செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!

இலங்கைத் தீவில் காலத்துக்கு காலம் ஆட்சியதிகாரங்களில் இருந்து வந்தவர்கள் அவ்வப்போது அரசியலமைப்புக்குப் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் கொண்டிருக்கும் இன்றைய அரசாங்கம் அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டத்துக்கான அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றது. யதார்தப்பூர்வமாகப் பார்த்தால் இந்தப் பாராளுமன்றில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே இந்த அரசியலமைப்புத் திருத்ததை யார்தான் எதிர்த்தாலும் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றது. யதார்தபூர்வமாக பார்த்தால் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களால் தெரிவுசெய்யப்ட்ட பிரதிநிதிகளின் அங்கீகாரத்தோடு இது நிறைவேறப் போகின்றது என்பதே தெளிவான உண்மையாகும்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்;யப்படும் ஒருவர் இந்த நாட்டில் இரண்டு தடவைகள் என்றில்லாமல் எத்தனை தடவைகளும் பதவி வகிக்கலாம் என்பது 18வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஒரு பிரதான விடயமாகும். இது ஓர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமே என்பதை இங்கள்ள சகலரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.அரசியமைப்புச் சட்டம் இடமளிப்பதனால் மட்டும் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க முடியாது என்பதையும் சட்டத்தில் இடமிருந்தாலும் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்கள் சமூகத்தினரும் தமது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை அவர்களது வாக்குரிமையென்பதாலும் இந்த நாட்டின் ஆட்சியதிகாரத்தில் அமரப் போகின்ற அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கே உண்டு என்பதாலும் இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம் ஒருவர் எத்தனை தடவைகளும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற விடயம் மக்களின் ஜனநாயக விருப்பங்;களுக்கோ அன்றி ஜனநாயகச் சுதந்திர முறைமைக்கோ விரோதமான விடயமல்ல என்பதை இந்தச் சபையில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆனாலும் இதற்கான திருத்தச் சட்டமூலம் என்பது ஜனாதிபதி அவர்களால் இத்தனை அவசரமாகக் கொண்டுவரப்படத்  தேவையில்லை என்ற விமர்சனங்களும் சில இடங்களில் எழுந்திருக்கின்றன. இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவது சரியா அல்லது தவறா என்று சிந்திப்பதற்க யாருக்கும் உரிமை உண்டு என்பதை நான் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இந்தச் சட்டமூலம் கொண்டவரப்படுவது தவறில்லை என்றால் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்று அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்குத் தேசிய நலன்களை முன்னிலைப்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் சாதகமான சூழ்நிலை இதுவாகவே இருக்க முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இந்தச் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்பிக்கப்பட்டிருக்கும் 18வது திருத்தச் சட்டத்தில் 17 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ள  சுயாதீன ஆணைக்குழுகக்ளை எவ்வாறு நிர்வகிப்து என்ற விடயமும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான ஆணைக்குழுக்கள் இதுவரை காலமும் சுயாதீனமாகச் செயற்பட்டு வந்திருந்நதாலும் இவற்றை நிர்வகிப்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநதிக் களுக்கான பங்களிப்பு என்பது மறுக்கப்பட்டிருந்தமையை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஆகவே சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கும் சட்டத்திருத்தத்தை இச்சட்டமூலம் கொண்டிருப்பது குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் இங்கு எழுந்திருந்தாலும் மறுபுறத்தில் இந்த ஆணைக்குழுக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களின் பங்களிப்பும் உரிமையும் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் திருப்தியடைகின்றோம்.

ஆணைக்குழுக்களில் யாரை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுப்பதற்கும் அதை ஜனாதிபதி அவர்களுக்குப் பரிந்துரை செய்யவோ அல்லது சிபாரிசு செய்யவோ உரிமைகொண்ட பாராளுமன்ற பேரவையை 18வது திருத்தச்சடட்ம் கொண்டிருக்கின்றது. உத்தேசப் பாராளுமன்றப்  பேரவை பிரதம அமைச்சர், சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதம அமைச்சராலும் எதிர்க்கட்சித் தலைவராலும் தெரிவு செய்யப்படும் இரு உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக மொத்தம் 5 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். பிரதம அமைச்சராலும் எதிர்க்கட்சித் தலைவராலும் நியமிக்கப்படும் இரு உறுப்பினர்களும் தமிழ் முஸ்லிம் மக்கள் சார்ந்த பிரதிநிதிகளாக இருப்பதற்கான அரிய வாய்ப்பை இந்தச் சட்டமூலம் கொண்டிருப்பது சாதகமான ஒரு விடயமாகும் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மைப் பொறுத்தவரையில் நாம் இதுவரை காலமும் எமது மக்கள் எதிர்கொண்டு வந்திருந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாக உணவு முதற்கொண்டு உரிமைப் பிரச்சினை வரைக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முதற்கொண்டு அதற்கான நடைமுறைப் பிரச்சினைகள் வரைக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஊடாகவே பேசித் தீர்வு கண்டு வந்திருக்கின்றோம். அந்த வரிசையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் நாம் கொண்டிருக்கும் இணக்க அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் எமது மக்களின் சில விடயங்கள் குறித்தும் பேசி அதில் வியக்கத்தக்க காரியங்களையும் ஆற்றி வந்திருக்கின்றோம்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் சட்டத்தையும்  நடைமுறையினையும் கொண்ட தண்டவாளத்தில் நாம் செல்ல வேண்டிய பயணத்திற்கான புகைவண்டியை ஏற்றிவைத்து எமது பயணத்தை ஆரம்பித்து அதில் நகர்ந்து வருகின்றோம். சட்டத்தையும் நடைமுறையினையும் நாம் இணைத்து வைத்து இணக்க அரசியல்  கோட்பாடு என்ற எமது பயணத்தை நோக்கிய புகைவண்டியினால் மட்டுமே எமது பயணத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம்  எமது மக்களை  நிர்வகிக்கும் ஆணைக்குழுக் களை நியமிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவதால் எமது மக்கள் எதிர்கொள்;ளும் அனைத்து பிரச்சினைகளையும் அவருடனேயே நாம் இலகுவாகப் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை எமக்கண்டு.

(இடையீடு)

பலமான அரசை உருவாக்குவதினூடாகவே விரைவாக அபிவிருத்தி யையும் விரைவானதும் கௌரவமானதுமான ஓர் அரசியல் தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியுமென்று நாம் நம்புகின்றோம். ழுடனநச வாந ளவயவந பசநயவநச வாந ளவயடிடைவைல பசநயவநச வாந ளவயடிடைவைல பசயவநச வாந னநஎழடரவழைn. – என்ற அடிப்படையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே அண்மையில் எமது கட்சியின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தபொழுது அவர் இரண்டு விடயங்களைப் பற்றி முக்கியமாக திருத்தச் சட்டம் தொடர்பான சில முக்கிய விடயங்களை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதாவது பாராளுமன்றப் பேரவையில் சிறுபான்மைப் பிரதிநிதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டமென்பது எந்தவகையிலும் மாகாண சபையினைக் கட்டுப்படுத்தாது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார். அதனை உயர் நீதிமன்றமும் அதனுடைய தீர்பில் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்தப் பாராளுமன்ற சபையானது விசித்திரமான பல விவாதங்களைக் கண்டிருக்கின்றது இன்று நிறைவேற்றப்பட  இருக்கின்ற 18வது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி தமிழ்த் தேசியக கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு பிரசின்னமாயிருக்கின்றார்கள். 18வது திருத்தச் சட்டம் என்பது 13வது திருத்தச் சட்டத்தையும் 17வது திருத்தச் சட்டத்தையும் பாதிப்புக்குள்ளாக்கின்றது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயராலே அல்லது உதயன் பத்திரிகையின் பெயராலே அப்பத்திரிகையின் உரிமையாளர் கௌரவ உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுகின்றாரோ அல்லது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கருத்தோ என்பது அவர்களுக்கே வெளிச்சம்.நாங்கள் இச்சபையில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விவாதித்த போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதை எதிர்த்து வந்தார்கள்.

இது அரைகுறைத் தீர்வு என்றும் இந்த அரசியலமைப்பினூடாக எந்த பிரச்சினைக்கும் தீர்வுக்கான  முடியாத என்றும் வெறும் சயலாப அரசியல் நோக்கில் 13வது திருத்தச் சட்டத்தை இழிந்துரைத்து வந்தார்கள். அன்று ஒரு பேச்சு. இன்று ஒரு பேச்சு. அன்று ஒரு முகம். இன்று இன்னொரு முகம். இவ்வாறு அடிக்கடி முகமூடிகளை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு இவர்கள் இங்கு பேச முற்படுவது எமக்கு ஆச்சரியத்தைத் தந்துவிடவில்லை. காரணம் இவர்கள் எதிர்ப்பு அரசியல் என்பதையே கொள்கையாகக் கொண்டவர்கள். இவர்களது இலக்கற்றதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள் என்பதே உண்மை நிலையாகும். ஏனென்றால் இங்கு அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டால் எமது மக்களின் அவலங்கள் தீர்த்துவிட்டால் தங்களது நாற்காலிக் கனவுகளும் அற்புதமாக அரசியல் ஆசைகளும் அற்றுப்போய்விடும் என்ற அச்சம் அவர்களிடத்திலே குடிகொண்டிருக்கின்றது. இவர்கள் மக்களின் அவலங்களை வைத்து அது தொடர்பான அறிக்கைகளை விடுத்துக் காலம்தள்ளும் அரசியலை நடத்தியே பழக்கப்பட்டவர்கள்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள். ஜனாதிபதி பிரமதாஸவுடனான பேச்சுவர்த்தையை உடைத்தவர்கள். ஏன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி அதனை கிழித்தெறிந்துபோது அதில் பங்குகொண்டவர்கள். அதன் பின்னர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க  – புலிகள் பேச்சுவார்ததை தற்போதைய ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ – புலிகள் பேச்சுவார்த்தை என்பவற்றின்போதும் ஏன் அடுத்தடுத்த வந்த சந்தர்ப்பங்களின் போதும் இவர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள்? யார் பக்கம் நின்றார்கள்? என்பதைச் சந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களின் பக்கம் நின்ற சாத்திய மானதற்காக வாதிட்டார்களா? அல்லது சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பேச்சுவார்த்தைகளை முறித்திருந்த புலிகளின் தலைமைக்காக சுயலாப நோக்கில் வாதிட்டார்களா?

அரசியல் உரிமைத் தீர்வினை காண்பதற்காகக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்து நின்ற நடைமுறைச்சாத்தியமான எந்தக் கோரிக்கையும்  முன்வைக்கவில்லை என்பதுமே அவர்களுடைய வரலாறாக விரிந்து கிடக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இதில் அனைத்துத் தமிழ் தலைமைகளும் பங்கெடுத்து எமது மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வாரங்கள் என்று நாம் இவர்களை நோக்கிப் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்நத போதிலும் அதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்  கொண்டதாகக் தெரியவில்லை. அவ்வாறு அன்று அவர்கள் எமது வழிமுறையை ஏற்றிருந்தால் அதன் பின்னர் எமது மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் நிகழ்ந்திருக்காது. இன்று கொண்டுவரப்பட்டிருக்கும் 18வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குப் பாதகமானது என அவர்கள் கருதுவார்களேயானால் அந்தப் பாதகமான சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கும் இதே கூட்டமைப்பினரே பொறுப்புக்கூற வேண்டும்.

எனவே இந்தச் சபையினூடாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன். அதாவது இதுவரைகாலமும் சாத்தியமற்றதைக் கேட்டு எமது வரலாற்று வாழ்விடங்களை சாம்பல் மேடாக்கியது போதும். எமது மக்களின் வாழ்க்கைமீது தொடர் துயரங்களை சுமத்திய வரலாறுகள் போதும். ஆகவே எதையும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் இதுவரை காலமும் நிராகரித்து வந்த 13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி இப்போது மட்;டும் சுயலாபங்களுக்காகப் பேச முற்படாதீர்கள். அவ்வாறு நீங்கள் 13வது திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவது உண்மை என்றால் இதில் அரசியல் கபட நாடகங்கள் இல்லை  என்பதை நீங்கள் நிரூபிக்கத் தயார் என்றால் எம்மோடு இணைந்து தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் ஒன்று கலந்து பேசுவதற்கு முன்வாருங்கள். எங்கள் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய எல்லா வாகனங்களும் போய்ச் சேர்ந்துவிட்டன. இப்பொழுது இருக்கின்ற ஒரேயோரு வாகனம் நாம் செல்லும் இந்தப் புகைவண்டி மட்டும்தான். இனியும் எமது மக்களை இருண்ட சூழலுக்குள் இருத்தி வைக்க நிர்ப்பந்திக்காமல் நடைமுறைச்சாத்தியமான பாதையில் பயணிப்பதற்கு கௌரவ உறுப்பினர் பியசேன அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு நீங்களும் அரசதரப்புக்கு விரைவாக வாருங்கள் என்று அந்த மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன். நன்றி. வணக்கம்.

20 மே 2000

Related posts:

வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் - நாடாளுமன்றில...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 7 ஜூலை 2011 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
 பதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...