5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை – பாகிஸ்தான்.!  

Monday, August 21st, 2017

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 298 இந்தியர்களுக்கு தமது நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு ஒன்றுக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அதில், கடந்த 2012 ஆம் ஆண்டு 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2013ல் 75 பேருக்கும், 2014ல் 76 பேருக்கும், 2015ல் 15 பேருக்கும், 2016ல் 69 பேருக்கும், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை 15 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் மிக கடினமானது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்கே குடியேறுகின்றனர் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: