செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா29 ஜனவரி 2004 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Thursday, January 29th, 2004

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே!

தேர்தல்களில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம் என்பதை எனது கட்சி ஆதரிக்கின்றது. அதை நியாயப்படுத்துவதற்கு முன்பாக ஒன்றைக் கூற விரும்புகின்றேன். அதாவது இன்று இந்தச் சபையில்  எனக்கு முன்னர் பேசிய சம்பந்தன் அவர்களும் அவருக்கு முன்பு பேசிய ரவிராஜ் அவர்களும் அரசாங்கத்தினுடைய இந்தக் கொள்கை சம்பந்தமாகச் சந்தேகங்களை எழுப்பினார்கள். இந்த வகையில் ரவிராஜ் அவர்கள் பேசும் பொழுது நான் அதைத் திருத்த முற்பட்டேனேயொழிய அவருடைய பேச்சைக் குழப்ப வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருக்கவில்லை. ஏனென்று சொன்னால் ஜனநாயக முறையிலான பாராளுமன்றில் தங்களுடைய கருத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி சொல்லலாம்.

அதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனைகளும் இல்லை. இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அது தமிழ் மக்களுக்கு நியாயமானதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றதாகத்தான் நான் கருதுகின்றேன். “இரு கை தட்டினால்தான் ஓசை” என்பது போல ஒரு பக்கத்தை மாத்திரம் சிந்தித்தால் போதாது மறுபக்கத்தையும் சந்திக்க வேண்டும் என்பதைத்தான் நான் அடிக்கடி எனது பேச்சுக்களில் குறிப்பிட்டு வருகின்றேன். இந்த அடையாள அட்டையைப் பொறுத்த வரையில் அது மிகவும் அவசியமானது என்பதாகத்தான் நான்  கருதகின்றேன். நான் சார்ந்த மக்கள் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற மக்கள் கூட இந்த அடையாள அட்டையினுடைய அவசியத்தை உணர்ந்திருக்கின்றார்கள்.ஏனென்று சொன்னால் நடந்து முடிந்த தேர்தல்களில் மக்கள் தங்களுடைய உண்மையான நியாயமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியவில்லை என்பது இன்று அவர்களுடைய கவலையாக அல்லது ஆதங்கமாக இருக்கின்றது. இந்த வகையில்தான் எனது கட்சியும் இந்த அரசாங்கத்தினுடைய வாக்களிப்பின்போது அடையாள அட்டை அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி அதரித்து நிற்கின்றது.

(திரு. சுரேஷ் பிரமேச்சந்திரன்)

2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாண மாவட்டத்திலே வாக்களிக்க அடையாள அட்டைவேண்டும் என்று கேட்கப்பட்ட பொழுது நீங்கள் supreme court க்குப் போய் வாக்களிக்க அடையாள அட்டை தேவையில்லை என்ற ஆணையைப் பெற்றுக் கொண்டீர்கள் எனவே அன்று வாக்களிப்பின் போது அடையாள அட்டை தேவையில்லை என்ற சொன்னீங்கள் இன்று உங்களுடைய தேவைக்கு ஏற்ப அடையாள அட்டை தேவை என்று கூறுகின்றீர்கள் என்றால் அப்பொழுது ஒரு வாதமும்  இப்பொழுது அடையாள அட்டை தேவை என்று இன்னோரு வாதமுமாக நேரத்திற்கு ஒரு வாதத்தை நீங்கள் முன்வைக்கின்ற மாதிரியில்லையா இது?

(மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா)

இப்பொழுது நாங்கள் என்னத்துக்காக அடையாள அட்டையை கேட்கின்றோம் என்பதை நீங்கள் உங்களுடைய கேள்வியிலே ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு குழப்பான அல்லது ஒரு யுத்த சூழல் நிலவியபடியினால் எல்லோருக்கும் அடையாள அட்டையைப் பெறக்கூடிய நிலைமை அன்று இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அடையாள அட்டையை இலுகுவதாகப் பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது.அன்று எங்களுக்குத் தேவையான நேரத்தில் நாங்கள் அடையாள அட்டையைத் தேவையில்லை என மறுந்திருந்தோம். என்று நீங்கள் உங்களுடைய கேள்வியில் குறிப்பிட்டிருந்தீர்கள் (இடையீடு) அவருடைய கேள்விக்கு என்னுடைய பதிலைச் சொல்லிவிட்டு வருகின்றேன்.

திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுடைய கேள்வி என்னவென்றால் ஏன் அன்றைக்கு எங்களுக்கு அடையாள அட்டை தேவைப்படவில்லை. இன்றைக்குத் தேவைப்படுகின்றதென்பதாகும். அன்று அந்த மக்களுக்கு அடையாள அட்டை தேவைப்படவில்லை ஏனென்று சொன்னால் அந்த மக்கள் அன்றைக்கு அடையாள அட்டைகளை எடுக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. அத்தோடு அந்த மக்களிடம் – பெரும்பான்மையான மக்களிடம்  – அன்று அடையாள அட்டைகள் இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கின்றது. அந்த மாறிய சூழ்நிலையில்தான் அடையாள அ;டை தேவையென்று நாங்கள் கேட்கின்றோம். அதை மறுப்பது போல் உங்களுடைய கேள்வி இருக்கின்றது .(இடையீடு)

(திரு.சுரேஷ் பிரமேச்சந்திரன்)

அடையாள அட்டைப் பாவனைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல ஆனால், நீங்கள் சொன்னது போன்று அன்றைக்கு யுத்த சூழல் அடையாள அட்டை எடுக்க முடியாத சூழல் இருந்ததென்றால் அன்றைக்கு அந்த சூழலில் எதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? நிச்சமாக எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று தான் நாங்கள் சொல்கின்றோம்.

(மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா)

இன்றைக்கு யுத்தம் இல்லையென்று நீங்கள்தானே சொல்கின்றீர்கள்!

(திரு.சுரேஷ் பிரமேச்சந்திரன்)

பேச்சுவார்த்தைகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத அல்லது பேச்சுவார்த்தை நடக்குமோ? நடக்காதோ என்று தெரியாத சூழ்நிலைதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கணிசமான பிரதேசங்கள் இன்னும் “யுசஅல உழவெசழடடநன யசநய”வாக இருப்பது   உங்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் அங்கு போக முடியாத சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்தியாவில் இருந்து கூட மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் திரும்பிவராத நிலையில் இலட்சக்கணக்கானவர்கள் இங்கு இருக்கின்றனர். இவையெல்லாம் உங்களுக்கும் தெரியும். வாக்களிப்பின்பொழுது அடையாள அட்டை அவசியம் என்கின்து இந்த ஐனநவெவைல உயசன ளலளவநஅ இற்கு நாங்கள் எதிரானவர்களல்ல ஆனால் அந்த மக்களுடைய வாக்குரிமையை இந்த நடைமுறை பறிக்குமா என்ற ஒரு சந்தேகம் இருப்பதை ஏன் நீங்கள் மறந்து போகிறீர்கள்?

(திரு.சுரேஷ் பிரமேச்சந்திரன்)

நீங்கள் தமிழ் மக்களுக்காகப் பேசுபவராக இருந்தால் உண்மையாகவே இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் எடுத்துக்கொண்டுதான் பேச வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக நீங்கள் உங்களுடைய சொந்த சுயநலம் சார்ந்த அடிப்படையில்தான் கருத்துக்கள் சொல்வதாக இருக்கும்.

(மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா)

அதைக் கருத்தில் எடுத்துததான் பேசுகின்றேன். ஏனென்றால் நீங்கள் எங்களுடைய பேச்சுக்களில் உங்களுடைய கேள்விகளில் மறைமுகமாக ஒன்றை ஏற்றுக் கொள்கின்றீர்கள். இன்றைக்கு நீங்கள் எல்லோரும் இந்தப் பாராளுமன்றத்திற்குப் வந்திருப்பதாகப் பெருமை பேசிக் கொள்கின்றீர்கள் எந்தச் சூழ்நிலையில் அத்தனைபேரும் வந்திருக்கிறீர்கள். எந்த அடிப்படையில் வந்திருக்கின்றீர்கள் என்ன உருவமைப்பில் வந்திருக்கிறீர்கள்? எந்த அடிப்படையில் வந்திருக்கிறீர்கள்? என்பதெல்லாம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதை நான் மாத்திரம் சொல்வில்லை. சர்வதேச – (இடையீடு)

(பிரதிச் சபாநாயகர் அவர்கள்)

Hon.Members Would you take your seats ,Please! (இடையீடு)

Mr.Eeleventhen would you take your seat, please! (இடையீடு)

இதை நான் சொல்லவில்லை சர்வதேச கண்காணிப்புக் குழு சொல்கிறது.(இடையீடு)

எவ்வாறு தேர்தல்களில் வாக்களித்தீர்கள் என்பதைச் சர்வதேச கண்காணிப்புக்குழு சொல்கின்றது. அதாவது, இடம்பெயர்ந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தேர்தல் வாக்கடிச் சாவடிகளில் அன்றைக்குக் காட்சியளித்தார்கள்? இறந்தவர்கள் எவ்வாறு காட்சியளித் தார்கள்? அல்லது சிறுவர்கள் சிறுமியர்கள் எவ்வாறு வயோதிபர்களாக காட்சியளித்தார்கள்? ஒருவர் எவ்வாறு பல முகங்களில் காட்சியளித்தார்? என்பது – (இடையீடு

இந்த விடயங்களைப் பற்றித் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் சொல்கின்றன. நான் சொல்லவில்லை. அல்லது எனது கட்சி சொல்லவில்லை. சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் சொல்கின்றன. நடந்து முடிந்த தேர்தல் எவ்வாறு நடந்திருக்கின்றது என்பதைப் பற்றிய அறிக்கைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இன்று தமிழ் மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தங்களுடைய பிரநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியவில்லை. தங்களை மிரட்டி தங்களை அடக்கி தங்களுடைய பெயரால் கள்ள வாக்குகளைப் போட்டு இன்று பாராளுமன்றத்துக்கு வந்திருந்து தங்களுக்காகப் பொய் பேசுகிறார்கள். தங்களுடைய பெயரில் பொய் பேசுகிறார்கள். தங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தங்கள் பிரதேச அபிவிருத்திகளைத் தட்டிப் பறிக்கிறார்கள் என்றெல்லாம் தமிழ் மக்கள் இன்று பேசுகிறார்கள். காரணம் இந்த அடையாள அட்டை இல்லாமையே அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டிருக்குமாயின் நீங்கள் இவ்வளவு பேரும் இன்று பாராளுமன்றம் வந்திருக்க முடியாது. ஆனால் உங்களில் சில பேர் வந்திருக்கலாம். அதிலும் முன்வரிசையில் இருக்கின்ற சிலர் வந்திருக்கலாம்.(இடையீடு) ஆனால் நீங்கள் அனைவரும் வந்திருக்க முடியாது.

ஏனென்றால் நியாயமான தேர்தல் நடந்திருந்தால் உங்களை இங்கு வருவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்கள்.அது உங்களுக்குத் தெரியும். (இடையீடு) நெப்போலியன் எங்கேயென்று உங்களுக்குத்தான் தெரியும். நெப்போலியனைப் போல எத்தனையோ பேர் எங்கிருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நான் சொல்லித்தான் இவை தெரியவேண்டும் என்பதில்லை. நெப்பொலியன் என்பவர் இன்று இலண்டனில் இருப்பதாகப் பத்திரிகைகள் வாயிலாக அறிகின்றேன். நீங்கள் மக்களை அடக்கியொடுக்கி கள்ள வாக்குகளைப் போட்டு வாக்குப் பெட்டிகளை நிரப்பி இங்கேவந்துவிட்டு அந்த மக்களின் பெயரால் தயவுசெய்து பேசவேண்டாம்.

மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை அவர்களுடைய பிரதேசங்களுக்குக் கிடைக்கக் கூடிய அபிவிருத்திகளைத் தயவுசெய்து தடை செய்;ய வேண்டாமென்ற மக்களுடைய சார்பாக நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். ஏனென்றால் இந்த மக்களுடைய பேரால்தான் இன்று நீங்கள் பாராளுமன்றம் வந்திருக்கிறீர்கள். (இடையீடு) இன்று அந்த மக்களைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள் நீங்கள் எந்த அளவுக்கு வாக்குப் பெட்டிகளை நிரப்பினீர்கள். எந்த அளவுக்கு கள்ள வாக்குகளைப் போட்டீர்கள் என்று இதை நாங்கள் மாத்திரம் சொல்லவில்லை சர்வதேச சமூகமும் ஏன் இலங்கையின் தேர்தல் கண்காணிப்புக் குழுவும்கூட சொல்கின்றன. சர்வதேச கண்காணிப்புக் குழுவும் இது பற்றிக் கூறுகின்றது. நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்? பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் போது நினைக்குமாம் அது மற்றைய ஆட்களுக்குத் தெரியாதென்று.(இடையீடு)

ஆனால் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குத் தெரியும். நடந்த முடிந்த தேர்தலில் நீங்கள் என்ன மாதிரி எவ்வாறு நடந்திருக்கிறீர்கள் என்பது அதற்கான பதிவுகள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. நீங்கள் என்ன மாதிரி நடந்தீர்கள் என்பதற்குரிய அத்தாட்சிகள் இருக்கின்றன.கடந்த காலங்களில் உங்களில் சிலருடைய அரசியல் பற்றியும் எவ்வாறு நீங்கள் செயற்பட்டீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனபடியால் தயவுசெய்து மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லாதீர்கள். இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக்கு விரைவான கௌரவமான ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அது தயாராக இருக்கின்றது. ஆனபடியால் அதற்கு நீங்கள் ஒத்துழையுங்கள்! இங்கே சம்பந்தன் ஐயா அவர்கள் சொன்னார்கள். இந்த அரசாங்கத்தினுடைய அடையாள அட்டையின் அவசியம் பற்றிய கருத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அது எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று. ஆம்! நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.எல்லோருக்கும் கிடைக்கத்தான் வேண்டும்.

அதற்கு நடைமுறைகள் இலகுபடுத்தப்பட வேண்டும். விரைவாகக் கிடைக்க வேண்டும். ஆனால், இங்கு உங்களைப் போல பின்வரிசையிலே இருக்கின்றவர்கள் (இடையீடு)

பின்வரிசையில் இருக்கின்ற உங்களால் இந்தப் பாராளுமன்றத்திற்கு வர முடியாது.(இடையீடு) இன்று நீங்கள் பாராளுமன்றத்திற்கு வந்து அந்த மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மக்களுடைய பெயரால் கள்ள வாக்ககளைப் போட்டு மக்களை மிரட்டி இந்தப் பாராளுமன்றத்திற்கு வந்து என்ன செய்தீர்கள்? மக்களுக்கு எந்த வழியைக் காட்டினீர்கள்?(இடையீடு)

இன்று மக்கள் அதைத்தான் எங்களிடம் சொல்லுகின்றார்கள்.தயவுசெய்து மக்களை நீங்கள்  தவறாக வழிநடத்த வேண்டாம்.(இடையீடு) நீங்கள் இங்கு குரைப்பதனூடாக எதுவும் செய்ய முடியாது.ஆனபடியால் மக்களுடைய வாக்குகளைக் களவாகப் பெற்றுப் பாராளுமன்றம் வரவேணடாமென்றுதான் கூற விரும்புகின்றேன்.சுதந்திரமாக வாக்களிக்க மக்களை அனுமதியுங்களென்றுதான் நான் கேட்டுக் கொள்கிறேன்.(இடையீடு) அதேநேரத்தில் கடந்த காலத்தில் நீங்கள் எவ்வாறான அரசியலில் ஈடுபட்டிருந்தீர்கள் எவ்வாறு மக்களைத் தவறாக வழிநடத்தினீர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டும்.

1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது புலிகள் சொன்னார்கள். ‘யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது” அப்படி போட்டியிடுபவர்கள் துரோகிகளாக கருதப்படுவார்கள்” என்று ஆனால் நாங்கள் அதை மீறி மக்களுடைய கருத்துக்களை வெளிக் கொணரவேண்டும் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டும் மக்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று கருதி அத்தேர்தலில் போட்டியிட முன்வந்தோம். அதேபோல  இங்கிருக்கக்கூடிய பல கட்சியினரும் அன்றைய போட்டியிட்டார்கள்.

அன்று யாரும் தேர்தலில் போட்டியிட்டால் துரோகிகளாகக் கருதப்படுவார்களென்றும் பாராளுமன்ற  ஜனநாயகததின் மீது தமக்கு நம்பிக்கையில்லையென்றும் புலிகள் சொன்னார்கள் ஆனால் எங்களுடைய ஈ.பி.டி.பி.யின் முன்முயற்சியின் காரணமாக இன்று நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் வந்த முறையிலும் அதை அணுகிய முறையிலும் தான் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதைக் கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன் நன்றி.வணக்கம்.

தேசிய சர்வதேச கண்காணிப்புக்குழுக்கள் வட – கிழக்கில் நடைபெற்ற முடிந்த தேர்தல்கள் சம்பந்தமாக தமது அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.(இடையீடு)இந்தத் தேசிய – சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள் வெளியிட்டி ருக்கின்றன. நடந்து முடிந்த தேர்தலில் எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றன என்ற விபரங்களை தேசிய சர்வதேச கண்காணிப்புக் குழுக்கள் தேர்தல் ஆணையாளருககு அனுப்பி வைத்திருகின்றன.(இடையீடு)

உங்களுடைய கேள்விக்கு நீங்கள் திருப்பித் திருப்பிக் கேள்விகள் கேட்பதற்கு நான் போதுமான இடம் கொடுத்திருந்தேன்.

நான் கேள்வி கேட்டால் அதை முடிப்பேன் தானே! அதற்குப் பதிலைத் தான் எதிர்பார்க்கின்றேன். அதாவது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் மோசடிகள் நிகழ்ந்ததாக தேசிய சர்வதேச கண்காணிப்புக்குழுக்கள் பலவும் தேர்தல் ஆணையாளருக்கு அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றன.(இடையீடு)

I rise to a point of Order.

நீங்கள் என்னுடைய முதல் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.அடுத்தது ஜனாதிபதி அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அக்கறை காட்டவில்லையென்று நீங்கள் சொல்கின்றீர்கள். (இடையீடு) ஆனபடியினால்தான் உங்களுடைய பக்கத்தில் இருந்து அந்த ஆர்வத்தைக் காட்வேண்டுமென்ற நான் கேட்கின்றேன். தவறாக – (இடையீடு)

29 ஜனவரி 2004

Related posts:

விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்....

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் - டக்ளஸ் தேவானந்தா!
ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...