7 அகதிகள் ஜேர்மனியில் கைது!

Thursday, December 29th, 2016

நத்தார் தினத்தன்று வீடில்லாத நபர் ஒருவரை தீ வைத்து கொலை செய்த அகதிகள் 7 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த நபர் ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் குறித்து கண்காணிப்பு கெமராவில் பதிவாகயிருந்த காட்சிகளை பொலிஸார் வெளியிட்டதனை தொடர்ந்து குறித்த ஏழு பேரும் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தாக்குதலுக்கு இலக்கான நபர் எவ்வித பாதிப்புகளுக்கும் ஆளாகமல் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஜேர்மனியில் வீடற்ற மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், குறித்த தாக்குதல்களின் பின்னணியில் தீவிர வலது சாரி செயற்பாட்டாளர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Germany-680x365

Related posts: