700 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் சிலை!

Sunday, February 5th, 2017

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை ஒத்த 700 ஆண்டு பழமையான மனித முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் வேல்ஸ் வெஸ்மினிஸ்டர் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெஸ்மினிஸ்டர் தேவாலயத்தில் எதிர்காலத்தை எதிர்வுகூறும் பழமையான அடையாளங்கள் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில், டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை ஒத்த சிலையானது அவர் சம்பந்தமான எதிர்வுகூறலை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

குறித்த தேவாலயத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவர் முதலில் அந்த சிலையை கண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் இது குறித்து தொல் பொருள் ஆய்வாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

சிலை இருக்கும் இடத்திற்கு சென்றவர்கள் 700 ஆண்டுகள் பழமையான இந்த முகத்தை கண்டு பயந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை ஒத்த வகையில் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையானது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஏதேனும் அழிவை 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்கூட்டியே தெரியப்படுத்தியதாக எதிர்வுகூறலாக இருக்குமா என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

சிலையின் தோற்றமானது கடும் கோபம் மற்றும் பகையை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

எவ்வாறாயின் இந்த சிலை தொடர்பாக பிரித்தானிய தொல் பொருள் ஆய்வாளர்கள் தொடர்ந்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

20084344

Related posts: