செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 19 நவம்பர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Monday, November 19th, 2007

கௌரவ குழுக்களின் பிரதிதிவிசாளர் அவர்களே!

எப்பொழுதுமே யாதார்த்தை மட்டுமே பேசிப் பழக்கபட்டவன் நான்.நடைமுறைச்சாத்தியங்கள் மட்டுமே பேசி பழக்கப்பட்டவன் நான்.உண்மையே மட்டுமே பேசி பழக்கப்பட்டவன் நான். உண்மைக்கும் யாதார்த்திற்கும் நியாயங்களுக்கும் மாறாக நான் எதையுமே இந்தச் சபையில் பேச விரும்பவில்லை. இதுவரை கால வரலாறும் கண்டிருந்த தமிழ் தலைவர்களில் பலர் அரசியல் சூழ்நிலை விமர்சிப்பதில் மட்டுமே தங்களது அதிகமான காலத்தைக் கழித்திருக்கிறார்கள். ஆனால், நான் அரசியல் சூழ்நிலையை மாற்றியமைப்பதில் மட்டும் எனது காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி வருகின்றேன். அதற்காக சாத்தியமான அனைத்து வழிமுறைகளிலும் நான் முயன்று வருகின்றேன். அமைதி எங்கள் தேடல் அபிவிருத்தியும் அன்றாட அவலங்களுக்குமான தீர்வும் தான் எங்கள் திட்டம். அரசியலுரிமைச் சுதந்திரமான எங்கள் இறுதி இலக்கு இந்தப் பன்முக சிந்தனைகளோடுதான் நான் அரசியல் சூழலை மாற்றியமைப்பதற்காக உழைத்து வருகின்றேன்.

இந்த நாடு தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் ஆகிய அனைத்து இன மக்களும் சொந்தமென்று கூறி உரிமையோடு வாழவேண்டிய நாடு. இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பௌத்தர்களும் சகோதர மக்களாக வாழவேண்டிய நாடு. இனங்களையும் மதங்களையும் பிரதேசங்களையும் மனித நேயமே ஒன்று சேர்க்கின்றது. ஆனால் அரசியல் மட்டும்தான் அவற்றைப் பிரித்து வைக்கிறது. அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்றவர்களாக முகமுயர்த்தி வாழவேண்டும் என்பNது எமது விருப்பம். அதற்காகவே நாம் அயராது உழைத்து வருகின்றோம்.

தமிழ் பேசும் மக்களின் பெயரால் தமிழ் பேசும் மக்களையே தினம் தினம் போர் வெற்றிக்கு கொல்லக் கொடுக்கும் என் தேசத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கின்றேன். தினம் தினம் கொலையுண்டுபோகும் எமது மக்களின் குருதியின் மீது நடந்தே நான் இங்கு வந்திருக்கின்றேன்.காணாமல்  போன நிம்மதியைத் தேடிக் கொண்டிருக்கும் எமது மக்களின் சார்பாகவே நான் இந்தச் சபைக்கு வந்திருக்கின்றேன். உரிமைக்குரல் கொடுக்கவும் உறவுக்குக் கரம் கொடுக்கவும் சமாதானப் புறாக்களை எண்ணத்தில் ஏந்தி தமிழ் பேசும்; மக்களின் ஜனநாயகத்தின் குரலாக நான் இந்தச் சபைக்கு வந்திருக்கின்றேன்.

இந்த வரவு – செலவுத் திட்டத்தை நான் ஆதரிக்கின்றேனா? அல்லது எதிர்க்கின்றேனா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படடிருக்கின்ற இன்றைய காலசூழ்நிலையை நான் முதலில் எண்ணிப் பார்கின்றேன். இன்றைய சூழல் ஒரு யுத்த சூழல் இன்று தொடர்ந்துகொண்டிருக்கும் யுத்தத்தின் கொடிய கரங்கள் ஒவ்வொரு சாதாரண குடிமகனின் வீட்டுக் கதவுகளையும் தட்டிக் கொண்டிருக்கின்றது. மரணங்களும் அவலங்களும் அதனால் நிகழும் அகதி வாழ்வும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இத்தகைய ஒரு யுத்த சூழ்நிலையில் இந்த வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இதில் யுத்ததிற்கு மட்டும்தான் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற குரல்கள் இந்தச் சபையில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் இவ்வாறு குரல் கொடுக்கின்றவர்கள் இந்த யுத்த சூழ்நிலையை மாற்றியமைப்பதற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள்? சமாதானத்தையும் அமைதித் தீர்வையும் உருவாக்குவதற்கு எந்ந வகையில் உழைத்திருக்கிறார்கள்.

எனவே முதலில் இந்த யுத்த சூழ்நிலையை மாற்றியமைப்பதற்கு இவர்கள் திறந்த மனதோடு முன்வர வேண்டும்.யுத்ததை தொடர்ந்து நடத்துவதற்குக் தூண்டுதலாக இருக்கின்ற புலித் தலைமையின் தரகர்களாகத்  தங்களை ஆக்கிக்கொண்டு இன்றைய யுத்த சூழலுக்குத் தாமே காரணமாக இருக்கின்ற இவர்களுக்கு இந்த வரவு –  செலவுத் திட்டம் குறித்த விமர்சனம் செய்வதற்கு எந்தவிதத் தார்மீக உரிமையையும் இல்லை என்றே கருதுகின்றேன்.

நோயாளியான இருக்கின்ற ஒருவன் தான் நோயாளி நோயாளி என்று திரும்ப திரும்ப கத்திக் கொண்டிருப்பதில் மட்டும் காலத்தைக் கழிக்க மாட்டான். தனது நோயைக் குணப்படுத்துவதற்குரிய மருத்துவத்தையும் அவன் நாடியே தீரவேண்டும் மருத்துவத்தைத் தேடாமல் தான்  நோயாளி நோயாளி என்று திரும்ப திரும்ப கூச்சலிட்டுக் கொண்டிருப்பவன் சுத்தமான மனநோயாளியாகவே கருதப்படுவான். தமிழ்  பேசும் மக்களின் அரசியல் உரிமைப்; பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று வெறும் சுயலாப  நோக்கில் கூச்சலிடும் இவர்கள் அதற்கான வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. அதற்கான மருத்துவத்தை தேடியிருக்கவில்லை. மாறாக சமாதானத்திற்;கும் அரசியல் உரிமைத் தீர்வுக்கும் தடையாக இருந்துவரும் புலித் தலைமையின் யுத்தத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் பகிரங்கமாக மறுத்தரைக்க முடியுமா என்ற கேட்கின்றேன்.

திருகுதாளமிட்டு திருட்டு வாககுப் போட்டு தங்களை தாங்களே தெரிவுசெய்து கொண்ட பாராளுமன்றம் வந்திருக்கின்ற புலித் தலைமையின் தரகுக் கூட்டமைப்பினர் சிலர் தங்களது கன்னியுரையின் போது பாராளுமன்றத்தில் வைத்தே யுத்தப் பிரகடனம் செய்தனர். நாற்பதாயிரம் சவப்  பெட்டிகளைத் தயார்  நிலையில் வைத்திருங்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாற்பதாயிரம் படையினரும் கொல்லப்படுவார்கள் என்றும் யுத்த சன்னதம் கொண்டு அவர்கள் ஆற்றிய ஆவேச உரை எதைக் காட்டியது? படையினர் இனி வந்து தாக்குதல் நடத்தட்டும் பார்க்கலாம் என்றும் கொழும்பில் வந்து புலிகள் குண்டு போடுவார்கள் என்றும் கூறி புலிகளின் யுத்த வெறிக்குத் துணைபோகும் வகையில் இன்று ஆவேச உரை நிகழ்த்துகிறார்கள். இந்தக் தரகுக் கூட்டமைப்பினர் இவ்வாறு பாராளுமன்றில் ஆவேச உரை நிகழ்த்திவிட்டு அடுத்தகணமே பாராளுமன்றத் தேநீர் விடுதியில் படைத் தளபதிகளோடும் அமைச்சர்களோடும் குளிர்பானமருந்தி சூடு தணிப்பதும் தமது பாதுகாப்புக்காக அதே படையினரின் உதவியை நாடுவதும் இந்தப் புலித் தரகுப் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நடவடிக்ககைளாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 கார்த்திகை மாதம் 17ம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அதிகாரத்துக்கு வந்தவுடன் இனப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரோடும் தான் பேசப்போவதாகவும் குறிப்பாக புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தான் நேரடியாக பேசுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூறி ஜனாதிபதி அவர்கள் சமாதானத்துக்காக கதவுகளை அகலத் திறந்திருந்தார். ஆனால் அன்றிலிருந்து சரியாகப் பத்து நாட்களில் அதாவது அதே காhத்திகை 27ல் புலித் தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த உரையில் என்ன தெரிவித்தார் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமது உரைகளுக்காக போராடி வென்றெடுக்க வேண்டுமென உறுதி பூண்டிருப்பதுடன் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாக சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றுவதற்குக் தாம் நிர்ப்பந்திக்கபட்டதாக தனது உரையில் தெரிவித்திருந்த பிரபாகரன், தனது யுத்த எண்ணங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பேச்சு வார்த்தைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். சர்வதேச சமூகத்துக்காக ஒருபுறத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கிப் பாhப்போமென தெரிவித்துக்கொண்டு மறுபுறத்தில் இராணுவ அணுகுமுறையினை வன்முறைப் புரிந்துணர்வு ஒப்பந்த காலப்பகுதியில் வழமையை விடவும் அதிகமாகக் கடைப்பிடிப்பதற்கும் புலிகள் ஆரம்பித்தனர்.

25-01-2005ல் மட்டக்களப்பு இருதயபுரத்தில் புலிகளின் கைக்குண்டு வீச்சில் ஏழு பொலிஸார் காயமடைந்தனர். 4-12-2005ல் யாழ்.கோண்டாவில் சந்தியில் புலிகளால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்தனர். 06-12-2005ல் யாழ் இளவாலையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 7படையினர் கொல்லப்பட்டனர். 7-12-2005ல் அறிக்கைவிடுத்;ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. 11-12-2005ல் வவுனியா வைத்தியசாலையில் வைத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

06-12-2005ல் சர்வதேச சமூகத்திடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த அவசர வேண்டுகோள்.

கடந்த மாதம் 17ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த மாதம் 19ம் திகதி பதவியேற்றுள்ளார்.

பதவிக்கு வந்ததும் ஈ.பி.டி.பி. உட்பட நாட்டின் சமாதானத்தை விரும்பும் மக்களும் சக அமைப்புக்களும் எதிர்பார்த்திருந்தது போல தனது சமாதான நல்லெண்ண சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இனப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் தான் பேசப்போவதாகவும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசப்போவதாகவும் அறிவித்திருந்த புதிய ஜனாதிபதி அவர்கள் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகவும் ஆர்வத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் இவ்வறிப்பானது யுத்த முனைப்புக்களுக்கும் வன்முறைகளுக்கும் இலங்கையில் இடமிருக்காது என்ற நம்பிக்கையினை சமாதானத்தை விரும்பும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.ஜனாதிபதியின் சமாதானத்துக்கான நல்லெண்ண சமிக்ஞைக்கு புலிகள் தரப்பில் இருந்து கிடைக்கப்போகின்ற பதிலை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

2005 நவம்பர் 27ல் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழமைபோல் தனது வருடாந்த உரையை நிகழ்த்தியிருந்தார். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்திருந்த பிராபகரனின் வருடாந்த உரை சமாதானம் குறித்த நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கவில்லை.

வழமைபோல் யுத்த முனைப்புக்கள் குறித்த கருத்துக்களையும் சமாதானம் குறித்த நம்பிக்கையீனங்களையும் தனது உரையில் தெரிவித்திருந்த புலிகளின் தலைவர் பிராபாகரன் கடந்த காலங்களில் தாம்; பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தது ஏன் என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தார்.

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதைத் தான் தெளிவாகப் புரிந்து தமது உரிமைகளைத் தாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதி பூண்டிருந்;த போதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற தாம் நிர்ப்பந்திக்கபட்டதாகத் தனது உரையில் தெரிவித்திருந்த பிரபாகரன் தனது இலக்கை எட்டுவதற்கான யுத்த எண்ணங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காகவே தாம் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் சமாதானம் குறித்த நம்பிக்கையீனங்களை மட்டுமே தனது இவ்வருட உரையில் தெரிவித்ததுடன் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப் பார்ப்போம் என்று கூறியிருப்பது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக மேற்கொள்ளபட்ட முயற்சி என்பது தெளிவாகின்றது.

சர்வதேச சமூகத்திற்காக ஒரு புறத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கிப் பார்ப்போம் எனத் தெரிவித்துக் கொண்டு மறுபுறத்தில் இராணுவ அணுகுமுறையினை இப்புரிந்துணர்வு ஒப்பந்த காலப்பகுதியில் வழமையை விடவும் அதிகாமக் கடைப்பிடிக்க புலிகள் ஆரம்பித்து விட்டனர்.

வடக்கில் யாழ்;பபாணத்திலும் திருமலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலும் படையினரைத் தூண்டிவிடும் வகையில் புலிகளால் பரந்த அளவிலான இராணுவ முன்னெடுப்பும் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் முதன் முதலாகப் படையினர் மீது யாழ் கோண்டாவில் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு ஆறு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். பின்னர் காயமடைந்த ஒருவர் கடந்த 5ம் திகதி காலமானார்.

அதேபோல் முதன் முதலாக யாழ்.நீர்வேலிப் பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் இதுவரை நடத்தியிருக்காத பரந்த அளவில் நேரடித் தாக்குதலிலும் புலிகள் ஈடுபட்டு இரு படையினர் கொல்லப்பட்டுள்ள னர். மேலும் டிசம்பர் மாதம் 20ம் திகதியில் புலிகளால் இருபாலையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 5 இராணவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை கிழக்கில் காத்தான் குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏ.எல்.எம்.பள_ஸ் அவர்களைப் படுகொலை செய்ததன் மூலம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான மோதல்களையும் முரண்பாடுகளை யும் புலிகள் தூண்டிவிட்டிருக்கிறார்கள். அதேபோல் கடந்த மாதம் 18ம் திகதி அதிகாலை அக்கரைப்பற்று முஸ்லிம் பள்ளிவாசலினுள் புலிகள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலால் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்;டதுடன் 13 பேர் படுகாயமடைந்தனர். அதேமாதம் 19ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து 4 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் டிசம்பர் 6ம் திகதி புலிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மருதமுனை பகுதி வாசிகளான இரு முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

மாணவர்களின் பெயரால் மாணவர்களின் சீருடைகளை அணிந்த புலிகளின் சிறுவர் படையினர், படையினரின் சோதனைச் சாவடிக்கு கல் எறிந்து தாக்குவதால் மாணவர்களின் கல்வி மற்றும் இயல்பு வாழ்க்கை என்பனவும் இன்னமும் பல்மடங்கு பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

புலிகள் புதிய பாணியில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளால் சமாதானத்தை விரும்பும் மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியிருக் கின்றனர். இதேவேளை யுத்த எண்ணங்களை தூண்டிவிடும் வகையிலான பிரசாரங்களை புலிகளின் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இறுதி யுத்தத்திற்கான நிதி சேகரிப்பு என்று பாரிய அளவில் உளவியல் அச்சுறுத்தலை விடுத்து பலாத்காரமாக நிதி சேகரிக்கும் காரியத்திலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளை கோண்டாவில் பகுதியில் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதல்  சம்பவத்தை வீடியோ படம் பிடித்து வெளிநாடுகளில் காட்டியும் நிதி திரட்டி வருகின்றனர்.

ஆகவே இது குறித்து சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைளை எடுத்து பணியாற்ற வேண்டும்.

யுத்தத்தை தொடராதிருக்கவும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கவும் ஆவன செய்து அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் சமாதானம் குறித்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் சர்வதேச சமூகத்தின் கைகளில் நாம் ஒப்படைக் கின்றோம்.

சமாதானத்தை உருவாக்கவும் தமிழ் பேசம் மக்களைக் காப்பாற்றவும் விரைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுக்கின்றது.

 19 நவம்பர் 2007

Related posts:

மக்களின்தேவைகளை நிறை வேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்த...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
இழப்பீடுகள் பாதிக்கப்பட்ட மக்களை உரிய காலத்தில் சென்றடையாமையே அவலங்கள் தொடரக் காரணம் - நாடாளுமன்றில்...