75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ !

Thursday, July 21st, 2016
துபாயில் 75 மாடிகுடியிருப்ப கட்டிடம் ஒன்றில்தீ விபத்து எற்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கட்டிடத்தில் தீப்பிழம்புகளும் புகையும் அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த விபத்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: