7,000 பணி இடங்களை குறைப்பதற்கு பிரபல டச்சு வங்கி முடிவு!

Tuesday, October 4th, 2016

ஐ.என்.ஜி என்ற டச்சு வங்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 7,000 பணி இடங்களை குறைக்கப் போவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

நெதர்லேண்ட்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் பெரும்பாலான பணி இடங்கள் குறைக்கப்பட உள்ளன.இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களை சேமிக்க உள்ளதாக அந்த வங்கி எதிர்பார்க்கிறது.

அதிகரித்து வரும் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்தும் விதமாக புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ஜெர்மனியின் இரண்டாவது பெரிய வங்கியான கொம்மெர்ஸ் வங்கி, சுமார் 10 ஆயிரம் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

_91507542_8cba7a15-2e21-4479-b8eb-d420240f18b9