செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

இந்த விவாதத்திற்கு நேர அனுமதி கேட்டதையும் இன்று இந்த விவாதத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டதையும் நான் வரவேற்கின்ற அதே வேளை ஜனநாயக வழிமுறையில் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த விவாதத்திலும் நான் கலந்து கொள்கின்றேன். மகிழ்ச்சியைத் தருவதாக எதுவும் இல்லாத இன்றைய சமகால சூழலில் இறுதியில் வெல்லப்போவது தர்மம் மட்டும்தான்  என்ற நம்பிக்கை, உறுதியோடு இந்த விவாதத்தில் நானும் பங்கெடுக்க விரும்புகின்றேன்.

ஆனால் ஒரு விடயத்தை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். அதாவது இங்கு நடக்கின்ற விவாதம் வெறும் விவாதமாக மட்டும் முடிந்துவிட வேண்டும் என எண்ணி இந்த விவாதத்தில் யாரும் கலந்துகொள்வதை நான் வெறுக்கின்றேன்.ஊடக விளம்பரங்களுக்காக மட்டும் பாராளுமன்றில் ஆவேச உரைகளை நிகழ்த்திவிட்டு மறுநாள் ஊடகங்களில் தங்களது பெயரும் செய்தியும் பரபரப்பாக வெளிவந்தவுடன் திருப்பதியடையும் சுயலாப அரசியலுக்கானதல்ல இந்த விவாதம். தீர்க்கதரிசனம் இல்லாத திட்டங்களினால் எமது தேசம் தொடர்ந்தும் சுடுகாடாகிப் கொண்டிருக்கின்றது. அழிவை மட்டும் தருகின்ற அரசியல் தூரப் பார்வையற்ற முடிவற்ற யுத்தத்தினால் அப்பாவி மக்களின் உடல்கள் பிணங்களாகச் சரிந்து கொண்டிருக்கின்றன. கொன்று பலியாக்ககப்பட்ட எமது மக்களின் மண்Nடையோடுகளில் அமுத பானம் அள்ளிப்பருகும் அரசியல் சித்த விளையாட்டுக்களை நான் வெறுக்கின்றேன்.

எமது மக்க்ள அவலங்களைச் சந்தித்த வருகின்றாhகள்.அந்த அவலங்களை வைத்து அhத்தமற்ற யுத்தத்திற்க ஆளணி திரட்டவதை நான் வெறுக்கின்றேன். அவலங்களைச் சொல்லி அழுதுவடிப்பது போல பாசாங்குசெய்து இருக்கின்ற நிலைமைகளை மேலும் பதற்றமாக்கி “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல” மக்களின் இயல்பு வாழ்வின் மீது மேலும் துயரங்களை சுமத்துவதை நான் வெறுக்கின்றேன்.

யுத்தம் என்பதும் யுத்தத்தில் வெல்ல வேண்டும் என்ற கனவும் கண் முன்னால் தோன்றும் சிறிய அலையைப் போன்றது. ஆனால் அந்த சிறிய அலையோ தூரத்தில் தெரியும் மலை போன்ற அழிவுகளைப் பார்க்க முடியாதபடி கண்களை மறைத்து விடுகின்றது. மக்களைப் பற்றியோ அல்லது மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பற்றியோ துளியளவும் சிந்திக்க மறுக்கின்றது. புலித்தலைமை, தமது சுயலாப அரசியலுக்காக நடத்தும் இந்த வெல்ல முடியாத யுத்தத்தில் தாம் வென்றுவிடலாம் என்ற அவர்களது கற்பனைகளும் கனவுகளுமே இன்றைய அவலங்களுக்குக் காரணம். நான்கு நாட்களில் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றிவிடலாம் என்ற கற்பனையில் வரிந்துகட்டிய புலிகளது யுத்தமும் அதேபோல் கற்பனையில் வரிந்துகட்டிய புலிகளது யுத்தமும் அதேபோல திருகோணமலையிலும் மூதூரிலும் நடந்த நடந்நது கொண்டிருக்கும் சமகால சம்பவங்களும் கசப்பான வரலாற்று நிகழ்வுகளாகும்.

கடந்த காலத்திலும் சரி சம காலத்திலம் சரி புலிகள் கிடைத்த சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்த தவறியதனால்தான் இந்த அழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எமது மக்கள் அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து வருகின்றபோதெல்லாம் உணவு முதற்கொண்டு உரிமை வரைக்குமான மக்களுக்காக குரல் கொடுத்த அவர்களின் இயல்பு வாழ்வின் மீது விருப்பங்கொண்டு அதற்காக மக்களோடு மக்களாக நின்று உரிய பணியை ஆற்றி வருகின்ற ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி. யின் சார்பாக எமது மக்களின் அவலங்கள் குறித்துப் பேசவதற்கான தார்மீக உரிமையோடுதான் இந்தச் சபையில் நான் எழுந்து நிற்கின்றேன். மலர்களை குதிரை மீது மட்டும் அமர்ந்திருந்து பாhத்து இரசிப்பது போல மக்களைப் புலிகள் மீது ஏறியிருந்து மட்டும் பார்ப்பவர்களுக்கு மக்களின் அவலங்கள் தெரியப் போவதில்லை. புலிச்சவாரி செய்யும் அவர்களது சுயலாப அரசியல் அதற்கு இடம்கொடுக்கவும் போவதில்லi.புலியைவிட்டு இறங்கிவந்து அந்த மலர்களைப் பாருங்கள்.

அப்போதுதான் மக்கள என்ற மலர்களின் வாட்டம் தெரியும். அந்த மலர்கள் சருகாகி உதிர்ந்து கொண்டிருப்பது எங்கள் கண்களுக்குத் தெரியும். வாடிய பயிரைக் கண்டு நாமும் வாடியிருக்க முடியாது என்றுதான் நாம் மக்களின் வாட்டங்களைப் போக்க அவர்களது அவலங்களை நீக்க உழைத்து வருகின்றோம்.உணவும் மின்சாரமும் கல்வியும் போக்குவரத்தும் தொழில் வாய்ப்பும் எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று நாம் அயராது உழைக்கின்ற போதெல்லாம் எமது மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை சுதந்திரத்தை ஏற்படுத்த முயல்கின்ற போதெல்லாம் உணவும் கல்வியும் மின்சாரமும் போக்குவரத்தும் அரசாங்கம் அள்ளி வீசும் எழும்புத் துண்டுகள் என்று தூற்றி எம்மீது சேற்றை வாரி வீசியவர்கள் இப்போது பிள்ளையையம் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல அதே தேவைகளுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறார்கள். புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சரிவரப் பயன்படுத்தியிருந்தால் இந்த அழிவுகள் ஏற்பட்டிருக்காது.புலிகள் வலிந்து இந்த யுத்தத்தைத் தொடங்கியிருக்காவிட்டால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.

ஆயுதப் போராட்டமானது பிழையானதொன்றல்ல முன்னெடுத்தச் சென்ற முன்னோடிகளில் நானும் ஒருவன். எமது தோழர்களும் அதில் பங்கெடுத்தவர்கள். ஆனால் இலங்கை -இந்திய ஒப்பந்தமென்பது எமது ஆயுதப் போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. இலங்கை-  இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலச் சூழலில் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருந்த தென்னிலங்கை கட்சிகள் யாவும் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்து ஆர்வம் காட்டியிருக்கவில்லை.பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை அப்போது அவற்றுக்கு இருந்திருக்வில்லை.

ஆனால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான நிலைமைகள் என்பது வேறு அந்த ஒப்பந்;தத்தை புலிகள் எதிர்த்திருந்தார்கள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்று அதனைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிய சூத்திரதாரியும் இப்போது புலியின்மீது ஏறியிருந்துதான் மக்களைப் பார்க்கின்றனர். அவர் யார் என்று எங்களுக்குத் தெரியும். இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான சந்தர்ப்பத்தைப் போட்டுடைத்தவர்கள் தொங்கு தசை உறவாக இப்போது ஒரு குட்டைக்குள் ஊறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவையும் தமிழகத்தையம் துணைக்கழைக்கிறார்கள்.

போராட்டம் என்று தாமே கூறி வருகின்ற அழிவு யுத்தத்தை அங்கீகரிக்கச் சொல்லி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாhகள். “ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டால் இன்று ஈழத் தமிழர்களின் நிலை வேறு” என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்ததை இந்தச் சபையில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். “கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” செய்வது போலவும் முறிந்துபோன உறவுகளுக்கப் ஒட்டுப்போட நினைக்கிறது புலித்தலைமை. புலித்தலைமையும் அவர்களது தொங்குதசைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அங்கீகாரம் கோருவது தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் கயமைத் தனத்திற்கு மட்டும்தான். கொல்லப்பட்ட மக்களின் பிணங்களின் மீது ஏறி நின்றுகொண்டு பழி தீர்ப்பதற்காகவும் மட்டும்தான். புலிகளது பிரச்சினை என்பது வேறு தமிழ் பேசும் மக்;களின் பிரச்சினை என்பது வேறு. இதை இரு வேறு பிரிவாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

இல்லை வேறு வேறுதான் ஒன்றல்ல. தமிழ் மக்களுடைய பிரச்சினை வேறு. புலிகளின் பிரச்சினை வேறு என்று விரைவிலே தெரியும்.(இடையீடு) நீங்கள் எந்த அடிப்படையில் வந்ததென்றும் எனக்குத் தெரியும். நீங்கள் தான் இப்படியான சூழலுக்குத் துணைபோவதாக நான் கருதுகின்றேன். இன்று முல்லைத்தீவில் பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கான சூழலை ஏற்படுத்தியது யார்? (இடையீடு) இந்த அப்பாவிப் பிள்ளைகள் எல்லோரும் ஆயுதப் பயிற்சிக்காக பலாத்கராமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். (இடையீடு) அதற்கான நிரூபணம் என்னிடம் இருக்கின்றது. தற்போது கண்டியில் காயப்பட்ட மூன்று பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள். அவர்கள் இங்கு என்ன நடந்ததென்று சொல்கிறார்கள். இம்மாதிரியான அரசியலை நடத்தி தமிழ் மக்களை அழிவுக்குட்படுத்த வேண்டாம். தமிழர்களைத் தமிழர்கள் கொல்கின்ற சூழலுக்க இட்டுச் செல்ல வேண்டாம்.

யார் பாவிகள் என்பதை வரலாறு சொல்லும் புலிகளும் அவர்களது தொங்குதசைப் பாராளுமன்ற உறுப்பினர்களும் யுத்தததை விரும்புகிறார்கள். ஆனால் மக்களோ சமாதானத்தையும் அரசியலுரிமைக்கான பேச்சுவார்தையினையும் அதற்கான நிரந்தர தீர்வையும்தான் விரும்புகின்றார்கள். மக்களுடைய நாடி நரம்புகளைப் பிடித்துப் பார்த்து நாங்கள் உணர்ந்து கொண்ட உண்மை இது. சனநாயக வழிமுறை மீது மக்கள் கொண்டிருக்கம் விருப்பத்தின் வெளிப்பாடு இது. புலித்தலைமை ஆயுதங்கள் மீது மோகங்கொண்டு அழிவுக்கான யுத்தத்தில் ஈடுபடும்போது அதை அவர்களோடு மட்;டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும்.

எனவே புலிகளின் வலிந்துகட்டிய யுத்த முனைப்புக்களைபத் தமிழ்பேசும் மக்களோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டாம் என நான் இலங்கை இந்திய மற்றும் சர்வதேச உறவுகளுக்குப் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன். புலிகள் இதய சுத்தியோடு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. ஆனாலும் அரசாங்கம் புலிகளோடு பேசவேண்டுமெனக் கருதினால் அந்த முயற்சியை நான் பிழையானதெனறு கூறப்போவதுமில்லை. புலிகளோடு பேச்சுவார்த்தை நடாத்திப் பார்ப்பதில் எமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. ஆனால் புலிகளின் காலம் கடத்தும் தந்திரோபயம் குறித்துச் சமாதானத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான  “வுhந றுயளாiபெவழn வுiஅநள” தனது சமீப கால ஆசிரிய தலையங்கம் ஒன்றில் “யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று அவர்களுக்கு அவகாசம் கொடுத்தால் அவர்கள் மீண்டும் ஓர் அழிவுக்கான யுத்தத்துக்குத் தம்மைத் தயார்படுத்தக்கூடும் என்ற கருத்தில் ஒர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

புலித் தலைமை வன்முறைகளை நிறுத்தி இதய சுத்தியே பேச்சுவார்தை மேசைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்களை சிதறடித்து வருகின்ற இந்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்காக அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்iவைக்க வேண்டும். இது குறித்து நான் மேதகு சனாதிபதி அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன். தமிழ்பேசும் மக்களுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டத்தை மேதகு சனாதிபதி அவர்கள் மிக விரைவில் முன்வைப்பார் என நம்பகின்றேன்;.அவ்வாறு முன்வைக்கப்படுகின்ற தீர்வுத்திட்டம் புலிகளுக்கோ நுPனுP யினராகிய எமக்கோ சகோதர அமைப்புக்களுக்கோ அல்ல. அது தமிழ் பேசும் மக்களுக்கானது. நாட்டு மக்களுக்கானது. இதை இதய சுத்தியோடு ஏற்றுச் செயற்படுவதற்கு முன்வருகின்ற எந்தச் சக்தியையும் ஆதரிப்பதற்கும் அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

EPDP யின் சார்பில் நடைமுறைச் சாத்தியமான மூன்று கட்ட அரசியல் தீர்வுத்திட்டத்தை நான் இந்தச் சபையில் முன்மொழிகின்றேன்.முதல் கட்டமாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இன்று இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளாலும் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றான மாகாணசபை முறையை வடக்கு – கிழக்கில் அமுல்படுத்துவது. இன்று அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கபட்டிருக்கும் மாகாண சபை ஆட்சி முறையில் பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்து வருகின்றன. சகல கட்சிகளும் மாகாணசபைத் தேர்தலில் பங்கெடுத்த வருகின்றன. ஆனால் வடக்கு – கிழக்கில் மட்டும் இந்த மாகாண சபை அரசியல் முறை என்பது புலிகளால் சீரழிக்கப்பட்டு குறித்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாமலிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை திட்டம்.

இன்று வடக்கு – கிழக்கில் மட்டும் நடைமுறையில் இல்லாதிருக்கின்றது. எனவே மாகாணசபை நிர்வாகத்தை சகல மக்களும் அனுபவித்து வருவது போல வடக்கு – கிழக்கு மக்களும் அனுபவிப்பதற்கான முன்னெடுப்புக்களை நாம் முதலில் தொடங்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை இவ்விடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என நான் தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனைய மாகாணங்களைப்போல வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் மாகாணசபைத் தேர்தலில் நடத்;தப்பட்டு நிருவாகம் மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். சகல கட்சிகளும் மாகாணசபை அரசியல் முறைமைகளில் பங்கெடுத்து நிற்பதால் இதில் எதிர்பார்ப்பிற்கு எந்த வகையிலும் இடமிருக்காது.

இரண்டாவது கட்டமாக மாகாணசபைமுறைமையை மேலும் பலப்படுத்தும் வகையில் நடைமுறையில் இருக்கும் இலங்கை அரசியல் யாப்பின் வரம்பிற்கு உட்பட்ட வகையில் அதிக அரசியல் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டும். இதனூடாக இலங்கையில் இன ஐக்கியம் வலுப்படவும் இனங்களுக்கிடையில் எஞ்சியிருக்கின்ற சந்தேகங்கள் உலர்ந்து உதிர்ந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.

இறுதிக் கட்டமாக இலங்கைத் தீவில் வாழ்கின்ற அனைத்து மக்களின தும் விருப்பத்துடன் இறுதித் தீர்விற்;கான பேச்சுவார்த்தையினை புலிகள் உட்பட அனைத்துச் சக்திகளையும் உள்ளடக்கிய வகையில் தொடர வேண்டும். தமிழ்பேசும் மக்களுக்கான இறுதித் தீர்வு குறித்து ஆராய்வதற்கான வசதி வாய்ப்பு மேதகு சனாதிபதி அவர்களின் “மஹிந்த சிந்தனை”யின் மூலம் உருவாகும். “மரம் இருக்க இலைகளைப் பிடுங்குவது போல்” இனப்பிரச்சினைத் தீர்வு என்பது உருவாக்கமல்படாமல் இருக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பிரச்சினைக்கான தீர்வை நாம் முழுமையாக எட்டிவிடமுடியாது.எனவே எமது மக்கள் படுகின்ற அவலங்களை நிரந்தரமாக நீக்குவதற்கு நடைமுறைச் சாத்திமான அரசியல் தீர்வை முன்வைப்பது சிறந்த வழியாகும். அதுவே மக்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நன்றி.

 20 மே 2000

Related posts:

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் குணாம்சங்களையே கொண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்...
மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...

புலம்பெயர் தேசங்களிலும் எமது நாட்டின் கலை கலாசார விழுமியங்கள் பேணப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
செங்கிரிலா ஹோட்டலுக்காக இராணுவத் தலைமையகத்தையே மாற்ற முடியுமானால் எமது மக்களின் காணிகளை விடுவிக்க மு...
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...