90 யானைகளின் சடலங்கள் மீட்பு!

பொட்சுவானாவில் உள்ள வனம் ஒன்றில் 90க்கும் அதிகமான யானைகள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிகமான யானைகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் அங்கு யானைகள், தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்ற நிலைமையும் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை சில வாரங்களுக்கு முன்னர் தந்தங்களுக்காக கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வனத்தில் ஐந்து வெள்ளை காண்டாமிருகங்களும் அவற்றின் கொம்புகளுக்காக கொல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யானைகள் பராமரிப்பு அமைப்புகள் கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றன.
Related posts:
ஐ.எஸ் அமைப்பிற்கு 6 இளம்பெண்கள் உட்பட 21 பேர் இணைப்பு!- ஒருவர் கைது!!
ஜனாதிபதி அலுவலக முக்கிய அதிகாரிகள் சிலர் அதிரடி மாற்றம்!
சீன இறக்குமதி பொருட்களுக்கான 25% கூடுதல் வரி அமுலில்!
|
|