செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 பெப்ரவரி 2010அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Wednesday, February 24th, 2010

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்த கௌரவமான சபைக்குப் பொருத்தமான ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் முழு ஆதரவுடன் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். இந்த வகையிலும் உங்களைத்  தெரிந்த வர் என்ற வகையிலும்; என்சார்பிலும் எனது கட்சியின் சார்பிலும் எனக்கு வாக்களித்த மக்களின் சார்பிலும் எனது நல்வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். உங்களைப் போன்ற கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும் நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்தவர் பிரதம அமைச்சராகத் தெரிவு செய்;யப்பட்டுள்ள மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது வாழ்துக்களைத் தெரிவித்;துக் கொள்கின்றேன்.

இந்தச் சபையிலே ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியிரும் இணைந்து இப்பாராளுமன்றத்தின் சபாநாயகராக உங்களை ஏகமனதாகத் தெரிவு செய்திருப்பதைப் போனறு மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய அரசுடன் எதிர்க்கட்சியினரும் இணைந்து இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் பேணக்கூடிய வகையில் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கௌரவமான நடைமுறைச்சாத்தியமான ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான முயற்சியை விரைவில் மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டு எனது சிறிய உரையை முடித்துக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்.

24 பெப்ரவரி 2010

Related posts: