68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா தெரிவு!

Tuesday, December 11th, 2018

68 ஆவது உலக அழகியாக மெக்சிகோவின் வனேசா போன்ஸ் டி லியோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் சான்யா நகரில் 68 ஆவது உலக அழகி பட்டத்திற்கான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் 2018 ஆம் ஆண்டின் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனேசாவுக்கு உலக அழகி கிரீடத்தை சூட்டினார். வனேசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்து தற்போது மொடலாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: