சபை பிழை விடுமாக இருந்தால் அதை விமர்சிப்பதற்கு தயாராகவே நான் இருக்கின்றேன். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதுபோல நான் ஒருபோதும் சொல்வதில்லை. என்னுடைய தவறைக்கூட யாரும் வெளிப்படையாக விமர்சித்தால் அதை ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல மன்னிப்புக் கேட்கவும் நான் தயாராக இருக்கின்றேன். ஆனபடியால் தயவு செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மனந்திருந்தி வரவேண்டும். வெளியே அர்த்தமற்ற வகையில் வீரமாகப் பேசுகின்ற  இவர்கள் தங்கள்  தனிப்பட்ட சலுகைகளுக்காக குழைந்து வளைந்து குனிந்து அரசாஙகத்துடன் பின்கதவு தட்டிப் பேசுகிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம். அர்த்தமற்ற வீரவேசப் பேச்சு பேச வேண்டாம். சலுகைகளுக்காக வளைந்து குனிந்து பேசவும் வேண்டாம். இரண்டையும் கைவிட்டு எம்மைப்போல் வெளிப்படையாக நேர்மை யாக அரசாங்கத்துடன் கைகுலுக்கிப் பேசுவோம் வாருங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நான் அழைப்பு விடுக்கின்றேன். அப்போது வாழ்வியல் உரிமை முதற்கொண்டு அபிவிருத்தி வரை அனைத்தையும் பெறாலம். தேர்தல் நோக்கிற்காக அர்த்தமற்ற வீரவேசப் பேச்சுக்களை இவர்கள் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது சமாதான வழி சாத்தியமாகாவிட்டால் வேறு வழிகளை நாடவேண்டி வரும் முள்ளிவாய்காலில்

புலிகள் விட்டுப்போனதை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று ஒரு புறத்திலும் இன்னொரு பறத்தில் வெகுஜனப் போராட்டம் வெடிக்கும் என்றும் உணர்சிப் பேச்சக்களை பேசி வருகின்றார்கள். இவ்வாறான பேச்சுக்களால் தமிழ் மக்கள் வீதிக்குவந்து அவலப்பட்ட போது துண்டைக் கானோம் துணியைக் காணோம் என்று இவர்கள் நாட்டைவிட்டு ஓடியவர்கள். அத்துடன் இங்கு தனி நாடு கேட்டுவிட்டு தமிழ் நாட்டில் தங்கள குடும்பங்கள் மட்டும் வாழ்வதற்கு தனிவீடு பெற்றுக் கொடுத்ததும் கடந்த கால வரலாறு.

குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, கடந்த காலங்களைப் போல் இவர்கள் மக்களை உசுப்பேற்றி பின்னர் அவர்களைக் கைவிட்டு ஓடிப்போவதற்கே வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். எமது மக்களை மீண்டுமொருமுறை இருண்ட யுகத்துக்குள் இட்டுச் செல்வதை நான் எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பயன்படுத்தி காப்பாற்றுவேன். எமது மக்களின் நலன்கருதி நான் நேசக்கரம் நீட்டி சரியான பாதை நோக்கி அழைக்கின்றேன். உங்களுடைய கொள்கை வேறு என்னுடைய கொள்கை வேறாக இருந்தாலும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான  தீர்வு விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட யோசனையைத் தெரிவிப்போம். வாருங்கள் என்று நான் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குப் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சமீபத்தில் இந்திய தூதுக்குழு எமது நாட்டுக்கு வருகை தந்திருந்தது. அவர்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் கதைத்தார்கள்.நானும் கதைத்தேன். நான் அவர்களுடன் தீர்வு சம்பந்தமாக கதைக்கின்றபோது எந்த அடிப்படையிலும் அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இந்தப் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று கூறினேன். ஏனென்றால் அவ்வாறான நிலைப்பாட்டில் அவர்களும் இல்லை என்று நான் நினைக்கின்றேன். அடுத்து இங்கு இருக்கின்ற ஆளும் கட்சியானது ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கினற்பொழுது எதிர்க் கட்சியானது எதிரிக் கட்சியாகவே மாறி தெருவுக்கு வந்து அதனைக் குழப்பி விடுகின்றது. ஆனபடியால் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு மேதகு ஜனாதிபதி அவர்கள்கூட தயாராக இருக்கின்றார்.

அதனை வெளிப்படையாகக் கூட சொல்லி இருக்கின்றார்.(இடையீடு) பிரச்சினை இல்லை என்று அவர் சொல்லவில்லை. பிரச்சினை இருக்கின்றது. என்பதை அவர் ஏற்றுக் கொணடிருக்கின்றார்.பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். என்று அவர் பல தடவைகள் சொலலியிருக்கின்றார். நான் அவருடன் நெருங்கிப் பழகுகின்ற ஒருவன் என்ற வகையிலும் அவருடைய மன இயல்புகளை புரிந்து கொண்டவன் என்ற வகையிலும் அவர் எந்த அளவுக்கு இந்த விடயத்தில் உண்மையாக இருக்கின்றார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் நான் அவரை நம்புகின்றேன். ஆகவே, சுயலாப அரசியலை ஓரம்கட்டிவிட்டு பேதமற்ற முறையில் இந்தத் தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்குப் பாடுபடவேண்டும். இப்பொழுது இந்தச் சபையைப் பாருங்கள் இங்கு எதிர்கட்சி உறுப்பினர்களையே காணவில்லை.

 இந்த விடயத்தில் அவர்களுக்கு இருக்கின்ற அக்கறை இதல் புலப்படுகின்றது. ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கூட  – உங்களுடைய கட்சியில் கூட 03 உறுப்பினர்கள் மாத்திரம்தான் இருக்கின்றீர்கள். உங்கள் மீது ஒரு குற்றததை சுமத்த வேண்டும் என்பதற்காக நான் அதனைச் சொல்லவில்லை. அந்தளவு அக்கறை மாண்புமிகு சம்பந்தன் ஐயா அவர்களே, நீங்கள் இந்தப் பிரேரணையை முன்வைத்திருப்பதனால் இங்கு இருக்கின்றீர்கள் உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாமாக மூவர்தான்; இங்கு இருக்கின்றீர்கள். இவர்கள் எந்த அளவுக்கு அக்கறையோடு செயற்படுகிறார்கள் என்பது இங்கு வெளிப்படை. இங்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எவரையும் காணவில்லை.(இடையீடு) நான் திரும்ப திரும்ப பெஸில் ராஜபக்ஷ அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தவது அவருடைய முகத்துக்காக அல்ல. அதற்காக எதனையும் சொல்லத் தேவையில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றோம். எனக்கும் அவருக்குமிடையில் சகோதரத்துவ உறவு இருந்தாலும்கூட நான் அவருடைய முகத்துக்காக எதனையும் சொல்லத் தேவையில்லை.

நான் இங்கு ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். அதைச் சொல்வதற்கு வெட்கமாக இருக்கின்றது. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரையில் வடக்கு – கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களின் பெயர்களை  நுனிநாக்கில் வைத்துக்கொண்டு சொல்லவார். ஆனால் எனக்கும்கூட அந்தப் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருவது கஷ்டமாக இருக்கும் அவர் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களை உடனடியாகச் சொல்கின்ற ஆற்றலைக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் அவர்மீது எனக்கு அனபு பாசம் இருக்கின்ற அதேவேளை மதிப்பும் இருக்கின்றது. (இடையீடு)ஏனென்றால் அவர் அப்படியாக ஓர் ஆற்றல் உள்ளவர். ஆனபடியால் நான் உங்களுக்குச் சொன்னேன்.உங்களுக்கு யாரோ தவறானதொரு கருத்தைக் கொடுத்திருக்கிறார்கள். என்று, எனவே நீங்கள் அதுபற்றி மீள்பார்வை செய்ய வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் சகோதர வாஞ்சையுடன் நட்பு ரீதியாக நான் ஒரு விடயத்தை சொலல் விரும்புகின்றேன். நான் அரசியலுக்காகப் பேசுகின்றேன் என்று நினைக்க வேண்டாம். மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றார்.

நீங்களும் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகின்றீர்கள். ஆனபடியால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடைமுறைச் சாத்தியமான முறையிலான சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை கொடுக்காமலிருந்தால் மேதகு ஜனாதிபதி அவர்கள் நிச்சயமாக அதனை ஏற்றுச் செயற்படுத்துவார் என்பதை நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டுமொரு முறை நம்பிக்கையுடன் வெளிப்படு;த்துகின்றேன். நான் எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு எனது கருத்துக்களை தெரிவிக்க வரவில்லை. எங்களுக்குக் கிடைத்துள்ள சந்தர்பங்களை நாங்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்துடன் தான் எனது கருத்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

ஏனெனில் கடந்த காலத்தி;;ல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்  தமிழ் மக்களுக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் கிடைதிருந்தன. அன்றைய தலைமைகள் தமது சுயலாப அரசியல் நடைமுறைகளின் காரணமாக அந்தச் சந்தர்ப்பங்களை தட்டிக்கழித்துவிட்டர்கள். சிலர் அவற்றைத் துஷ்பிரயோகம் செய்து விட்டார்கள். இன்று காலங்கடந்து போய்விட்டது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? என்று சொல்வார்கள். அவ்வாறின்றி இப்போதுள்ள சூழ்நிலையில் மேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மிக விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன் நன்றி.

7 ஜூலை 2011

Related posts:

வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலி...
133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ள...
காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் -  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு...
ஆள நினைக்கும் தரப்பினருக்கு துணையாக இருக்கும் தரப்பினர் வாழ நினைக்கும் மக்களுக்கு வினையாக இருக்கக் க...