உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

10.-1-300x229 Monday, October 9th, 2017

வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்டடிருந்த நிலையில், தற்போது 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், தம்மை மீண்டும் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இன்று (09.10.2017) காப்புறுதித் தொழில் ஒழங்குபடுத்தல் சட்டதிருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,உண்ணாவிரதப் போராட்;டத்தில் ஈடுபட்டுவரும் 3 கைதிகளும் தம்மை விசாரணைகளே இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அநுராதபுரத்தில் தமது வழக்கு நடைபெற்றால் தாம் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், வவுனியாவில் தமது வழக்கு நடைபெற்றால் தமது நியாயத்தை அல்லது சாட்சியத்தை தமிழ் மொழியில் முன்வைப்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க விருப்பத்தை எமது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி

கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்

எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபடுவோரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் தொழில் பாதிப்புக்களையும், தொழில் உபகரணங்கள் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைந்து வருகின்றன.

பல தடவைகள் இவ்விடயம் தொடர்பில் நான் இந்த சபையில் எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் அவர்கள் ஈடுபடுவதால் எமது கடல்வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று(09.10.2017) நாடாளுமன்றத்தில் காப்புறுதி தொழில் ஒழுங்குபடுத்தல் விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நேற்றைய தினமும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்களால், வடமராட்சிக் கடலில், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது தொழிலாளர்களின் வலைகள் உட்பட தொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தியதுடன், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி அவர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தொழில் செய்ய முடியாமலும், தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் எமது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு தொழில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். அதேவேளை தொடர்ந்தும் எல்லைதாண்டி வருவதையும், தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில் உபகரணங்களைப் பாவிப்பதையும் கட்டுப்படுத்த இராஜிய ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

காப்புறுதித் திட்டங்கள் விவசாயிகளுக்கு இருப்பது போல, கடற்தொழிலாளர்களுக்கும் தெங்கு, பனந்தொழில் வல்லுநர்களுக்கும் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது. அத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்குப் பாதுகாப்பாகவும் துரதிஸ்டவசமாக சடுதியான தொழில்சார் அனர்த்தங்களும் மரணங்களும் ஏற்படும்பொழுது இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அத்தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவியாக இருக்கும் என்று செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இன்று(09.10.2017) நாடாளுமன்றத்தில் காப்புறுதி தொழில் ஒழுங்குபடுத்தல் விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,அரசாங்கம் சுரக்~h மாணவர் காப்புறுதி திட்டத்தை உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் அங்குரார்ப்பணம் செய்தது வரவேற்கத்தக்கதாகும்.

‘தேசத்தின் பிள்ளைகளை நிதமும் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் சுரக்~h காப்புறுதித் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 11 ஆயிரத்து 242 அரசாங்கப் பாடசாலைகளில் கல்விபயிலும் ஏறத்தாள 45 இலட்சம் 5 வயது முதல் 19 வயதான மாணவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் இலவசக் கல்வித் திட்டத்தில் இன்னுமொரு மைல்கல்லாகும்.  இத்திட்டத்தின் ஊடாக 24 மணித்தியாலயமும் செயற்படும் காப்புறுதித் திட்டமாக அமைந்திருப்பதுடன், அரசாங்க வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு 30 நாட்கள் வரை தினமொன்றிற்கு 1000.00 வழங்கப்படவிருப்பது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

இருந்தபோதும் கவர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் நன்மைகளை பெற்றோர்கள் எவ்வாறு உரிய காலத்தில் பெற்றுக்கொள்வது என்பற்கான செயற்பாட்டுப் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு, இலகுவான வழிகாட்டல் பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே சுரக்~h காப்புறுதித் திட்டம் வெற்றிகரமாக அமையவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையவும் வேண்டுமாக இருந்தால் பாடசாலைகளில் காப்புறுதிக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்வதிலும், மருத்துவமனையில் உறுதிப்படுத்தல்களைச் செய்வதிலும் பெற்றோர் தேவையற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேர்ந்தால், மாணவர்களுக்கு காப்புறுதியின் பயன் கிடைக்காது.

இந்த நாட்டில் வரவேற்கத்தகுந்த பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், அந்தத் திட்டத்தைக் குறிக்கும் சந்தைப்படுத்தும் சொற்களானது உரிய தமிழ் வடிவத்தில் அரச ஆவணங்களில் குறிப்பிடப்படாத படியினால் தமிழ் பேசும் எமது மக்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. கடந்த காலத்தில் “திவிநெகும” எனும் சொல் முன்வைக்கப்பட்டபோது அதை தமிழில் “வாழ்வின் எழுச்சி” என்று தமிழ் மொழியில் மாற்றியமைக்கும் எமது முயற்சி அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்பொழுது நடைமுறையிலுள்ளமை தாங்கள் அனைவரும் அறிந்ததே.

இப்போது மாணவர்களுக்கான “சுரக்~h” அறிமுகப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் “சுரக்~h” என்பதன் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு தமிழ்பேசும் மக்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வசதியாக அந்தச் சொல் தமிழில் எவ்வாறு குறிப்பிடப்படுவது என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். சிலர் “சுரக்~h” என்பதற்கு “உயிர்காப்பு” என்று கூறுகின்றார்கள் அது சரிதானா? என்பதை சம்மந்தப்பட்ட அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

துரதி~;டவசமாக தற்போது நாட்டில் இருக்கும் காப்புறுதி நிறுவனங்களில் காப்புறுதி பெற்றுக்கொள்ளும் ஒருவர், தொடர்ந்து பணத்தை செலுத்த முடியாத நிலையேற்படும்போது, அதுவரை தன்னால் செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள எந்த வழிவகையும் உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமை அமைச்சர் அவர்களால் கவனத்தில் கொள்ளப்பட்டு மக்கள் செலுத்தும் பணத்திற்கு காப்புறுதி நிறுவனங்கள் உத்தரவாதமளிக்க தேவையான நவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதுடன்,

இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துங்கள்!

கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திருத்தச்  சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருக்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம். இருப்பினும் பெண்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை இன்னும் அதிகரித்து சமத்துவ நிலைக்கு கொண்டுவருவதோடு, இளைஞர், யுவதிகளுக்கு பிரதிநிதித்துவத்தின் வரம்பு துல்லியமாக சுட்டிக்காட்டப்படவில்லை என்பதையும், இளைஞர், யுவதிகளுக்கான தோதான விகிதாசார எண்ணிக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இன்று (09.10.2017) நாடாளுமன்றத்தில் மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,பெண்களைப்போல் இளைஞர்களும் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும்போதே ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் பலமடையும். அதுவே நாட்டின் சுபீட்சத்திற்கும், அர்த்தமுள்ள அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமையும்.

இவ்வேளையில் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள புதிய சபைகளை உருவாக்கியும், அவசியமான நகரசபைகளையும், பிரதேச சபைகளையும், தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக எமது மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளும் இச்சந்தர்ப்பத்தில்,வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரிய பகுதிகளாக இருக்கும் பிரதேசங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அவற்றை புதிய உள்ளுராட்சி மன்றங்களாக உருவாக்கித்தரவும் அமைச்சர் அவர்கள் நடலடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி


அமரர் அமிர்தலிங்கம் போன்றவர்களின் ஜனநாயக தலைமைத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டு அவர்களின் அமைதிவழிப் போ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 5 மார்ச் 2003 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந...
வாழ்வாதாரங்களுக்கும்,வலுவாதாரங்க ளுக்கும் கட்டாந்தரையிலிருந்தே முயற்சிக்க வேண்டிய நிலையில் எமது மக்க...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!