6 இலங்கையர்களுக்கு குவைத்தில் மரண தண்டனை விதிப்பு!

Monday, February 20th, 2017

குவைத்தில் 6 இலங்கையர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் நந்தீபன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரும் போதைப் பொருள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதித்தால் மரண தண்டனையிலிருந்து விடுபட முடியும். ஆனால் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வாறு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்க முடியாது.

இதற்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டார். அவர் இலங்கை தூதரகத்தின் உதவியுடன் நட்ட ஈட்டை வழங்கி தண்டனையிலிருந்து விடுபட்டார்.

எவ்வாறெனினும் குவைத் அரசாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக மரண தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் தொடக்கம் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்தில் குவைத் அரச குடும்பத்தில் 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

zEiZgYz

Related posts: