3ஆம் உலகப் போரை உருவாக்குபவர்கள் இவர்களா? –  காரணம் சொல்லும் டிரம்ப்!

Tuesday, July 24th, 2018

நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான மாண்டிநெக்ரோதான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

குரேஷியா, செர்பியா, அல்பேனியா என்று மூன்று குட்டி நாடுகளுக்கு இடையில் இருக்கும் குட்டி நாடுதான் மாண்டிநெக்ரோ. இதில் வெறும் 6 லட்சம் மக்கள்தான் இருக்கிறார்கள்.

இந்த குட்டி கடல் அருகே இருக்கும் நாடுதான், உலகப் போரை ஆரம்பிக்கும், என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதற்கு அவர் காரணமும் சொல்கிறார்.

நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் இருக்கிறது. இதன் விதிப்படி, இந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்ற எல்லா நாடுகளும் சேர்ந்து எதிர் நாடுகள் மீது போர் தொடுக்க செல்லும். ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற எல்லா நாடுகளும் அதற்கு ஆதரவாக சென்று போர் தொடுக்கும். இதனால் நேட்டோ மிகவும் வலுவான குழுவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலயில் இந்த குழுவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மாண்டிநெக்ரோ என்ற குட்டி நாடு இணைந்தது. அந்த குழுவில் இந்த நாடு 29வது நாடாக இணைந்தது. இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் லட்சம் மட்டுமே. இதில் வெறும் 2000 ராணுவ வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நேட்டோவில் இதுதான் மிகவும் சிறிய நாடாகும்.

இந்த நேட்டோ படை குறித்து கேள்விக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ”நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற எல்லா நாடுகளும் சண்டைக்கு செல்லும். இதனால் அந்த குழுவில் ஒரு சின்ன நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற

மேலும், நேட்டோவில் இருப்பதிலேயே மிகவும் மூர்க்கமான நாடு, மாண்டிநெக்ரோதான். அதில் குறைவான மக்கள் இருந்தாலும், எல்லோரும் மிகவும் மூர்க்கமாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் உருவாக்கி காரணமாக இருக்கலாம். அந்தநாடு மூன்றாம் உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ளது

Related posts: