இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, January 10th, 2019

போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கiயில் –

பிற நாடுகளில் இடம்பெறுகின்ற குற்றவியல் கருமங்கள் சம்பந்தமாக ,லங்கையின் ஒத்துழைப்பினை அந்த நாடுகளுக்கு வழங்குவதற்கும், இதே வியடம் தொடர்பில் அந்தந்த நாடுகளின் ஒத்துழைப்பினை இலங்கை பெற்றுக் கொள்வதற்குமாக எனும் நோக்கத்திற்கு அமைவாக இந்த குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிய வருகின்றது.

கடந்த கிறிஸ்மஸ் – நத்தார் தினத்தை எடுத்துக் கொண்டால் – இயேசு கிறிஸ்துநாதர் பிறந்த தினமான அத் தினமானது ,ந்த நாட்டைப் பொறுத்தவரையில் தங்கல்லை, குடாவெரல்ல மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து நான்கு பேர் கொல்லப்பட்ட அதிகாலையுடன்தான் உதயமாகியிருந்தது.

அந்தவகையில், நாட்டின் தென்பகுதியிலே தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலை தொடர்பில் ஊடகங்களைப் பார்க்கின்றபோதும், அவை தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைகளின் அறிக்கைகளைப் பார்க்கின்றபோதும், இந்த மனிதப் படுகொலைகளில் பல கொலைகளுக்குப் பின்னால் பாதாள உலக கோஸ்ரியினர் இருப்பதாகவே தெரிய வருகின்றது.

அதிலும், வெளிநாட்டில் ,ருந்து ,லங்கையில் இயக்குகின்ற சில நபர்களது சகாக்களிடையே ,ந்த கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது. வெளிநாடுகளில் இருக்கின்ற அந்த நபர்கள் யார?; எனப் பார்த்தால், அவர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிய வருகின்றது.

இன்று, இந்த நாடு போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் கேந்திர நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, போதைப் பொருளானது இந்த நாட்டுக்குள் பரவலாக  – கிராமமயப் படுத்தல் முதற்கொண்டு பயன்படுத்தலுக்கான நுகர்வோரை அதிகளவில் கொண்டு, மேலும் பரவலாக்கப்பட்டு வருகின்றது. இதற்கென மிக அதிகளிவில் இளம் சிறு பிராயத்தினர் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரம், இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கை என்பது இலங்கையை ஒரு மீள் ஏற்றுமதி நாடாகவும் மாற்றியிருக்கின்றது. இதை ஏன் தடுக்கமுடியாதிருக்கின்றது.

வடக்கு மகாணத்தில் கடந்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்வரப்பட்டதன் பின்னர், வடக்கிலே ஒரு கைத்தொழில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அது நடந்திருந்தால், இன்று வடக்கு மாகாண மக்கள் இந்தளவிற்கு பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலைக்கு வந்திருக்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

ஆனால், வடக்கில் அது நடைபெற்றிருக்கவில்லை. மாறாக அதீத வர்த்தகப் பொருளதாரமே உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக ,ன்று எமது மக்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு வந்துள்ள அதேவேளை, எமது பகுதியானது போதைப் பொருள் மற்றும் கேரளா கஞ்சா வர்த்தகத்திற்கும், கடத்தலுக்கும் ஒரு முக்கிய ,டமாக மாறிவிட்டுள்ளது. இதன் காரணமாகவும் அப்பகுதி மிகுந்த பாதிப்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்துள்ள மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கையினைப் பார்க்கின்றபோது

2008ல்  1375 ஆகவும், 2009ல் 901 ஆகவும், 2010ல் 741 ஆகவும், 2011ல் 724 ஆகவும், 2012ல் 646 ஆகவும், 2013ல் 586 ஆகவும், 2014ல் 548 ஆகவும், 2015ல் 476 ஆகவும், 2016ல் 502 ஆகவும், 2017ல் 467 ஆகவும், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையில் 214 ஆகவும் ,ருந்துள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ஒரு செய்திக் குறிப்பிலிருந்து தெரிய வருகின்றன.

மொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் 7183 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ,வை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6431 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்ததாக மேலும் இந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

,தனைப் பார்க்கின்றபோது 6431 கொலைகள் தொடர்பில் 6431 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு கொலை தொடர்பில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் என்ற வகையிலும் 6431 பேர் 6431 கொலைகளிலும் குறைந்த எண்ணிக்கையான கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

ஆக, மொத்தமாக கடந்த பத்து ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற 7183 கொலைகள் தொடர்பில் – அதாவது அனைத்து கொலைகள் தொடர்பிலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் பெரும்பாலாக 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் என நாம் கூறுகின்றபோது, ‘தமிழ் அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் ஒருவருமில்லை. கொலைக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர’; என நீங்கள் கூறுகின்றீர்கள்.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மொத்தமாக ,ந்த நாட்டில் 2279 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவே பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கூற்றினை முன்வைத்து அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

ஆக, இந்த 2279 மனிதப் படுகொலைகளில் ,துவரையில் எவ்விதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாத தமிழ் அரசியல் கைதிகள் எந்தக் கொலையினை செய்தார்கள் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்த முடியாமல் இருப்பது ஏன்? எனக் கேட்க விரும்புகின்றேன். சில நேரம் 2008க்கு முன்னர் செய்திருக்கிறார்கள் என நீங்கள் கூறினாலும், அது பற்றியும் பகிரங்கப்படுத்த இயலாதிருப்பது ஏன்? என்றே கேட்க விரும்புகின்றேன்

பொலிஸாரினால் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதையும் நான் மீண்டும் இந்தச் சபையிலே கேட்டுக் கொள்கின்றேன்

பயங்கரவத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச தரத்தினாலான சட்டம் கொண்டு வருப்படும் எனக் கூறப்பட்டது. இதுவரையில் அது பற்றி எந்தப் பேச்சுமே ,ல்லை.

அதே நேரம், கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றிருப்பதாக 7183 கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும், இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை ,தில் இல்லை.

கடந்த காலங்களில் விடுதலையின் பெயரால் நடந்திருந்த கொலைகளை நியாயப்படுத்தியும், மூடி மறைத்தும், திசை திருப்பியும், பயத்தால் மௌனித்தும் வந்துள்ள சக தமிழ் அரசியல்வாதிகளும் இங்கு நடந்து முடிந்த எமது மக்களின் அனைத்துக் கொலைகளுக்கும் பங்காளிகளாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொலைகளால் எதனையும் சாதித்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்ற எம்மீதும் கொலைப் பழிகள் சுமத்தப்பட்டிருந்தன. இன்று, அந்தப வீண் பழிகளிலிருந்து காலம் எங்களை விடுவித்து வருகின்றது.

வேறொருவரின் தவறான செயல், செய்யாமை, கவனயீனம் அல்லது தவறுகை ஒன்றினால் விளைவிக்கப்பட்ட ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்காக ஏற்பாடு செய்வதற்கும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்’ பற்றி இங்கு விவாதிக்கப்படுகின்ற ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டத்தில் கூறப்படுகின்றது.

இந்த சட்டத்தில் மேற்குறிப்பிட்ட காரணங்களால் கொல்லப்படுகின்ற ஒருவர் தொடர்பில் வழக்கு ஒன்றினை பேணப்படுவோர் தொடர்பில் பெற்றோரில் ஒருவர், அல்லது கூட்டாகப் பெற்றோர், பிள்ளை அல்லது கூட்டாகப் பிள்ளைகள், உடன் பிறந்தோர் அல்லது கூட்டாக உடன் பிறந்தோர்கள், பாட்டன் அல்லது பாட்டி அல்லது கூட்டாகப் பாட்டன் மற்றும் பாட்டி அல்லது பாதுகாவலர் தான் ஒருவரது கொலை தொடர்பில் வழக்கு தொடரலாம் – பேணலாம் எனக் கூறப்படுகின்றது. இந்தவகையில் இதில் கணவன் அல்லது மனைவி பற்றி குறிப்பிடப்படாதது ஏனோ தெரியவில்லை.

கூட்டு மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. நேற்றும்கூட நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணம், மண்;டதீவு கிணறுகள் பற்றி பேசப்பட்டது. மன்னார் கூட்டு மனிதப் புதைகுழி தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் எடுத்து, அது தொடர்பில் ஆய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். விடயம் தெரியாத சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர்.

செம்மணி புதைகுழி தோண்டப்பட்டு, அது தொடர்பில் நீதி விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு எம்மால் நடவடிக்கைகளை எடுத்திருக்க முடிந்திருந்தது. அதற்கான அரசியல் பலம் போதியளவு எங்களிடம் இருந்திருந்தது. இன்று அந்தளவிற்கான அரசியல் பலம் எங்களிடம் இல்லை. அந்த அரசியல் பலத்தினை எமது மக்களிடம் இருந்து பறித்து வைத்துக் கொண்டு, இன்று எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சியாக செயற்படுகின்ற தமிழ்த் தரப்பினர் ,ந்த விடயங்களை இன்றல்ல எப்போதோ முன்னெடுத்திருக்க வேண்டும்.

இதுவரையில் மன்னார் கூட்டு மனிதப் புதைகுழியிலிருந்து சுமார் 282க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், இவை மன்னார் நீதிமன்ற வளாகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரி வருகின்றன. இப்படியே இவை தொடர்ந்து களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தால், அவை பழுதடைந்துவிடக்கூடும்.

இவையிடையே பெண்களினதும், 14 சிறுவர்களினதும் என இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகளும் அடங்குகின்றன என்றும் மேலும், எலும்புக்கூடுகள் – மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இதுவரையில் புதைகுழியின் முடிவு – எல்லை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருவதாகவும் தெவிக்கப்படுகின்றது

இந்த மனிதப் புதைகுழியிருந்து தோண்டியெடுக்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகளின் காலகட்டம் தொடர்பில் கண்டறிவதற்கென  பிளொரிடா பீடா கனலிடித் இரசாயண கூடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி மனித எச்சங்களில் குறிப்பிட்டளவு (சாம்பல்) அனுப்பி காபன் டேரின் ஆய்வு மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்திருந்தது. எனினும், தற்போதைய நிலையில் இவ்விடயம் தொடர்பில் நம்பிக்கையான தகவல்கள் எதுவும் வெளிவருவதாக இல்லை.

இதனிடையே, இங்கு தோண்டி எடுக்கப்படுகின்ற மனித எச்சங்கள் எந்தக் காலத்திற்குரியவை என்பது குறித்து இங்கு மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் மூலமாகத் தங்களுக்கே ஒரு முடிவுக்கு வர முடியுமென மேற்படி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிபணர்கள் சிலர் தெரிவித்திருந்ததாகவும், தேவை எனில், காபன் டேரின் ஆய்வின் மூலமாக அதனை மேலதிகமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியுமெனவும் அவரகள்; மேலும் தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தன.

எனவே, ,துவும் ஒரு கண்காட்சியாகி விடாமல் மன்னார் கூட்டு மனிதப் புதைகுழி தொடர்பிலான முன்னேற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும் என்றும், அவர்களின் மரணங்கள் பற்றி ஆராயப்பட்டு, குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அவை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

Related posts: