60 ஆவது பிறந்தநாளில் 60,000 கோடி ரூபா நன்கொடை அறிவித்த கௌதம் அதானி!

Sunday, June 26th, 2022

ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கௌதம் அதானி தனது 60 ஆவது பிறந்தநாளில் சமூக நலத் திட்டங்களுக்காக 60,000 கோடி இந்திய ரூபா நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த தொகை அதானி அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என அதானி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் இவ்வளவு அதிகமான தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல் தலைமுறை தொழில்முனைவோரான கௌதம் அதானி தனது 60 ஆவது பிறந்த நாளை நேற்று (24) கொண்டாடினார்.

Related posts: