சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Saturday, December 9th, 2017

எமது மக்களுக்கு நிவாரணங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எமது மக்கள் எதிர்ப்பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தில் கணிசமான விருத்தியனைக் காண்பதற்கு எமது மக்களது சொந்த வளங்களை விடுவி;த்தாலே போதுமானது. என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந் தா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் சுய பொருளாதாரத்தில் முன்னேறுவது மாத்திரமின்றி, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் பக்கபலமாக இருந்து பாரிய பங்களிப்பினை வழங்குவார்கள். யுத்தத்திற்கு முந்தைய காலப்பகுதிகளில் அவ்வாறான பங்களிப்புகளை எமது மக்கள் நிறையவே வழங்கியிருக்கின்றார்கள்.

வடக்கில் காணப்படுகின்ற கடல் வளங்களில் பாரியளவு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்திய கடற்றொழிலாளர்களது எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழில்கள் காரணமாகவும், பிற மாவட்டங்களிலிருந்து அத்துமீறி நுழைகின்ற கடற்றொழிலாளர்களது வளச் சுரண்டல்கள் காரணமாகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்படுகின்ற அதே நேரம், கடல் வளங்கள், எமது மக்களின் தொழில் உபகரணங்கள் என்பன தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அதிகளவிலான கடல் வளத்தினைப் பயன்படுத்த இயலாத அளவுக்கு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் அவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் கடற்றொழிலின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன.

விவசாய நிலங்களை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான் காணப்படுகின்றது. இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் சொந்தக் காணி, நிலங்கள், படையினரின் விவசாய செயற்பாடுகள் காரணமாகவும் எமது விவசாய மக்கள் பலரது வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டுள்ள நிலை தொடர்கின்றது.

எந்தவிதமான கைத்தொழில் வளர்ச்சிகளும் கிடையாது. தொடர் நிலையற்ற பொருளாதாரமான கட்டுமானத்துறையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு மணல் மாபியா காரணமாக மணலுக்கு செயற்கையான தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு. வடக்கின் கட்டுமானத்துறையானது முழுமையாகவே ஸ்தம்பித்துப் போயிருக்கின்றது.

எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4.0 வீதமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படித் தரவுகளைப் பாரக்கின்றபோது, உணவு, குடிபானங்கள் மற்றும் புகையிலை உற்பத்தி 2.2 சதவீதமான மறை வளர்ச்சி வீதத்தினை அடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. அதே நேரம், 2.5 சதவீதமான நேர் வளர்ச்சியினை புடவை மற்றும் ஆடையணிகள் உற்பத்தி கொண்டுள்ளதாகவும் தெவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் காணப்பட்ட பொருளாதார நிலைமையானது .2 வீதத்தால் அதிகரிப்பினை எட்டியுள்ளது.

2010 – 2015 வரையிலான காலகட்டத்தில் எமது நாட்டு பொருளாதார வளர்ச்சியானது 6.4 வீதத்தினை சராசரியாக எட்டியிருந்தது. அதற்குப் பிந்தியதான காலகட்டத்தில் – அதாவது 2017ஆம் அண்டின் முதற் காலாண்டு வரையில், எமது பொருளாதார வளர்ச்சியானது தொடர் வீழ்ச்சி நிலையையே கண்டுள்ளது.

இத்தகைய வீழ்;ச்சி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக, 2015ஆம் ஆண்டு முதல் மிகவும் அதிகளவில் எமது நாட்டைப் பாதித்து வருகின்ற வரட்சியும் ஒரு காரணமாகும். வடக்கு, கிழக்கு, வட மத்தி மற்றும் மத்திய மாகாணங்களை இந்த வறட்சி மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்திகள் வெகுவாகவே முடங்கிவிட்டன. அத்துடன், பணவீக்கமும் அதிகரித்திருந்தது.

கடந்த ஆண்;டு இரண்டாம் காலாண்டுப் பகுதியுடன் இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியை ஒப்பிடும்போது, விவசாய உற்பத்திகளின் வளர்ச்சி – குறிப்பாக, நெல், எண்ணெய் சார்ந்த பழங்கள், தேங்காய், தானியங்கள், காய்கறிகள், வாசனைத் திரவியங்கள் அடங்களான உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ள நிலையில், கடந்த மூன்று வருடங்;களாக மறை வளர்ச்சி வீதங்களையே தொடர்ச்சியாகக் கொண்டிருந்த இறப்பர் மற்றும் தேயிலையின் வளர்ச்சியானது, முறையே 10.2 மற்றும் 6.9 சதவீதமான குறிப்பிடத்தக்க நேர் வளர்ச்சி வீதங்களைக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, விவசாயத்துறை உற்பத்தியின் வளர்ச்சியானது, 2017ஆம் ஆண்டில் இதுவரையில் 40 சத வீதமான வீழ்ச்சி நிலையைக் காட்டுகின்றது.

எனினும், விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள முடியாது. ஏனைய உற்பத்தித்துறைகள் குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும். அதற்காக உற்பத்தித்துறையின் உப பிரிவான கட்டுமானத்துறை கூடிய வளர்ச்சி பெற்றிருப்பதைக் கொண்டு, திருப்தியடைவதற்கும் முடியாது. இது, கட்டுமானத்துறையின் தேவைகள் கருதிய ஏற்றுமதி, இறக்குமதி நிலைமைகளைப் பொறுத்த வளர்ச்சியாகும்.

எனவே, பிரதான உற்பத்தித்துறைகள் தொடர்பிலான அவதானங்களே அதிகமாகத் தேவைப்படுகின்றன. அதே நேரம் பிறநாட்டு முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு ஈர்ப்புத்தன்மை, அதற்குரிய வசதிகள் மற்றும் சலுகைகள், சட்ட சிரமங்கள், கொள்கைத் தளர்த்தல்கள் போன்றவை அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாட்டுக்கு ஏற்ற வகையில் வகுக்கப்பட வேண்டும்

அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்ற வகையில், நிதி உதவிகளை, சலுகைகளை, மானியங்களை வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்க்க முடியாது. எமக்கான பொருளாதாரத்தினை எமது உற்பத்திகளின் மூலமாகவே – அவற்றின் ஏற்றுமதிகளின் மூலமே நாம் ஈட்டிக் கொள்ள வேண்டும்.

வடக்கின் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை –

நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களது வரவு – செலவுத் திட்டமானது நீலப் பசுமையாக இருந்தாலும், இதனை செயற்படுத்துகின்ற நிலையானது – தளமானது தற்போதைய நிலையில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

குறிப்பாக, கடற்றொழில் மற்றும் விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால், இதில் பாரியதொரு பங்களிப்பினை வடக்கு மாகாணத்தின் ஊடாக வழங்க முடியும். என்றாலும் அதற்குரிய வாய்ப்புகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதே எனது கேள்வியாகும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் முறையே இன்று வறுமை நிலைக்கு உட்பட்டுள்ள முதல் ஐந்து மாவட்டங்களாக இருக்கின்றன.
கடந்த கால யுத்தம் காரணமாக நேரடி பாதிப்புகளுக்கு அதிகளவில் உட்பட்ட மக்களாகவே வடக்கு – கிழக்கு மக்கள் உள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், இம் மக்களது மன வளத்திலும், பொருளதார வளத்திலும் விருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும், அவை முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

நுண்கடன்கள்;; எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது –

யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த திடீர் நுகர்வுத் தேவைகளின் காரணமாக வடக்கில் ஏற்பட்டிருந்த உடனடி வர்த்தகப் பொருளாதாரமானது, அதிகமான பொருட் களஞ்சியங்களை உருவாக்கியதன் காரணமாக, வடக்கின் வர்த்தகத்துறையானது அதிகளவு படுகடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான எமது மக்களின் பொருளாதார பலவீனத்தை இலக்காகக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் நுழைந்துள்ள ஏராளமான நிதி நிறுவனங்கள், நுண்கடன் என்ற போர்வையில் எமது மக்களை தற்கொலைகளை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

பிரமிட் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இன்னமும் எமது பகுதிகளில் எமது மக்களை சுரண்டி வருகின்றன.

இத்தகைய பல்வேறு வகையிலான பாதிப்புகளுக்கு உட்பட்டுவருகின்ற எமது மக்களைக் குறிவைத்தே அரசும் தனது ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதுதான் மிகவும் வேதனையாக இருக்கின்றது.

எமது பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமான பனை வள உற்பத்திகளையும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில், பனங் கள் இறக்குவதற்குத தடை என ஒரு வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய ஏற்பாடுகள் தெரிந்து கொண்டுதான் மேற்கொள் ளப்படுகின்றனவா? அல்லது, தெரியாத்தனமாக மேற்கொள்ளப்படு கின்றனவா? என்பதே எமக்குப் புரியாமல் இருக்கின்றது.

எமது மக்களின் வளங்களை விட்டுக் கொடுத்தால் வாழ்வாதார உதவிகள் என்பது எமது மக்களுக்கு தேவையற்றதொன்றே –

பொருளாதார பின்னடைவில் எமது மக்கள் இருக்கின்றார்கள் எனத் தெரிந்தே வாழ்வாதார உதவிகள் என அவ்வப்போது ஏதாவது உதவிகள் வழங்கப்படுகின்றன. எமது மக்களின் வளங்களை விட்டுக் கொடுத்தால் இத்தகைய உதவிகள் எமது மக்களுக்கத் தேவைப்படாது என்ற நிலை இருக்கும்போது, அதனை செய்யாமல், யானைப் பசிக்கு சோளப் பொறி போல் வழங்கப்படுகின்ற வாழ்வாதாரத் திட்டங்களில் இதுவரையில் எந்தத் திட்டம் முழுமையான பயன்களை எமது மக்களுக்கு வழங்கியிருக்கின்றது? என்பதை மீளாய்வுச் செய்து பார்க்க வேண்டும்.

காற்றடிக்கும் காலத்தில் மாவையும், மழை பெய்யும் காலத்தில் உப்பையும் விற்கப்போன கதை போல, காலகட்டங்கள் அறியாமல் வாழ்வாதார உதவிகளை வழங்கிவிட்டு, திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது.

மறு பக்கத்தில், வடக்கு மாகாண சபையின் மூலமாக தற்போதிருக்கின்ற ஏற்பாடுகளுக்கு அமைவாக எமது மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு போதிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்ற போதிலும், வடக்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற நிர்வாகம் காரணமாக அந்த வாய்ப்பும் எமது மக்களுக்கு கிட்டாமல் போயுள்ளது.

செயற்றிறனற்ற வடக்கு மாகாண சபையால் எமது மக்களின் தேவைப்பாடுகள் வீணடிக்கப்பட்டவிட்டன –

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினைக்கூட எமது மக்களின் நலன்கள் கருதிய செயற்திட்டங்களுக்கென செலவு செய்யப்படாமல், அந்த நிதியில் கணிசமானளவு திறைசேரிக்கே மீளத் திரும்புகின்ற நிலையே காணப்படுகின்றது. இதை நான் மட்டும் கூறவில்லை. கடந்த வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவரகளும் இந்தச் சபையில் வைத்துக் கூறியிருந்தார். மேலும் பலரும் கூறி வருகின்றார்கள்.

ஒதுக்கப்படுகின்ற நிதியின் பெருமளவு நிதியை வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் செலவு செய்யவேண்டும். அவ்வாறு இல்லையேல், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது தோற்றுவித்துவிடும். குறுகிய காலத்தில் பெரும் தொகை நிதி செலவு செய்யப்படவேண்டிய நிலையினைத் தோற்றுவித்துவிடும். முதல் ஐந்து மாதங்கள் தவிர்ந்த ஏனைய சில மாதங்கள் பருவப் பெயர்ச்சி மழையோடு கடந்துவிட்டால், கால அவகாசமானது குறுகிவிடும். இந்தக் குறுகிய காலத்தில் பெருந் தொகை நிதி செலவு செய்யப்படும் போது, முறைகேடுகளும், திட்டமிடப்படாத செலவீனங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே மக்களின் பணத்தை விரையம் செய்யும் நடவடிக்கையாகவே இது அமையும். இத்தகைய நிலையும், வடக்கு மாகாண சபையின் கடந்தகால அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிகள் குற்றச்சாட்டுகளுக்கு காரணமாகின என்றும் கருதலாம். மேலும் ஒதுக்கப்பட்ட நிதியில் வருடத்தின் ஏழாவது மாத்தில் 50 வீதமாக நிதி செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சினதும் வினைத்திறனை தெளிவாக கோடிட்டு காட்டுகின்ற வகையிலேயே அவற்றின் செயற்பாடுகள் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. உரிய காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு நிதியை செலவு செய்யாது வருட இறுதியில் நிதி திரும்பிவிடும். அவ்வாறு மீண்டும் திறைசேரிக்கு நிதி திரும்பினால் அது மக்கள் மத்தியில் தங்களுக்கு எதிரான கருத்தலைகளை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தினால் முறையற்ற விதத்தில் பொருட்களை கொள்வனவு செய்து நிதியை செலவு செய்வதனை வழக்கமாக்கி கொண்டுள்ள நிலையையும் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

மக்களின் வாழிடங்கள்;கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன –

மிக மோசமான யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான வடக்கு மக்கள் மிக அதிகளவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துகிடக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் இன்றும் மர நிழல்களில் கல்வி கற்று வருகின்றனர். வீதிகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படி வடக்கின் தேவைகள் நீண்டுகொண்டு செல்கின்றன. முழு வீச்சில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தாலும் கூட பல ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டால்தான் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நிலைமையே உள்ளது.

இத்தகைய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பெருமளவு நிதி செலவு செய்யப்படாது திறைச் சேரிக்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்ட போது பல மில்லியன்களை மாகாண சபை வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. எமது மக்கள் மிக மோசமான அடிப்படைத் தேவைகளின் குறைபாடுகளுடன் வாழ்ந்து வந்தும், எமது மக்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை.

2015 ஆம் ஆண்டும்; பெருமளவு நிதி திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்ட போது உடனடியாக அவற்றுக்கு கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

2014 ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு அறிக்கையின் படி 1028 திணைக்களங்களுக்கு 2162 விடயங்களுக்காக செலவு செய்யப்பட்ட பல மில்லியன்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவே தற்போது வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசினால் ஒதுக்கப்படுகின்ற நிதி தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆற்றலும், அக்கறையும், முயற்சிகளும் கொண்ட அரச அதிகாரிகள் பலர் இருந்தும், அக்கறையும், ஆளுமையும், முயற்சிகளுமற்ற அரசியல் தலைமைகளின் வினைத்திறனற்ற நிர்வாக வழிநடத்தல்களே இந்த நிலைக்குக் காரணமாகியுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

எனவே, இத்தகைய அரசியல்வாதிகளின் மக்கள் நலன் சாராத செயற்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற – ஏற்கனவே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்க்கை நிலையினை எமது மக்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடிய வகையில் கட்டியெழுப்புவதற்கு போராட வேண்டியதொரு சூழலிலேயே நாம் இருக்கின்றோம்.

ஊடகங்கள் சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயற்பட்டால் மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக அமையும் –

ஊடகத்துறை பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றபோது, நவீன ஊடகங்களின் வளர்ச்சியானது, நல்ல பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டாலும், அதனை முறைகேடாகப் பயன்படுத்துகின்ற சிலரது செயற்பாடுகள் காரணமான சமூகத்தில் பாரதூரமான விளைவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலைமைகளையும் காணுகின்றோம்.

குறிப்பாக, இனவாதத் தரப்பினர் சமூக வலைத்தளங்களை வெகு வன்மையாகவே பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், சமூகச் சீர்கேடுகளுக்குத் துணை போகின்ற செயற்பாடுகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துகின்ற நோக்கில் அரசு ஒரு சுயாதீனப் பேரவையை உருவாக்குவதாகக் கூறி வெளியிட்ட வரைபு தொடர்பிலும், ஊடக அமைப்புகளின் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ஊடகங்கள் பல, ஊடகத் தர்மத்தினை ஏற்று செயற்படுகின்ற நிலை இன்று அடியோடு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்கள், தாங்களும் இந்த சமூகத்தின் வழிகாட்டிகள் என்பதை உணர்ந்து செயற்படுகின்ற வரையில், இந்த நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம் என்றே தெரிய வருகின்றது.

அந்த வகையில் ஊடகங்கள் தங்களது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து செயற்பட்டால் அது எமது மக்களுக்கும், நாட்டுக்கும் மிகவும் பயனுள்ளதாகவே அமையும். ஊடகங்கள் பக்க சார்பற்ற வகையிலும் செயற்பட்டு, எமது மக்களுக்கு உடனுக்குடன் உண்மையான செய்திகளை வெளிப்படுத்தி, அம் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும்.

தகவல்களை சந்தைப்படுத்துவதன் ஊடாக, அதனது விற்பனைப் பெறுமதியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்படுகின்ற சில ஊடகங்கள், மக்களை அடிக்கடி ஒருவித பதற்றத்துடனும், குழப்பத்துடனும் வைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்ற ஊடகவியலாளர்களின் தேவைகள் தொடர்பிலான சில கோரிக்கைளை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

ஊடகவியலாளர்களுக்கு மடிக் கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் போன்ற சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது ஊடகவியலாளர்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, கடன் அடிப்படையில் அன்றி, வரிச் சலுகையுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு ஒரு விN~ட திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், லசந்த விக்கிரமதுங்ஹ மற்றும் பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களது கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போன்று, கொல்லப்பட்ட – குறிப்பாக, நடராஜா அறபுதராஜா, பால நடராஜா, நிமலநாதன், நடேசன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களது கொலைகள் தொடர்பிலும், படுகாயமடைந்த ஏனைய அனைத்து ஊடவியலாளர்கள் தொடர்பிலும், தாக்குதல்களுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும் –
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களுக்கென ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் – அந்த நிறுவனத்தில் தொழில் செய்கின்ற நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அல்லது இறக்க நேரிடும் ஊடகவியலாளர்களுக்கென்று எவ்வித கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்காத ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே, தனியார் ஊடக நிறுவனங்கள் என்ற போதிலும், ,வற்றில் பணி புரிகின்ற ஊடவியலாளர்களது நலன்களைப் பேணத்தக்க சில ஒழுங்கு விதிகளை இந்த நாட்டின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்க வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரச தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் தமிழ்ச் சேவைகளில் தேசிய கீதம் ஒலி – ஒளிபரப்பப்படும்போது, அதனைத் தமிழ் மொழியில் ஒலி – ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!…
ஜனநாயத்தின் நான்காவது தூணாக விளங்குவது ஊடகம் என்றே கூறப்படுகிறது. அந்த ஊடகத்துறையானது ஜனநாயகத்தை உறுதியாக தாங்கி நிற்க வேண்டும்.
மக்களாட்சி என்ற மகத்தான கொள்கையை இந்த நாடு கொண்டிருக்க வேண்டுமேயானால் ஊடகத் துறையானது, மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.
18 ஆம் நூற்றாண்டில் கடற்படையை யார் தம் வசம் வைத்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் இந்த உலகு சொந்தமாக இருந்தது என்றும்,…
19 ஆம் நூற்றாண்டில் விமானப்படையை யார் தம் வசம் வைத்திருந்தார்களோ அவர்களே உலகின் தீர்மானகரமான சக்திகளாக திகழ்ந்தனர் என்றும்,…
அறிவியல் நாகரீக உலகாக வளர்ந்து வந்த இருபதாம் நூற்றாண்டில் ஊடகத்துறையை எவர் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கே உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும் என்றும்,…
மாறி வந்த உலகத்தின் போக்கை உணர்ந்து ஊடகத்துறையின் முக்கியத்துவம் குறித்து உலக முன்னோர்களால் கூறப்பட்ட கருத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஊடகத்துறையால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திவிட முடியும் என்பதற்கு அப்பால்,…
அந்த ஊடகத்துறையை யாருக்காக?, எதற்காக பயன் படுத்த வேண்டும் என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்து நிற்கின்றது. ஊடகங்களை நடத்துவோர் அதை தமக்காக பயன்படுத்துவதா?..
அல்லது அதை ஒரு மக்கள் சமூகத்திற்காக பயன்படுத்துவதா? என்பதில் தெளிவு காணப்படுவது அவசியமாகும்.
ஊடகங்களை அழிவிற்காக பயன்படுத்தலாம், ஆக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பிரசார மந்திரியாக இருந்த கோயபல்ஸ் பாணியிலும் ஊடகத்துறையைப் பயன் படுத்தலாம்.
அது உலக மக்களின் அழிவிற்கு வழி வகுத்தது. திரும்பச் திரும்பச் சொல்லுகிறபோது, பொய்கூட உண்மையாகும் என்பதுதான் கோயபல்சினுடைய அடிப்படைத்தத்துவமாக இருந்தது.
அதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ் கட்சியால் நடத்தப்பட்டு,.. உலக விடுதலை போராட்டங்களுக்கு வழிதிறந்து விட்ட பிராவ்தா என்ற பத்திரிகையின் பாணியிலான ஊடகங்களே தேவை…
எமது மக்கள் நெருப்பின் மீது நடந்து வந்தவர்கள். சாம்பல் மேடுகளிலும் சாக்காடுகளிலும் வாழ்ந்து வந்தவர்கள். இழப்புக்களையும் அவலங்களையும் சந்தித்து வந்தவர்கள்.
இந்த இழப்புகளுக்கு ஈடாக எமது மக்கள் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்தலுக்குரிய அரசியலுரிமை சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.
அவ்வாறான ஒரு உரிமை வாழ்வை நோக்கி எமது மக்களை அழைத்து செல்லும் பாரிய பொறுப்பு ஊடங்களுக்கும் இருக்கின்றது என்று நம்பகின்றேன். ஊடகங்கள் சரியான திசையை மக்களுக்கு காட்ட வேண்டும்.
மக்களுக்கு மட்டுமன்றி அரசியல் கட்சி தலைமைகளுக்கும் ஊடகங்களே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
தென்னிலங்கையில் சிங்கள மக்களை உசுப்பேற்றும் வகையில் பேரினவாதம் பேசப்பட்டாலோ, அது போல் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களை உசுப்பேற்றும் குறுந்தேசிய இன வாதம் பேசப்பட்டாலோ அதற்கும் முக்கியத்துவம் வழங்குவதை விடவும் இனங்களின் ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் கருத்தில்கொண்டு ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்பதே நன்மையாக அமையும்.
இரு தரப்பிலும் இருந்து எழுகின்ற இன்வாதக்கருத்துக்களை ஊடகங்கள் கண்டிக்க முன் வரவேண்டும். ஒடுக்கும் பேரினவாதத்திற்கு எதிராகவே ஒடுக்கப்படும் மக்களின் தேசிய உணர்வு எங்கும் மேலோங்கத் தொடங்குகின்றது.
ஆனாலும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் தேசியம் என்பது என்றமே ஒரு முற்போக்கு தேசியவாதமாக இருக்க வேண்டும்.
நானும் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தில் பிரதான பங்கெடுத்தவன். அதற்காக ஒரு தேச விடுதலைக்கான போராட்ட இயக்கத்தையே வழிநடத்திச் சென்றவன்.
ஆனாலும் அன்றைய பேரினவாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னொரு பிற்போக்கு குறுந்தேசிய வாதத்தை வளர்த்துவிடுதற்கு நான் ஒரு போதும் துணை போனவன் அல்ல என்பதையும் கூறிவைக்கவிரும்புகின்றேன்.
அன்றைய ஆளும் கட்சிகளின் புறக்கணிப்பக்களையும், மாற்றாந்தாய் மனப்போக்குடனான அணுகுமுறைகளையுமே எதிர்த்து அன்று போராட்டக்களத்தில் நின்றவர்கள் நாம்.
மாறாக நாம் தமிழ் இனவாதம் பேசியவர்கள் அல்ல.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
இன்று நாம் கேட்பது தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வின் ஊடாக ஒரு சமத்துவமான வாழ்வையேயாகும்.
இது சிங்கள சகோதர மக்களுக்கு எதிரானது அல்ல. இந்த நாட்டின் இறமைக்கு எதிரானதும் அல்ல.
இந்த உண்மையை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள சகோதர மக்களின் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும் என்று நான் சகோதர வாஞ்சையோடு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
சிங்கள சகோதர மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றே இந்த நாட்டில் நடைமுறைக்கு வருவது சாத்தியம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே…..
என்று இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக சமத்துவத்துடன் வாழ்கின்றார்களோ அன்றே சிங்கள சகோதர மக்களும் இந்த நாட்டில் தமது சமூக பொருளாதார விடுதலையில் எழுச்சி காண முடியும்.
இதை உணர்ந்து சிங்கள சகோதர மக்கள் முதலில் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதை சிங்கள ஊடகங்கள் சிங்கள சகோதர மக்கள் மத்தியில் ஒரு சமூகக் கடமையாக முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அது போலவே தமிழ் ஊடகங்களுக்கும் அதே கடமையுண்டு,
அவலப்பட்ட மக்களின் துயர் கண்டு யார் துடிதுடித்து அந்த மக்களின் துயர் துடைக்க உழைக்கிறார்களோ அவர்களே மக்களின் நண்பர்கள்.
அதே அவலப்படும் மக்களின் துயரில் யார் தமது அரசியலை நடத்துகிரார்களோ அவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள்.
ஆகவே,.. எமது மக்களின் அவலங்களை அரசியலாக்கும் தமிழின விரோதிகளை கண்டிக்கவும்.
எமது மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண உழைக்கும் தமிழ் மக்களின் நண்பர்களை ஆதரிக்கவும்,.. தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்யும் என்று நம்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் நான் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்றேன்.
தமிழர் தரப்பில் யாருக்கும் இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் என்று உங்களில் சிலர் என்னிடம் கேள்வி எழுப்பலாம். அப்படி என்னிடம் கேட்டும் இருக்கிறார்கள்.
கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி ஊரெல்லாம் அலைவது போல்.
தமிழர் தரப்பில் ஒரு மாகாணசபையையும் பதின்நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு முடிந்தளவு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாமே என்று உங்களில் யாரும் கேள்வி எழுப்பலாம். அப்படி என்னிடம் சிலர் கேட்டும் இருக்கிறார்கள்.
இது யார் குற்றம்?.. வானம் ஏறி வைகுண்டம் போவோம், எமது மக்களின் காலடியில் நிலவையும், நட்சத்திரத்தையும் கொண்டுவந்து போடுவோம் என்றும், உரிமைகள் அனைத்தையும் அரசிடமிருந்து பறித்துவந்த உங்கள் முன்னால் கொட்டிப்படைப்போம் என்று,..
கூக்குரல் இட்டு மக்களை மயக்கி வாக்குக்களை அபகரித்து அதிகாரங்களில் ஏறி அமர்ந்திருக்கும் சுய லாப தமிழ் கட்சி தலைமைகளின் குற்றமா?…
அன்றி,.. யதார்த்த வழி நின்று உண்மையை மட்டும் கூறி பலத்த சவால்களுக்கும், தடைகளுக்கும் மத்தியிலும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்புரிமையை மட்டும் பெற்றுக்கொண்ட எனது குற்றமா?..
தேர்தல் காலத்தில் நாங்களும் பொய்களை கூறியிருக்கலாம்.
போலியான வாக்குறுதிகளை வழங்கியிருக்கலாம். அவர்களைப்போல் மக்களை மயக்கியிருக்கலாம்.. அதிகாரங்களை கைப்பற்றியிருக்கலாம்.
ஆனாலும் அதை நாம் விரும்பியிருக்கவில்லை.
எமது கைகளில் குறைந்த பட்ச அதிகாரங்கள் இருந்த போது கூட எமது மதி நுட்ப சிந்தனை வழி நின்று எவராலும் ஆற்ற முடியாத பணிகளை எமது மக்களுக்கு முடிந்தளவு ஆற்றியவர்கள் நாங்கள்.
நாம் ஆற்றிய பணிகள் யாவும் ஊர் பார்த்த உண்மைகள்.
அந்த உண்மைகளை மக்கள் ஒப்பிட்டு பார்த்து உணர்ந்துள்ளார்கள்.
இனிவரும் காலத்தில் தமிழ் பேசும் மக்கள் நல்ல தீர்பை இனி வழங்கியே தீர்வார்கள் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Related posts:

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட...
கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சு...
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...