263 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Wednesday, March 27th, 2019

மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டிருப்பதாக யாரோ மிரட்டல் விடுத்தமையால் சாங்கி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

263 பயணிகளுடன் மும்பையிலிருந்து ஒரு விமானம் சிங்கப்பூர் சென்றது. அப்போது குறித்த விமானத்தை இயக்கிய விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்தது.

இதனையடுத்து சங்கை விமானம் நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்தது.

ஆயினும் விமானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணம் மேற்கொண்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர்.

Related posts: