செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 23 ஒக்டோபர் 2007 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
Tuesday, October 23rd, 2007கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடிய தூரமானது. அதற்கான பாதை என்பது கரடுமுரடானது. சமாதானத்திற்கான பயணத்தில் கற்கள் இருக்கும் முட்கள் இருக்கும். புதர்கள் இருக்கும் அந்தப் பாதையின் நடுவே பாதாளங்கயும் இருக்கும். இத்தனை தடைகளையும் தாண்டித்தான் சமாதானம் என்ற இலக்கை நோக்கி எவரும் நடக்க முடியும். அதற்குத் தேவiயானது நம்பிக்கையும் மனஉறுதியுமம் விடாமுயற்சியும் ஆகும். இத்தகைய நம்பிக்கையோடும் மனஉறுதியோடும் விடாமுயற்சியோடும் பல தடைகளையும் தாண்டி மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டு தலில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பயணிக்கின்றது என்றால் அது சமாதானம் என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணமாகவே இருக்குமென நான் திடமாக நம்புகின்றேன்.
ஆகவேதான் நாங்கள் எதிர்பார்ப்பது பொல் சமாதானத்தை நோக்கிப் பயணித்து வருகின்ற இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நியாயமான அணுகுமுறைகளுக்கு ஈ.பி.டி.பி. யினராகிய நாம் நம்பிக்கையோடு ஆதரவு வழங்கி வருகின்றதாம். அந்த வகையில் இன்று நிறைவேற்றப்படவிருக்கின்ற வடமாகாண உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்து வதற்காக இந்த உள்@ர் அதிகாரசபைகள் (விஷேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நான் மனப்;பூர்வமாக ஆதரித்தவனாக எனது உரையை இந்தச் சபையில் தொடர விரும்புகின்றேன்.
வடமாகாண உள்@ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத ஒரு சூழலில் அதற்கான தேர்தலை நடத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்யுமாறு கோரும் இந்த சட்டமூலத்தை நான் வரவேற்கின்றேன். இன்று நடப்பது எதுவாகவும் இருக்கலாம்.நாளை நடக்கப்போவது இன்றையதை விடவும் நன்மைதரும் காரியமாகவே இருக்கும் என்ற அந்த நம்பிக்கையோடும் அந்த அனுபவங்களின் எதிர்பார்ப்போடும் இந்தச் சட்டமூலம் இச்சபையில் நிறைவேற்றப்படுமென நான் எதிர்பார்க்கின்றேன். அந்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கான நியாயபூர்வமான காரணங்களை இந்தச் சட்டமூலம் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் வருகின்ற தேர்தலில் புதிய நடைமுறை ஒழுங்குகள் பின்பற்றப்படவிருப்பதனாலும் இந்தச் சட்டமூலத்ததை ஆதரி;ப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருக்கம்; மக்களும் தாம் தற்காலிகமாக தங்கியிருக்கும் உள்@ராட்சி சபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற விடயம் உண்மையில் ஒரு வரப்பிரசாதமாகும். இது தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் ஸ்திரப் படுத்துவதற்கான வாய்பாகும். அதற்காக தமிழ் பேசும் மக்களின் சார்பாக நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இதில் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி பற்றியும் நான் குறிப்பிட்டேயாக வேண்டும். தாம் விரும்பும் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யவும் தங்களது பிரதிநிதிக@டாக தமது பிரதேசங்களில் அபிவிருத்தியைத் துரிதமாக முன்னெடுக்கவும் இந்த உள்@ராட்சி மன்றங்கள் ஒரு தளமாக அமையுமென்பதே தமிழ் பேசும் மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.
1998ல் யாழ்.குடாநாட்டில் நடந்த உள்@ராட்சி சபைக்கான தேர்தலின் பொது 10 சபைகளை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் கைப்பற்றி ஏனையவர்களால் கைப்பற்றப்பட்ட சபைகளோடு மொத்தம் 17 மன்றங்களின் செயற்பாடுகள+டாக ஒரு பொற்காலத்தையே உருவாக்கியிருந்தோம். மக்கள் அவலப்படுகின்ற இன்றைய சூழலில் மறுபடியும் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த உள்@ராட்சி மன்றங்கள் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் பேசும் மக்களிடையே உருவாகியிருக்கின்றது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வடமாகாணத்திற்கான உள்@ராட்சிச் சபைகளுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்து விரைவில் புதிய வேட்பு மனுக்களைக் கோருவதற்கு வழிசெய்யும் வகையில் இச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்ற அந்த நேரத்தில் இன்னொரு மகிழ்ச்சி தரும் செய்தியையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.சர்வதேச சமூகத்தினாலும் எமது அயலக நட்பு நாடாகிய இந்திய அரசியாலும் இலங்கை அரசினாலும் அனைத்து இன மக்களினாலும் பயங்கரவாதிகள் என ஓரம்கட்டப்பட்டதுதான் புலித்தலைமை. இத்;தகைய புலித்தலைமை மக்கள் சுதந்திரமாக வாழவேண்டிய ஒரு பிரதேசத்தைத் தமது ஏதோச்சதிகார ஆயுத வன்முறையினால் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதென்பது சட்டவிரோதமான ஒரு விடயமாகும். ஆனாலும் புலித்தலைமை எந்தப் பிரதேசத்தை தாம் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பதாக முழக்கமிட்டு வந்திருக்கிறதோ அந்தப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவமான பிரதேசத்தை ஈ.பி.டி.பி.யினராகிய நாம் சட்ட ரீதியாக எமது கட்டப்பாட்டினுள் தொடர்ந்தும் வைத்திருக்கின்றோம். என்ற மகிழ்ச்சிதரும் விடயத்தை இந்தச் சபையில் நான் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
இன்று பிராபாகரன் என்ற யுத்த வெறி பிடித்த கொடிய மனநோயாளியும் அவரது சாக்களும் சட்டவிரோதமாக நடந்துதிரியும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான வேட்புமனு கடந்த முறை தாக்கல் செய்யப்பட்டிருந்த வேளையில் நாம் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டிருந்ததை இந்தச் சபையில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இது குறித்த பிராபாகரனின் கொடுங்கோலாட்சியின் கீழ் வாழ்ந்து வருகின்ற புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் என்னோடு தொடர்பு கொண்டு பேசி வருகின்றார்கள். ஜனநாயகத்தின் வருகையைக் கண்டு அஞ்சி புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் மக்களாட்சி வந்துவிடுமோ என்று நடுநடுங்கி கடந்த உள்@ராட்சி சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் புலிகள் நேரடியாகவே ஈடுபட்டிருந்தனர். என்று அந்த மக்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அங்கு புலிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு செல்லுபடியற்றதாகிவிட்டது.
இதில் நான் என்;ன கருத்தைக் கொண்டிருக்கின்றேன் என்பது வேறு விடயம் ஆனால் இது தர்மத்தின் வெற்றி என்று புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் என்னிடம் கூறியுள்;ளார்கள் வெகுவிரைவில் எமது பிரதேச சபையின் ஆளுகைக்குள் வாழ்கின்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபை மக்களுக்கான சேவையைச் சாத்தியமான முறையில் ஆரம்பிக்க நாம் தீர்மானித்திருக்கின்றோம் என்ற செய்தியையும் நான் இந்தச் சபையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே!
ஊசித் துவாரத்தினூடாக யானையைச் செலுத்தாலாம்இ பாம்புக்கும் பல் துலக்கலாம் முதலையை மனிதனாக்கலாம். ஆனால் புலித்தலைவர் பிரபாகரனின் எண்ணங்களில் சமாதானம் என்ற வெளிச்சத்தை உருவாக்கிவிட முடியாது. அவ்வளவு கடினமானது. இந்தக் காரியம். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். பிரபாகரன் எதை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை என்னால் அறிய முடியும்.ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன் ஆயுதப் போராடக் களத்தில் நின்றிருந்த போது நான் நேரடியாக புலித்தலைமையிடம் இருந்து கண்டுகொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமையிடம் இருந்து கற்றுக்கொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமை அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருகின்றது என்றால் அது தங்களை யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தவதற்காகவே என்பதுதான் அர்த்தமாகும்.கவிஞன் ஒருவன் சொன்னதுபோல கிட்ட வந்து காலில் விழுந்து இடுப்பைப் பிடித்து மெல்ல எழுந்து கழுத்தை நெரிக்கும் கூட்டம் அவர்கள். புலித்தலைமையை ஒருபோதும் நம்ப முடியாது. அன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம் மக்களின் விருப்பங்களை அறிந்து கொண்டுதான் ஜனநாயக வழிமுறைக்கு வந்துள்ளோம்.
ஆனால் புலித்தலைமை அவ்வாறனதல்ல. காலமாற்றமும் சூழல் மாற்றமும் மக்களின்; அவலங்களும் முடிவற்று தொடரும் யுத்ததின் வடுக்களும் இழப்புக்களும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் பின்னர் அழகிய எங்கள் இலங்கைத் தீவின் ஐக்கிய ஒருமைப்பாட்டிற்குள் அனைத்து இன மக்களும் சம உரிமையோடு வாழலாம் என்ற விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புதான் என்னை இன்று இவ்வாறு பேசவைத்துள்ளது. எமது சிந்தனையிலும் நடைமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.மக்களின் விமோசனத்தை நேசிப்பவர்களுக்கு மட்டுந்தான் இந்த மனமாற்றம் நிகழும் ஆனால் பிரபாகரன் போன்ற யுத்தவெறி பிடித்த மக்கள் விரோத மனநோயாளிகளுக்கு மனமாற்றங்கள் நிகழ்வதற்குத் துளியளவும் சாத்தியமிருக்காது என்பதை நான் மிக உறுதியாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். புலித்தலைமையானது அதிகாரவெறியினால் வன்முறை வழியினால் மக்கள் விரோத நடவடிக்கைகளினால் இறுதியில் சவக்குழியில் விழும் தறுவாயில் கூட இந்த மனமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்காது.
உலக வரலாற்றில் ஜேர்மனியில் ஒரு ஹிட்லர் இத்தாலியில் ஒரு முசோலி கம்பூச்சியாவில் ஒரு பொல்போட் சிலியில் பினோச்சே உகண்டாவில் ஒரு இடிஅமீன் நிக்கவாவில் ஒரு சொமோஸோ என்ற இந்த வரலாற்று வரிசையில் இலங்கையில் ஒரு பிரபாகரனையும் நாம் எம் கண்முன்னே கண்டு வருகின்றோம். அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். நாமும் அவர்களுக்கு நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். நாமும் அறிவோம். உலக வரலாற்றின் சர்வதிகாரிகளைப்போல் புலித்தலைமை தொடர்ந்தும் இதுபோன்ற யுத்த வெறிபிடித்த மக்கள் விரோத மனநோயில் இருக்குமேயானால் அது காணப்போவது புதைக்குழிகளை மட்டுந்தான் என்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மக்கள் விரோத சர்வதிகரிகள் அனைவரும் கண்ட புதைகுழிகளைப் போலவே புலித்தலைமைக்கும் வரலாற்றின் புதைகுழிகள் காத்திருக்கின்றன.
இன்று புலித்தலைமைக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருப்பவர்கள் அவர்களது பினாமிகள் மட்டும்தான் புலிகள் தோல்விகளை சந்தித்து பின்வாங்கி ஓடும்போது புலித்தலைமையின் பினாமிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பார்கள் ஈரடி பின்னால் ஓரடி முன்னால் என்பதுபோல சாண் ஏற முழம் சறுக்கும் என்பது போல எங்காவது ஒரு தாக்குதலை நடத்திவிட்டால் அதற்கு உரிமை கோரிக்கொண்டு வீரப்பிரதாபம் பேசிக்கொண்டு புலித்தலைமையின் பினாமிகள் கொக்கரிப்பார்கள் ஆனால் புலித் தலைமையின் தாக்குதல்களுக்கு உரிமை கோர இந்த பினாமிகளுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.
ஏனென்றால் இவர்கள் தங்களது பிள்ளைகளைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கும் இந்தியா வுக்கும் கல்வி கற்பதற்காக அனுப்பிவிட்டிருப்பவர்கள். அடுத்தவனின் பிள்ளைகள் பலாத்கரமாகப் புலித்தலைமையால் பிடிக்கப்பட்டு மூளைச்;சலவை செய்யப்பட்;டு புலித்தலைமையினால் யுத்த களத்திற்கு அனுப்பப்பட்டு யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்படும் போது வெளிநாடுகளில் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் பினாமிகள் அதற்கு உரிமைகோருவதற்கு எந்த விதத்திலும் அருகதை யற்றவர்களே. இவர்கள் தங்களது பிள்ளைகளையும் பிரபாகரனின் அழிவு யுத்தத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. புலிகள் அடுத்தவன் பிள்ளைகளைப் பலாத்காரமாக இந்த அழிவு யுத்ததில் ஈடுபடுத்துவதை இவர்கள் கண்டிக்க முன்வர வேண்டும் என்றுதான் நான் கூறுகின்றேன். பாவம் இவர்கள் இவர்களுக்கு நல்ல புத்தி ஏற்படவேண்டும். திருந்தி வர வேண்டும்.
புலித்தலைமை குறித்து எனது அனுபவங்களின் வாயிலாக புலித் தலைமையின் வன்முறை யுத்ததினால் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவே நான் புலித்தலைமையின் நடவடிக்கை குறித்து எனது கண்டனத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்.புலித்தலைமையின் பிரச்சினை வேறு. தமிழ் மக்களின் பிரச்சினை வேறு. இருதரப்புப் பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் பார்க்க முடியாது.
தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமமான சகவாழ்வு காண விரும்புகிறார்கள். அமைதியையும் அரசியலுரிமைச் சதந்திரத்தையும் விரும்புகிறார்கள். ஆனால்இ புலித்தலைமையோ மக்களுடைய விருப் பங்களுக்கு மாறாக அரசியல் தீர்வை எட்டுவதற்கான சந்தர்ப்பங்களை உடைத்துச் சிதைத்து வருகின்றது. மக்களை அகதிகளாக அலையவிட்டு யுத்தத்திற்குத் தின்னக் கொடுத்து அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை திருவோடுகொண்டு பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்கிவிட்டு மக்களின் மண்டை யோட்டிலே மனதக்குருதி குடித்து வருகின்றது புலித்தலைமை.
கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களும் புலித்தலைமையின் பிரச்சினையையும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையையும் இரு வேறாக நினைத்துச் செயற்படுவதாகவே நான் நம்புகின்றேன்.அதற்காகவே கௌரவ ஜனாதிபதி அவர்கள் நடைமுறைச் சாத்தியமான முறையில் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முயற்சித்து வருகிறார் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன். இந்த உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்று நான் தமிழ் பேசும் மக்களின் சார்பாக அந்த அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருகின்றேன். இச்சந்தர்ப்பத்தில் நான் இந்தச் சபையினூடாக சிங்கள சகோதார மக்களுக்கும் சில விடயங்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம்தான் இன்று அவர் இந்த நாட்டின் அதியுயர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார். தமிழ் பேசும் மக்களின் சார்பாக நின்று நான் கௌரவ ஜனாதிபதி அவர்களின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிககும் போது சிங்கள சகோதர மக்கள் இன்னமும் நெருங்கிவந்;து ஜனாதிபதி அவர்களின் சமாதான முயற்சிகளைப் பலப்படுத்துவார்கள் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன். படையினரின் நியாயபூர்வமான நடவடிக்கைகளுக்குச் சிங்கள சகோதர மக்கள் ஆதரவளிப்பது என்பதும் அதில் ஆர்வம் காட்டுவது என்பதும் அவர்களது விருப்பங்களின் அடிப்படையிலானது.
ஆனாலும் அதேநேரத்தில் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் சமாதான முயற்சிகளுக்கு சிங்களச் சகோதர மக்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்பது இலங்கை தீவில் வாழ்கின்ற அனைத்து இன மக்களினதும் விருப்பமாகும்.புலித்தமையிடமிருந்து படையினர் வெற்றிகரமாக மண்ணையும் மக்களையும் மீட்கும்போது தமிழ் பேசும் மக்களைப் போல் சிங்களச் சகோதர மக்களும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவது என்பது ஏற்றுத்தான் ஆகவேண்டிய ஒன்றாக இருக்கலாம். ஆனாலும்இ அதேநேரத்தில் நியாயமானதொரு அரசியல் தீர்வை முன்வைத்த தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள விரும்பும் ஜனாதிபதியின் கரங்கரளைச் சிங்கள சகோதர மக்களும் பலப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து ஜனநாயக சக்திகளினதும் எதிர்பார்ப்பாகும். சிங்கள சகோதர மக்கள் ஆர்ப்பாட்டங்களில் அல்லது ஜனநாயக எழுச்சிப் போராட்டங்களில் ஈடுபடுவது அவர்களது ஜனநாயக உரிமைகளின் அடிப்படையிலானது.
ஆனாலும் சிங்களச் சகோதர மக்களின் ஜனநாயக எழுச்சிப் போராட் டங்கள் சமாதான நடவடிக்கைளில் ஈடுபட்டிருக்கும் ஜனாதிபதி அவர்களின் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளித்து அதற்குப் பலம் சேர்ப்பதாக மட்டும் இருக்க வேண்டும் என்பது இலங்கைத் தீவில் வாழ்கின்ற அனைத்தின மக்கனிதும் விருப்பமாகும். அரசியல் தீர்வுக்கு விருப்பமின்றி அழிவு யுத்தத்தைத் தொடரும் புலித்தலைமையைச் சிங்கள சகோதர மக்கள்; விரோதமாகப் பார்பதென்பது அவர்களது சொந்த விருப்பங்களின் அடிப்படையிலானது. ஆனாலும்இ அதே நேரத்தில் புலிகளின் வன்முறை யுத்த வெறிக்கு மாறாக ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழவு காணதுடிக்கும் தமிழ் பேசும் மக்களைச் சகோதர மக்களாக கணிக்க வேண்டியது இன ஐக்கியத்தை விரும்பும் அனைத்து ஜனநாயக சக்திகளினதும் கடமையாகும்.
சிறந்த ஆளுமையம் துணிச்சலும் மிக்க ஒரு ஜனாதிபதி இந்த நாட்டின் அதியுயர் ஆட்சிப்பீடத்தில் இருப்பதையிட்டு சிங்கள சகோதர மக்கள் தலைநிமிர்ந்து கொள்வது இந்த நாட்டின் பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமுரிய விடயமாகும். ஆனால்இ அதேநேரத்தில் ஜனாதிபதி அவர்களின் நடைமுறைச் சாத்தியமான சமாதான முன்னெடுப்பைப் பலப்படுத்த வேண்டியது இலங்கைத்தீவில் வாழும் ஒவ்வெரு குடி மக்களினதும் வரலாற்றுக் கடமையாகும். ஜனாதிபதி அவர்களின் இலட்சியமாகக் கொள்ளப்படும் மஹிந்த சிந்தனையில் மக்களின் மகிழ்சி பிரதானமாகக் தெரிகின்றது. அதில் தமிழ் பேசும் மக்களின் மகிழ்ச்சியும் அடங்கியிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகின்றேன்.
இன்று புலிகளின் பயங்கரவாதம் என்பது தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரதும் வாழ்வுரிமைக்கான சவாலாக இருந்து வருகின்றது. இந்தப் பயங்கரவாத்தை எதிர்ப்பதற்;கு சிங்கள மக்கள் மட்டும் ஜனாதிபதி அவர்களுக்கு துணையாக இருந்தால் போதாது. இதில் தமிழ் பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்பும் ஜனாதிபதி அவர்களுக்குப் பக்க பலமாகவும் ஆதரவாகவும் சிங்கள மக்கள் இன்னும் அதிகளவில் துணிச்சலோடு இருப்பார்களேயானால் தமிழ் பேசும் மக்களையும் இந்தப் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைளில் முழுமையாக ஈடுபட வைக்க முடியும். உள்ளங்கையில் சமாதானப் புறாவுடனும் உள்ளத்தில் சமாதான நம்பிக்கையுடனும் தமிழ் பேசும் மக்களின் இன ஐக்கியத்தின் குரலாகவும் தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்களுக்கு இடையிலான ஒர் உறவுப் பாலமாகவும் அதற்கான நம்பிக்கை நட்சத்திரமாகவும் உங்களிடம் நான் வந்திருக்கின்றேன். சமாதானத்தை நோக்கி அணிதிரள்வோம். சமாதானத்திற்கான பாதையை பலப்படுத்துவோம். நன்றி. வணக்கம்.
23 ஒக்டோபர் 2007
Related posts:
|
|